Author: admin

பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள கும்பர்பேட்டையை சேர்ந்தவர் முனீர் கான் குரேஷி (36). கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூ டியூப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”பஹல்காம் தாக்குதலானது மத்தியில் ஆளும் பாஜக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். பிஹார் ச‌ட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தீவிரவாதிகள் எப்படி எளிதாக தப்பிக்க முடியும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜக இளைஞர் அணியினர் போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கல்பேட்டை போலீஸார் தாமாக முன்வந்து முனீர் கான் குரேஷி மீது 2 பிரிவுகளில்…

Read More

சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், காஸ்கோ இந்தியா பிரைவெட் லிமிட்டெட் ஆதரவுடன் நடத்தப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் துளசி ரெட்டி, எஸ்டிஏடி மேலாளர் மகேஷ்வரி, சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகத் துணைத் தலைவர் பி.ஜெகதீசன், துணைத் தலைவர் ஏ.தினகர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும்…

Read More

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் கைப்பிடியில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்தவர் சதீஷ் (35) என்பவர் சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறைக்காக கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு நேற்று வந்தார். குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பிக்கப் பாயிண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு உடமைகளை டிராலியில் வைத்து தள்ளி கொண்டு சென்றார். கார் அருகே டிராலியை நிறுத்தி டிராவல் பேக்கை எடுத்து காரில் வைக்க சதீஷ் முயன்றபோது, பேக்கின் கைப்பிடியில் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சக பயணிகள் பாம்பு என்று கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்த போலீசார், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.…

Read More

ஹைதராபாத்: ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகத்தின் ஆணையராக ஜீவன் லால் லவாடியா பணியாற்றி வருகிறார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திடம் இருந்து இவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும பிரதிநிதி ஒருவர் மும்பையில் இடைத்தரகரிடம் ரூ.70 லட்சத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும துணை பொது மேலாளர் விரால் காந்திலால் மேத்தாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதராபாத்தில் பணியாற்றும் வருமான வரித் துறை ஆணையருக்காக லஞ்ச பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து ஜீவன் லால் லவாடியா, ஹைதராத்தில்…

Read More

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட்…

Read More

சென்னை: பாகிஸ்​தானில் தீவிர​வா​தி​கள் முகாம்​களை துவம்​சம் செய்த இந்​திய ராணுவத்​துக்கு மனமார்ந்த பாராட்​டு​கள் என்று நடிகர் ரஜினி​காந்த் தெரி​வித்​தார். தீவிர​வாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் செயல்​பட்ட இந்​திய அரசுக்கு பாராட்​டு​கள் என்று தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார். இந்​தியா – பாகிஸ்​தான் இடையே நடை​பெற்று வந்த தாக்​குதல் சம்​பவம், போர்​நிறுத்​தம் ஒப்​பந்​தத்தை தொடர்ந்து நேற்று முன்​தினம் முடிவுக்கு வந்​தது. இருப்​பினும் எல்​லைப்​பகு​தி​களில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இந்​திய எல்​லைப்​பகு​தி​களில் ராணுவத்​தினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்​திய ராணுவத்தை நடிகர் ரஜினி​காந்த் பாராட்​டி​யுள்​ளார். கேரளா​வுக்கு படப்​பிடிப்​புக்கு செல்​வதற்​காக சென்னை விமான நிலை​யத்​துக்கு நடிகர் ரஜினி​காந்த் நேற்று வந்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “பாகிஸ்​தானில் தீவிர​வா​தி​கள் முகாம்​களை இந்​திய ராணுவத்​தினர் துவம்​சம் செய்​துள்​ளனர். அவர்​களுக்கு எனது மனமார்ந்த பாராட்​டுக்​கள். இந்த போரை திறமை​யாக, வலிமை​யாக, வீரி​யத்​துடன் கையாண்ட பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா,…

