Author: admin

தமிழகத்தில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதால் காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காவலர்களுக்கு முறையாக விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக காவலர்கள் பொதுமக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் உருவாகி வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு காவல் துறையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரையிலானவர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பாக 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே காவலர்கள் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதி பட்டு தேவானந்த்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த மார்ச் 13-ம் தேதி 64,960, மார்ச் 31-ம் தேதி ரூ.67,600, ஏப்ரல் 1-ம் தேதி ரூ.68,080 என உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.70,160 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, 2 நாட்களுக்கு தங்கம்…

Read More

புதுடெல்லி: கனடாவில் மூடப்பட்டிருந்த இந்திய மாணவரின் குடும்பத்தினர் அவரது உடலைத் திரும்பப் பெற மையம் மற்றும் பஞ்சாப் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர். 21 வயது ஹர்சிம்ரத் கவுர் ரந்தாவா ஒன்ராறியோவின் ஹாமில்டனில் உள்ள மொஹாக் கல்லூரியில் மாணவராக இருந்தார். வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது தவறான தோட்டாவால் தாக்கப்பட்ட பின்னர் அவள் உயிரை இழந்தாள். கடந்து செல்லும் வாகனத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.”நாங்கள் நேற்று எங்கள் உறவினர்களிடமிருந்து தெரிந்து கொண்டோம். அவள் சாலையில் நின்று கொண்டிருந்தாள், பின்னர் ஒரு புல்லட் அவளைத் தாக்கியது” என்று அவரது தாத்தா சுக்விந்தர் சிங் கூறினார்.தி டொராண்டோவில் இந்தியாவின் தூதரகம் மரணத்தின் மீது இரங்கல் தெரிவித்ததோடு, வெள்ளிக்கிழமை, “ஒன்ராறியோவின் ஹாமில்டனில் உள்ள இந்திய மாணவர் ஹர்சிம்ரத் ரந்தாவாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்” என்று கூறினார்.”உள்ளூர் போலீசாரின்படி, அவர் ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டவர், இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…

Read More

பஹல்காம் தாக்குதலை கண்டித்து டெல்லியில் நேற்று சந்தைகள் மூடப்படிருந்தன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் வர்த்தகர்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கான் மார்க்கெட் வியாபாரிகள் பேரணி நடத்தினர், இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றினர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாஜக யுவ மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் மாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் பங்கேற்று பேசுகையில், “அனைத்து வகையிலும் தீவிரவாதத்தை ஒழிக்க அரசு உறுதியுடன் உள்ளது” என்றார். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில், அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நகரில் கண்டனப் பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற மாணவி ஒருவர் கூறுகையில், “இந்த கொடூரமான செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.…

Read More

சென்னை: இன்றைய இணைய உலகில் மில்லியன் கணக்கான டிஜிட்டல் சாதன பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை கூகுள் தளத்தில் நினைத்த நேரத்தில் தேடி (Search) தெரிந்து கொள்கின்றனர். உலக அளவில் நாளொன்றுக்கு இந்தத் தேடலின் எண்ணிக்கை பில்லியனை கடப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2024-ம் ஆண்டில் இந்தியாவில் பயனர்கள் அதிகம் தேடிய விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல், ஒலிம்பிக், டி20 உலகக் கோப்பை என விளையாட்டு களமும், ஸ்திரீ 2 முதல் மகாராஜா வரை என திரைப்படங்கள் குறித்தும், எப்படி வாக்களிப்பது, காற்றின் தரம் போன்றவையும், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்தும், வினேஷ் போகத், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் குறித்தும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ளது. 2024-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பட்டியல்: ஐபிஎல் டி20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக் அதீத வெப்பம் ரத்தன்…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: “நடப்பு கல்வியாண்டின் (2024-25) முடிவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இறுதி மதிப்பீடு (Endline Survey) தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் மூலமாக நடத்த வேண்டும். அதன்மூலம் இந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்து பயிற்சி நூல்களை வரும் கல்வியாண்டில் (2025-26) அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி இறுதி மதிப்பீட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடவாரியான கேள்விகள் மற்றும் மாணவர்களின் பதில்களை குறிப்பதற்கான படிவங்களையே பயன்படுத்த வேண்டும். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி…

Read More

கொல்கத்தா: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மோதவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வழங்கி வெற்றி தேடித் தந்தனர். சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர், ஷெர்பான் ருதர்போர்ட், ராகுல் டெவாட்டியா, ஷாருக் கான் ஆகியோர் இந்த ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை, சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும். அதேபோல் பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், இஷாந்த் சர்மா ஆகியோர் எதிரணிக்கு சவால் விடுபவர்களாக உள்ளனர். அதேநேரத்தில் கொல்கத்தா அணி, 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஃப்ளோரிடாவில் கோல்ஃப் விளையாடிவிட்டு வாஷிங்டன்னுக்கு திரும்பிய ட்ரம்ப் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: உலக நாடுகளால் நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம். முன்பிருந்து முட்டாள்தனமான தலைமை அதை அனுமதித்தது. ஆனால் நாங்கள் அதை சரி செய்கிறோம். சிலவற்றை சரி செய்ய சில நேரங்களில் மருந்து அவசியமாகிறது. அப்படித்தான் இந்த வரி விதிப்பும். இது ஓர் அழகான நடவடிக்கை. பங்குச்சந்தைகளில் என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எல்லா சவால்களையும் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்கா மிகவும்…

Read More

கோவை: பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டம் நாளை (மார்ச் 20) பேரூர் ஆதின வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் கூறியது: “பேரூர் ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பேரூர் ஆதினம், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகியோர் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் நாளை (20-ம் தேதி) பேரூர் ஆதின வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக,…

Read More

Last Updated : 21 Apr, 2025 06:22 AM Published : 21 Apr 2025 06:22 AM Last Updated : 21 Apr 2025 06:22 AM சென்னையை சேர்ந்த இசைக் கலைஞர் கணேஷ் பி. குமார், ‘ரெய்ஸ்: சிம்பொனி நம்பர் 1 இன் டி மைனர்’ என்ற சிம்பொனி இசையை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வரும் 27-ம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியை வியன்னாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் அந்தோணி ஆர்மோர் வழிநடத்துகிறார். புகழ்பெற்ற புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு, இசையை நிகழ்த்தும். இதுகுறித்து கணேஷ் பி. குமார் கூறும்போது, “பீத்தோவனுக்கு சமர்ப்பணமாக 2018-ல் இந்த சிம்பொனி இசை இயற்றப்பட்டது. இந்த இசையை 2020-ல் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டோம். கரோனா காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது வரும் 27-ம் தேதி அரங்கேற்றம் நடக்கிறது” என்றார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow…

Read More