கல்வி என்பது உண்மையான மூலங்களிலிருந்து கற்றுக் கொள்வதாகும். இதன் மூலம், தவறுகள் இல்லாத அறிவைக் குறைத்து, குறிப்பிட்ட தலைப்பு அல்லது துறையைப் பற்றிய அறிவியல் புரிதலை அதிகரிக்க முடியும். உலகிலும் இந்தியாவில் உள்ள தற்போதைய சூழ்நிலை, கற்றலுக்கு சிறந்த வாய்ப்பையும், எல்லையையும் வழங்குகிறது. பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் (எந்தப் பிரிவிலும் +2 தேர்ச்சி) போன்ற படிப்பைத் தேர்ந்தெடுப் பதன் மூலம், மாணவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், தொழில் முனைவோராகவும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை ஆராய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த ஓர் ஊடக தளத்திலும் உள்ளடக்கம் (content) தான் ஆட்சி செய்கிறது. சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையானது உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு தேவையான குணங்கள் ஆகும். வழக்கத்துக்கு மாறான வழியில் சிந்திக்க வேண்டும் என்பது ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மாணவர்களுக்கு கட்டாயமாகும். பத்திரிகை, விளம்பரத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி, திரைப்படம், இணையதளங்கள், வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ், அனிமேஷன், ஓடிடி…
Author: admin
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. இந்நிலையில், அவருக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாட உள்ள வீரர் யார் என்பதை பார்ப்போம். மொத்தம் 210 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி உள்ளார் கோலி. அதில் 160 இன்னிங்ஸில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடி உள்ளார். அந்த இடத்தில் மட்டும் 7,564 ரன்களை கோலி எடுத்துள்ளார். ஆதலால் கோலி விட்டு செல்லும் இந்த இடத்தை நிரப்பும் வீரருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்கும். அதை சமாளிக்கும் திறனும் அந்த வீரருக்கு அவசியம். கே.எல்.ராகுல்: அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரில் மாறி மாறி ஆடி வருபவர் கே.எல்.ராகுல். டாப் ஆர்டர் முதல் லோயர் மிடில் ஆர்டர் வரை அணியின் தேவைக்கு ஏற்ப ஆடக் கூடியவர். அந்த வகையில் ‘நம்பர் 4’ பேட்ஸ்மேனாக ராகுல் கச்சிதமாக பொருந்தி விடுவார். சர்பராஸ் கான்: இந்திய டெஸ்ட் அணியில்…
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று 30-க்கும்மேற்பட்டோர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பைக் கோரி விண்ணப்பித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் உத்தம் மகேஸ்வரி என்ற இயக்குநர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் படம் தொடங்க இருப்பதாக அறிவித்தார். அதற்கான போஸ்டரையும் ரிலீஸ் செய்தார். நிக்கி விக்கி பாக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினீயர் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இதிலும் பணம் அள்ள முயல்வதாகக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 12) ஒரே நாளில் இரு முறை சரிந்தது. பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ரூ.71,040-க்கு விற்பனையானது. இன்று மாலையில் மேலும் குறைந்தது, பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.295 குறைந்து 8,750-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1.10 லட்சம் ரூபாயாகவும் இருந்தது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. மார்ச் 13-ம் தேதி 64,960 ஆகவும், ஏப்.1-ம் தேதி ரூ.68,080 ஆகவும் இருந்தது. இதற்கிடையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி…
தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய புதிய படிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம், முன்னரே, நடைமுறை யில் உள்ள பழைய பாடங்களுக்கும் மாணவ, மாணவிகளிடம் வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மாணவ, மாணவிகள் விரும்பிப் படிக்கும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது இளங்கலை வரலாறு (பி.ஏ ஹிஸ்டரி). ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் ஒரு வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும், நம் நாட்டின் முந்தைய கால செயல்பாட்டையும், சிறப்பையும் அறிந்து கொள்ளவும் வரலாறு அவசியம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் எவ்வாறு இருந்தது, அவர்கள் எப்படி வாழ்ந்தனர், எந்த வகையான பொருட்களை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை அறிய வரலாறு மிகவும் முக்கியமானதாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு பட்டப் படிப்பு தற்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்…