Read More

குழந்தைகள் சிறிய கடற்பாசிகள் போன்றவர்கள் they அவர்கள் பார்க்கும், கேட்கும், உருட்டும் அனைத்தையும் தூக்கி எறிந்தனர். குப்பை உணவு விளம்பரங்களுக்கு வரும்போது? ஓ பையன், அவர்கள் அதையும் உறிஞ்சுகிறார்கள் – மற்றும் வேகமான. ஒரு புதிய ஆய்வு ஏற்கனவே பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிந்ததை உறுதிப்படுத்தியது: குழந்தைகளை அதிகமாக சாப்பிடுவதற்கு ஐந்து நிமிட குப்பை உணவு விளம்பரம் ஆகும்.இங்கே உதைப்பவர் – விளம்பரம் உண்மையான உணவைக் காட்டினால் கூட அது ஒரு பொருட்டல்ல.உடல் பருமன் குறித்த ஐரோப்பிய காங்கிரஸின் ஆராய்ச்சியாளர்கள், பிராண்ட் மட்டும் விளம்பரங்கள் கூட (லோகோக்கள், ஜிங்கிள்ஸ் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் என்று நினைக்கிறேன்) ஒரு நாளைக்கு 130 கலோரிகளை கூடுதலாக உட்கொள்ள குழந்தைகளைத் தள்ளக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. இது ஒரு கூடுதல் சாக்லேட் பட்டி, மிருதுவான பை அல்லது ஒரு சில குக்கீகள் -ஒவ்வொரு நாளும் -இரண்டு விளம்பரங்களைப் பார்ப்பதிலிருந்து. அது ஒரு பெரிய ஒப்பந்தமாகத் தெரியவில்லை, ஆனால் அந்த…

Read More

புதுடெல்லி: பிஹாரின் பக்​ஸர் மாவட்​டம் நந்​தன் கிராமத்​தைச் சேர்ந்த சிப்​பா​யான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வரு​கிறார். அவர் தனது திரு​மணத்​திற்​காக விடுப்பு எடுத்​துக் கொண்டு பக்​ஸர் வந்​திருந்​தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்​தது. இதனிடையே, பஹல்​காம் தாக்​குதலுக்கு பின் எல்​லை​யில் பாகிஸ்​தானுடன் போர் தொடங்கி விட்​டது. இதனால், இந்​திய ராணுவம் தனது வீரர்​களின் விடுப்பை ரத்து செய்​து, உடனடி​யாக பணிக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தி​யது. இதை ஏற்று திரு​மண​மான மறு​நாளி​லேயே பணிக்கு கிளம்பி விட்​டார் தியாகி யாதவ். அவரது பெற்​றோரும் தாய்​நாட்​டிற்கு சேவை செய்​வது முக்​கி​யம் எனக் கூறி அனுப்பி வைத்​துள்​ளனர். புது மனை​வி​யான பிரியா யாத​வும் தன் கணவர் தியாகி யாதவை பெரு​மிதத்​துடன் வழியனுப்பி வைத்​துள்​ளார். இந்த நெகிழ்​வான சம்​பவம் வட மாநிலங்​களின் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. இதில் பிரியா யாதவ் கூறும்​போது, ‘எனது கணவர், தாய்​நாட்​டின் மேல் பாச​மும் பற்​றும் நிறைந்​தவர். உறு​தி​யான எண்​ணம்…

Read More

கொழும்பு: மூன்று நாடு​களுக்கு இடையி​லான கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின. கொழும்​பிலுள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 101 பந்​துகளில் 116 ரன்​கள் குவித்​தார். பிர​திகா ராவல் 30, ஹர்​லீன் தியோல் 47, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்​கள் சேர்த்​தனர். பின்​னர் 343 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்​களில் 245 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.…

Read More

மதுரை: மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் முத்​திரை பதிக்​கும் விழா​வான வைகை ஆற்​றில் கள்​ளழகர் இறங்கி எழுந்​தருளும் வைபவம் இன்று காலை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். இதனால், மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் தோளுக்​கினி​யானில் எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாளான நேற்று முன்​தினம் காலை​யில் தோளுக்​கினி​யானில் சுந்​தர​ராஜபெரு​மாள்திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர் கண்​டாங்கி பட்டு உடுத்​தி,நெற்​றிப்​பட்​டை, கரங்​களில்வளைத்​தடி, நேரிக்​கம்பு பரி​வாரங்​களடன் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க கள்​ளழகர் திருக்​கோலத்​தில் தங்​கப்பல்​லக்​கில் மதுரைக்​குப் புறப்​பட்​டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்​டாம்​படி கருப்​பண​சாமி சந்​நி​தி​யில் தீபா​ராதனை நடந்​தது. அன்றிரவு பொய்​கைக்​கரைப்​பட்​டி, கள்​ளந்​திரி பகு​தி​யிலுள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி அப்​பன்​திருப்​பதி ஜமீன்​தார் மண்​டபத்​தில் தங்​கி​னார். அதி​காலை ஒரு மணி​யள​வில் சுந்​தர​ராஜன்​பட்டி மறவர் மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர் கடச்​சனேந்​தல் வழி​யாக மதுரை மாநகர எல்​லை​யான…

Read More