புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70…
Author: admin
சென்னை: மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு…
டேராடூன்: உத்தராகண்ட்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளன. சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “சார் தாம் யாத்திரை சீராகவும், பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு மாநில அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்” என தெரிவித்துள்ளார். சார் தாம் யாத்திரை மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. பயண வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உண்மையான நிலைமையை மதிப்பிடவும், தேவையான மேம்பாடுகளை உறுதி செய்யவும், சார்…
‘கூலி’ படத்துக்குப் பின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்குப் பின் ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனிடையே தனது அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். “அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். பின் கமல் சாருடன் ‘விக்ரம் 2’ பண்ணவுள்ளேன். அந்தக் கதையும் இன்னும் முடியவில்லை. அடுத்து இறுதியாக ‘லியோ 2’ இயக்கவுள்ளேன். பின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம் ஒன்று இயக்க இருக்கிறேன். அதற்கு ஐடியா இருக்கிறது. சூர்யா சாருடன் இது குறித்து பேசியிருக்கிறேன். இருவருமே எங்களுடைய படங்களை முடித்து நேரம் வரும் போது அப்படத்தில் இணைந்து பணியாற்றுவோம்” என்று…
சென்னை: “தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, தினசரி மின்தேவை குறைந்தது. இதனால், தினசரி மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மின்தேவையும் அதிகரிக்கிறது. இதன்படி, கடந்த 2024 மே 2-ம் தேதி 20,830 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. அத்துடன், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9-க்கு வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம்…
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்ததையடுத்து சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களை எடுத்துள்ளார். 24 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரோஹித், அதில் 12-ல் வெற்றி கண்டுள்ளார். 9 போட்டிகளில் தோற்றுள்ளார். 2023-ல் இந்திய அணி அவரது கேப்டன்சியில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்கியது நினைவிருக்கலாம். ரோஹித் 3 இரட்டைச் சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருக்கலாம். அவரது அணுகுமுறை ஆக்ரோஷமாக இருக்கலாம், அதற்காக விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுவது என்பதெல்லாம் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்த சுனில் கவாஸ்கருக்கு அடுக்குமா என்பதுதான் நம் கேள்வி. முதலில் ரோஹித் குறித்து சுனில் கவாஸ்கர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்: கிரிக்கெட்டில் விவ் ரிச்சர்ட்ஸ் ஆடுவதை பார்க்கும் பாக்கியம் எனக்கு உண்டு. விவ் ரிச்சர்ட்ஸ் ஆடும்…
ஜெனிவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இரு தரப்பும் உயர்த்தப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. 100%-த்துக்கு மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் 10% ஆக இருக்கும். இரு நாடுகளும் தங்கள் தேசிய நலனை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. நாங்கள் இருவரும் வர்த்தக சமநிலையை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம், அமெரிக்கா அதை நோக்கி தொடர்ந்து நகரும். இரு தரப்பும் தங்களுக்கு இடையேயான வர்த்தக வேறுபாடுகளை குறைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது.” என தெரிவித்தார். கடந்த ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய வரித் தாக்குதலைத் தொடங்கினார். குறிப்பாக, சீனா மீது அதிக வரிகளை விதித்தார்.…
செப்டம்பர் 18-ம் தேதி ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் கடும் போட்டி நிலவியது. முதலில் ‘சூர்யா 45’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் வெளியாவதாக கூறப்பட்டது. இதில் ‘பைசன்’ மட்டும் தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருந்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ‘DUDE’ படத்தின் திடீர் அறிவிப்பால் மீண்டும் குழப்பம் நிலவியது. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எப்போது வெளியீடு என்ற கேள்வி எழுந்தது. தற்போது செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகும் என்று ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதுவரை தீமா என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்க இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி…
திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். “ஆரம்பகட்டத்திலேயே, புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா இன்று (மே 12) காலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நோயாளிகளிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போதைய நிலையில் பொதுமக்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மாநில அளவில்…
கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் வீக்கம் என்ற வார்த்தையை நிறைய கேள்விப்பட்டிருக்க வேண்டும், மேலும் இது எடை அதிகரிப்பு, இதய நோய், ஆர்திரிடிஸ் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சினைகளை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதை நீங்கள் எவ்வாறு கேள்விப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதைக் குறைக்க ஒரு வழி இருக்கிறதா? மேலும் கண்டுபிடிப்போம்:வீக்கம் சரியாக என்ன?வீக்கம் என்பது காயம் அல்லது தொற்றுநோய்க்கு உடலின் இயல்பான பதில். குறுகிய கால வீக்கம் காயங்களை குணப்படுத்த உதவுகிறது மற்றும் கவலைக்கு ஒரு காரணமல்ல (காய்ச்சலைப் போலச் சொல்லுங்கள்), இருப்பினும் நாள்பட்டதாக இருந்தால், வீக்கம் முன்னர் குறிப்பிட்டபடி பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். இருப்பினும், இயற்கையாகவே வீக்கத்தைக் குறைக்கக்கூடிய ஒரு கனிமம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த கனிமம் மெக்னீசியம். எப்படி என்று பார்ப்போம் …மெக்னீசியம் என்றால் என்ன?மெக்னீசியம் என்பது கொட்டைகள், விதைகள், இலை கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளில் காணப்படும் ஒரு முக்கிய…