விஜய் மில்டன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமானார். அதற்குப் பின் பல படங்களை இயக்கினாலும், முதல் படம் அடைந்த வெற்றி அளவுக்கு எதுவும் வெற்றியடையவில்லை. தற்போது அடுத்து இயக்கவுள்ள படத்தை அறிவித்துள்ளார் விஜய் மில்டன். தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழிலும் நாயகனாக அறிமுகமாகிறார் ராஜ் தருண். இப்படம் குறித்து விஜய் மில்டன் கூறும்போது, “இந்தப் படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். ’கோலி சோடா’ பாணியை தொடர்ந்து, இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை இயக்கவுள்ளேன். ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் இருக்கிறார். தமிழ் ரசிகர்களை…
புதுச்சேரி: “என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளில் இருந்து முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையே மாநில அந்தஸ்துதான். எனவே அதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கால்நடை மருத்துவம், பொறியியல், நர்சிங், கலை, அறிவியல், வேளாண், சட்டம் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளின் சேர்க்கைக்கு சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (மே 12) முதல் வரும் 31-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் சிற்றேடு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். கல்வித் துறை செயலர் பிரியதர்ஷினி, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறியது: “ஆண்டுதோறம் நீட் மற்றம் நீட் அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக்…
உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. இந்த மூன்றில் ஒன்றான உடைக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நம்மை ஒருவரிடம் எடுத்துக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது உடை. உடையை வடிவமைப்பதற்கு தற்போதைய காலத்தில் ஆடை வடிவமைப்புத் துறை என பிரத்யேகமாக பட்டப்படிப்பு உள்ளது. ஆடை வடிவமைப்புத் துறை குறித்து கோவையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ஆடை வடிவமைப்புப் பிரிவு அறிவியல் மற்றும் கலை சார்ந்த ஒரு படிப்பாகும். தற்போதைய காலத்தில் இது ஒரு முக்கிய தொழிற் கல்வியாக மாணவர்களிடம் உள்ளது. ஆடை வடிவமைப்பு என்பது ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு நுட்பங்களை வடிவமைக்கும் ஒரு கலையாகும். ஆடை வடிவமைப்பாளர் ஒரு சிந்தனையை ஒரு வடிவமைப்பாய் மாற்றி, பின்னர் அந்த வடிவமைப்பை தான் நினைத்தபடி ஆடையாகமாற்றுவார். ஆடை வடிவமைப்புக்கு இளநிலை, முதுநிலையில் படிப்புகள் உள்ளது. இளநிலையில், பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன், பி.வொக் (b.voc)…
பெய்ஜிங்: சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியாகிய செய்தியை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், ‘சீன ராணுவம் திங்களன்று தனது மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுத தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல. மக்கள் விடுதலை ராணுவ விமானப் படை (PLAF), அதன் சியான் Y-20 ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல. இத்தகைய அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை. இணையம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் சட்டபூர்வமாக பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உடனான மோதலை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், அது அவசரமாக ராணுவ தளவாடங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில்…
ரஜினி – கமல் இணையும் படம் ஏன் நடைபெறவில்லை என்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ‘விக்ரம்’ படத்துக்கு முன்பாக, ரஜினி – கமல் இணைந்து நடிக்க இருந்த படத்தை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படம் எதனால் நடக்கவில்லை என்பதற்கான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “ரஜினி சார், கமல் சார் இருவரையும் இணைத்து படம் பண்ண ரொம்பவே முயற்சித்தேன். கரோனாவால் அது நடக்கவில்லை. மூவரும் இணைந்து படம் பண்ண ஒப்பந்தம் வரை சென்றோம். கதையை கூறி முடித்தவுடன், என் முன்னே ரஜினி சார் – கமல் சார் இருவருமே தொலைபேசியில் பேசினார்கள். கமல் சார் தயாரித்து நான் இயக்கி ரஜினி சார் நடிப்பதாக இருந்தது. முன்பே இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் இணைத்து படம் பண்ண வைத்திருந்த கதையை இன்னும் வைத்திருக்கிறேன். இரண்டு வயதான கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் கதைதான். அப்போது…
