Author: admin

புதுடெல்லி: 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவம், “இந்தியாவும், பாகிஸ்தானும் சனிக்கிழமை மாலை மோதல் நிறுத்தத்துக்கு உடன்பட்டதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மற்றும் பிற சர்வதேச எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் மே 11 – 12 இடைப்பட்ட இரவில் அமைதி நிலவியது. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என எதுவும் நிகழவில்லை.” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 23 தொடங்கி மே 6 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவந்தது. இதனையடுத்து இந்தியா மே.7 நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி மோதல் தொடங்கியது. இந்நிலையில், “19 நாட்களுக்குப் பின்னர் நேற்றிரவு…

Read More

சென்னை: பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தொடங்கிய ‘பன்யான் உல் மர்சூஸ்’ ஆகிய இரண்டுக்கும் கிடைத்த பலன்கள் குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூரின் பலன்கள்: ஒன்று : ஐ.நா. பாதுகாப்பு சபையின் தேக்க நிலையை உணர்ந்த இந்தியா, அதனிடமிருந்து அனுதாபத்தைக் கோர முயற்சிக்கவில்லை. மாறாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் நம் தாய்நாட்டின் இறையாண்மையையும் தன்னம்பிக்கையையும் தெளிவாக வெளிப்படுத்தியது இந்தியா. இரண்டு: முதன் முறையாக, பயங்கரவாதிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா. மேலும் பாகிஸ்தான் அரசின்…

Read More

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து இயக்கத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியது. தற்போது 146 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 22 பேருந்துகள் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. இந்நிலையில் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் மேலும் 100 மினி பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜிபிஎஸ், பானிக் பட்டன், பார்க்கிங் கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.34 கோடி மதிப்பீட்டில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. ஜூன் 15-ம் தேதி முதல் புதிய விரிவான மினி பேருந்து சேவை அமலுக்கு வரும் நிலையில், அரசு மேலும் 100 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: சென்னையில் இன்று (மே.12) தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்துள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் மூண்டதை ஒட்டி, மே.7 ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கடந்த மே 2-ம் தேதி…

Read More

லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்களால் மாசுபடுவதால், அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா மற்றும் வாஷிங்டனில் விற்கப்படும் சில தயாராக உள்ள சாண்ட்விச்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்களை புதிய மற்றும் ரெடி உணவுகள் நினைவு கூர்ந்தன, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.”ஒரு நிறுவனம் நினைவுகூருவது, சந்தை திரும்பப் பெறுதல் அல்லது பாதுகாப்பு எச்சரிக்கையை அறிவிக்கும்போது, ​​எஃப்.டி.ஏ நிறுவனத்தின் அறிவிப்பை ஒரு பொது சேவையாக இடுகிறது. எஃப்.டி.ஏ தயாரிப்பு அல்லது நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை” என்று அது கூறியுள்ளது.அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா மற்றும் வாஷிங்டனில் அமைந்துள்ள கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவ கட்டிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றில் உள்ள விற்பனை மற்றும் பிரேக்ரூம் பகுதிகளில் “தானாகவே நினைவுகூரப்பட்ட தயாரிப்புகள் 04/18/2025 மற்றும் 04/28/2025 க்கு இடையில் விநியோகிக்கப்பட்டன. அமெரிக்க எஃப்.டி.ஏ அறிவித்துள்ளது.லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள்சரி, ஒரு நுண்ணிய வில்லனைப் பற்றி பேசலாம், அது உண்மையில் விஷயங்களை குழப்பக்கூடிய -லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள். இது அன்றாட உரையாடல்களில் நீங்கள் கேட்கும்…

Read More

விழுப்புரத்தில் நடந்த ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் திருநங்கை’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார். ‘மிஸ் திருநங்கை’ போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடியும் தருவாயில் மேடையில் பேசிவிட்டு இறங்கிச் சென்ற விஷால் திடீரென மயங்கி விழுந்தார். மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை எழுப்பி, தண்ணீர் கொடுத்து அவரது காருக்கு அழைத்து சென்று…

Read More

சென்னை: பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக மருத்துவர் பரமேஸ்வரனை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு ஏ.கே.எஸ்.விஜயன் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணியான மருத்துவர் பரமேஸ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, தமிழக அரசின் உதவியுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலல் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எய்ம்ஸ் மருத்துவமனையில் பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, சிகிச்சை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக பரமேஸ்வரனிடம் தெரிவித்தார். பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம், தாயார் சித்ரா, மனைவி நயன்தாரா,…

Read More

புத்தர் தனது வாழ்க்கையில் அனுப்பிய மிக முக்கியமான போதனைகளில் ஒன்று இரக்கமுள்ளவராகவும் தீங்கு விளைவிப்பதாகவும், எந்தவொரு வாழ்க்கையையும் கொல்லவும். புத்தர் ஒருமுறை ஒருவர் கொல்லவோ அல்லது கொல்லவோ கூடாது என்று குறிப்பிட்டார், நவீன வாழ்க்கையில், இது கற்றுக்கொள்வதற்கும் நினைவில் கொள்வதற்கும் ஒரு பாடம். எப்படி? சரி, புத்தர் தனது காலத்தில் உடல் ரீதியான வன்முறையை பெரிதும் குறிப்பிட்டிருந்தாலும், இன்று, இந்த தீங்கு உடல், மன அல்லது உணர்ச்சிவசப்பட்டதாக இருக்கலாம். நாம் சொல்லும் வார்த்தைகள், நாம் செய்யும் செயல்கள், சக மனிதனை நாம் நடத்தும் விதம், ஒரு உயிரினத்தை ஒரு பறக்கக் கருதும் விதம், இவை அனைத்தும் இரக்கத்துடன் செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய பூச்சியைக் கூட காயப்படுத்துவது பற்றி ஒருவர் சிந்திக்கக்கூடாது, ஒரு சக மனிதனை ஒருபுறம்.

Read More

விஜய்யை வைத்து ‘மாஸ்டர் 2’ படம் எடுக்க விரும்புவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியது: “இயக்குநர் விஜய்யுடன் அனைவரும் ‘லியோ 2’ நான் பண்ண வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எனக்கு அவரை வைத்து ‘மாஸ்டர் 2’ எடுக்க விரும்புகிறேன். காரணம், அதில் சொல்லப்பட வேண்டிய கதை ஒன்று முழுமை பெறாமல் இருப்பது போல எனக்கு தோன்றியது. அதில் அவரை ஜேடி கதாபாத்திரத்தில் பார்ப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ’கூலி’ படத்தைப் பொறுத்தவரை எந்த பிரஷரும் இல்லாமல் வேலை செய்கிறேன். முந்தைய படங்களில் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுதான் ஷூட்டிங் செல்வோம். ஆனால், இந்த படத்தில் அதை தவிர்த்து விட்டேன். முந்தைய தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதாலேயே இந்த முடிவு. ’ஆர்ஆர்ஆர்’ போல 3, 4 வருடங்கள் நடிகர்களை வைத்து படமெடுக்கும் சூழலில் நான் இல்லை. அதிகபட்சம் 6 முதல்…

Read More

சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி.ஆர்.வம்சி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்கள், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்றோருக்கு ஆடைகள், பற்பசை, பிரஷ், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறோம். இவ்வாறு நலத்திட்ட…

Read More