லவ்டுடே, டிராகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு பிசியாகிவிட்டார், பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த அந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதில் ‘பிரேமலு’ மமிதா பைஜூ நாயகியாகவும் சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘டியூட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுவே முதன்முறை.
Author: admin
சென்னை: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 23-ம் தேதி நடைபெறும் காணொலி விசாரணையில் ஆஜராகும்படி, வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டு இவரை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பினாமி பெயரில் இந்த சொத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்க முயன்றாரா என்பது குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, நிலத்தின் உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர்…
புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, 32 விமான நிலையங்களும் இப்போது சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம், “இந்த விமான நிலையங்கள் இப்போது உடனடியாக சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாக விமானங்களின் இயக்கம் குறித்து சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைக் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது. மீண்டும் சிவில் பயன்பாட்டுக்கு வரும் விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா,…
புராணக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை என பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதில் பெரும்பாலான பக்திப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்த வரிசையில் கொஞ்சம் லேட்டாக உருவான பக்தி படம், ‘சக்தி லீலை’. டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். பொதுவாக, பக்தி படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான். ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, கே.பி. சுந்தராம்பாள், உஷாராணி, உஷாநந்தினி, ஜெமினி கணேசன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, அசோகன், மனோரமா, வி.கே.ராமசாமி என பலர் நடித்தனர். இவ்வளவு முன்னணி நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தது, ‘சக்தி லீலை’யாகத்தான் இருக்கும். இதில் ஜெமினி கணேசன் சிவபெருமானாகவும் ஜெயலலிதா பெரிய பாளையத்து அம்மனாகவும் நடித்திருந்தனர். சிவகுமார், நாரதராக நடித்தார். டி.கே. ராமமூர்த்தி இசையில் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘சக்தி வந்தாளடி’, ‘காலைப் பொழுதே’, ‘அம்பிகை…
சென்னை: தமிழகம் 897 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஏற்றுமதி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த மகத்தான பணிகள் பாராட்டப்பட்டன. முதல்வரின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10 லட்சத்து 27,547 கோடி முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என புகழப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-ல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்,…
புதுடெல்லி: வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பகிர்ந்த ட்ரோலர்களை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாக பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய செயல்கள் அவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூட அமையலாம். குடிமைப் பணி அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பதற்கில்லை. மேலும் இவை ஒழுக்கநெறியற்ற செயல். ஒவ்வொருவரும் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். சுய கட்டுப்பாடு தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரோல் செய்யப்பட்ட மிஸ்ரி! இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது.…
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்துக்கு வர வழைத்து பாராட்டியுள்ளார். “படம் ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தை யும் அழகாக வடிவமைத்து, எல்லோருடனும் கனெக்ட் செய்துவிட்டீர்கள். அனைவரும் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்” என்று அவர் படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் நடந்த தீ விபத்தில் குற்றவியல் வழக்கறிஞரும், அவரது மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்தின் போது, முதல் தளத்தில் இருந்து குதித்து அவரது பேரனும், வீட்டு பணிப்பெண்ணும் உயிர் தப்பினர். சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் 4-வது தெருவில் 2 தளம் கொண்ட சொகுசு பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன்(78), அவரது மனைவி தங்கம்(73), மகன் ஸ்ரீராம்(50), மருமகள் ஷியாமலா(45) பேத்தி ஸ்ரேயா(20), பேரன் ஷர்வன்(17) ஆகியோருடன் வசித்து வருகிறார். தங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ளார். ஸ்ரீராம் ஆடிட்டராக பணிப்புரிகிறார். நேற்று காலை ஸ்ரீராம், அவரது மனைவி ஷியாமலா, மகள் ஸ்ரேயா ஆகியோருடன் வேலை நிமித்தமாக அடையாறு சென்றிருந்தார். வீட்டில் நடராஜன், அவரது மனைவி தங்கம், பேரன் ஷர்வன், பணிப்பெண் சரஸ்வதி(45) ஆகியோர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம்…
பூசணி விதைகள் சிறிய, தட்டையான, பச்சை விதைகள் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளன. பூசணி விதைகள் மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் வளமான மூலமாகும், அவை அவற்றின் சிறிய அளவில் உண்மையான சூப்பர்ஃபுட் ஆகும். நிபுணர்களின்படி, தினமும் காலையில் இந்த சூப்பர்ஃபுட் 1 டீஸ்பூன் உட்கொள்வது மனித உடலுக்கு அதிசயங்களைச் செய்யலாம். தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பூசணி விதைகள் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலத்தில் நிறைந்துள்ளன, இது உடல் செரோடோனின் மற்றும் மெலடோனின், மனநிலை மற்றும் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களாக மாறுகிறது. பூசணி விதைகளைப் போன்ற டிரிப்டோபான் உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது மனச்சோர்வைத் தணிக்கவும் தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவும். பூசணி விதைகளின் பிற நன்மைகளையும், விந்தணுக்களை மேம்படுத்துதல், காயம் குணப்படுத்துதல், ஆண்டிமைக்ரோபையல், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் மற்றும் தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மே-11 ஆம் தேதி இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய…
