Author: admin

அதானியை குறிவைத்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதன் பின்னணியில் ராகுல் காந்தி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனங்கள் செயற்கையான முறையில் பங்குகளின் விலையை உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதன் கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கடுமையான குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகளின் விலை அதலபாதளத்துக்கு சென்றது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதானி குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னணியில் ராகுலுக்கும் தொடர்பு இருப்பதை ரகசிய விசாரணையின் மூலம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டுபிடித்துள்ளதாக ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரும், காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவருமான சாம்பிட்ராடோவின் நடவடிக்கைகளை மொசாட் ரகசியமாக கண்கணித்ததையடுத்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது. கவுதம் அதானி மற்றும்…

Read More

சென்னை: விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வாட்ஸ்அப் குறித்த அப்டேட்டை வழங்கி வரும் WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிவித்துள்ளது.…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா மற்றும் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற 72 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகள் வழங்கினார். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இலக்கியம், வினாடி வினா, சிறார் திரைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வென்றவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலும் பங்கேற்றனர். இதில் பள்ளி அளவில் 7 லட்சத்து 55,939 மாணவர்களும், வட்டார அளவில் ஒரு லட்சத்து 51,699 மாணவர்களும், மாவட்ட அளவில் 7,576 மாணவர்களும், மாநில அளவில் 722 மாணவர்களும் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டிகளில் 72 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தேர்வு செய்து தலா ஒரு மாணவன்…

Read More

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட சிஎஸ்கே அணி சீசனை கவுரவமான இடத்துடன் நிறைவு செய்யய முயற்சிக்கக்கூடும். 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றி பெற முடியாமல் தடுமாறி வருகிறது. இங்கு முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் அதன் பின்னர் நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் தோல்விகளை சந்தித் தது. ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் சிஎஸ்கே…

Read More

ஒட்டாவோ: கனடாவில் தலைநகருக்கு அருகே இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் அமைப்பின் மூலம், துயரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவலை தூதரகம் வெளியிடவில்லை. இந்த சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாண காவல்துறை, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்பு ராக்லேண்டில் உள்ள லாலோண்டே தெரு…

Read More

உதகை: உதகை எல்க்ஹில் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோயில் உள்ளது. மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்ற, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். எல்க்ஹில் முருகன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி, மூலிகை பொருட்கள் வேள்வி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 10:15 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷமிட்டு முருகன்…

Read More

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீட்டு தேதியினை சூசகமாக குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. இதனிடையே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒவ்வொருவரிடமிருந்தும் மிகுந்த ஆர்வம், அன்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் புன்னகைக்கவும், செயல்முறையை ரசிக்கவும் மறக்கவில்லை. ஒவ்வொரு காட்சியையும் அனைவரின் ஆதரவும் இல்லாமல், நாங்கள் உருவாக்கி இருக்க முடியாது. ஒரு காட்சியை கூட சமரசம் செய்யாமல், ஒரு அசல், புதிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் இறுதிகட்டப் பணிகள் தொடங்குகின்றன. உங்கள் நண்பர்கள்…

Read More

உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் சிறுவர், சிறுமி நடனமாடினர். ஆண்டுதோறும் ஏப். 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தின் மகள் தாரகை ஆராதனா(11), மாணவர் அஸ்வின் பாலா (14) ஆகியோர் நீருக்கடியில் நடனம் ஆடினர். இதுகுறித்து தாரகை ஆராதனா, அஸ்வின் பாலா ஆகியோர் கூறும்போது, “கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு, நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடன நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், ராமேசுவரத்தில் உள்ள பாக். நீரிணை பகுதியில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் விழிப்புணர்வு நடனமாடினோம்” என்றனர்.

Read More

மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது. முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டு எண் 2.10 சதவீதம் அதிகரித்து (1,577 புள்ளிகள்) 76,734 புள்ளிகளிலும், நிப்டி 2.19 சதவீதம் (500 புள்ளிகள்) உயர்ந்து 23,328 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து காணப்படவே அதிக வாய்ப்புள்ளது என்பதே இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 4.6 சதவீதம் உயர்ந்தது. நேற்றைய செலாவணி சந்தையைப் பொருத்தவரை தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து…

Read More

எங்கள் காலையை சரியாகப் பெறுவது ஒரு நீண்ட, சோர்வான நாளுக்கு முன்னால் வென்ற போர் பாதி. இது சரியான நேரத்தில் எழுந்திருக்கிறதா, பவர் பேக் செய்யப்பட்ட காலை உணவை வைத்திருப்பது, சில உடற்பயிற்சிகளில் இறங்குவது அல்லது சில சூரிய ஒளியில் ஊறவைத்தாலும், மகிழ்ச்சியான காலை உங்களுக்கு வேலையிலோ அல்லது வீட்டிலோ உற்பத்தி செய்ய உதவுகிறது. இருப்பினும், உங்கள் வழக்கமான காலை வழக்கத்தைத் தவிர, சதுகுருவின் கூற்றுப்படி, எழுந்த பிறகு நீங்கள் இதைச் செய்ய வேண்டும் – இங்கே ஏன் …

Read More