Author: admin

பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் வசனக் காட்சிகள் முடிவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் 5 பாடல்கள் உண்டு. அனைத்தும் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளன. ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கி இருக்கிறோம். ஃபேன்டஸியான உலகத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் காட்சி ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்” என்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்…

Read More

சென்னை: கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் பேரவையின் பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக்குழு சார்பில், கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, கடந்த மாதம் கலந்துரையாடல் நடந்தது. அப்போது, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மே 24-ம் தேதி திண்டுக்கல் வெள்ளோடு அருகே மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்துவாக இருக்கும்போதுதான் வன்னியரே தவிர, கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு எப்படி வன்னியர் என்று குறிப்பிட முடியும்? இந்து வன்னியர்களுக்கான…

Read More

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி கடையின் பெயரை மாற்றக்கோரி சிலர் இந்திய கொடிகளை ஏந்தி அக்கடையின் பெயர் பலகையை அடித்து துவம்சம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டு தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் திடீரென கராச்சி பேக்கரிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். மேலும், கடையின் பெயர் பலகை மீது கற்கள் எரிந்தும் நாசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீரென பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். ஹைதராபாத் நகரின் சம்ஷாபாத் பகுதியில், கடந்த 73 ஆண்டுகளாக இந்த புகழ்பெற்ற கராச்சி பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதனை ராஜேஷ் மற்றும் ஹரீஷ் ராமாநானி என்பவர்கள் தற்போது நிர்வகித்து வருகின்றனர். தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் ராஜேஷ், ஹரீஷ் ஆகியோர் கூறியதாவது: இங்கு 100 சதவீதம் இந்தியன்…

Read More

சென்னை: ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிடெக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பட்டப்படிப்பில் சேரலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை ஆராய்ச்சி முதல் உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பயன்பாட்டு துறைகள் வரை பல தரப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு சென்னை ஐஐடியில் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பட்டப்படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பிடெக் படிப்பில் சேரலாம். ஐஐடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இப்படிப்புக்கான கோடு எண் 4121 ஆகும். மாணவர்கள் இந்த பிடெக் படிப்பை தேர்வுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிடெக் ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ்…

Read More

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவுதூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னை செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தப் பாடங்களை நான் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வேன். வெள்ளை நிற உடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எளிதானது அல்ல. ஆனால், இந்தக் கடினமான…

Read More

குமுளி: சித்திரை முழுநிலவு தினத்தை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவப்புப் பட்டு உடுத்திய கண்ணகி, சிலம்பு ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றங்கரை வழியே தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு, கோவலன் மங்கலநாண் பூட்டி விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக ஐதீகம். இதனால் கணவனை இழந்தாலும் மங்கலதேவி கண்ணகி என்ற பெயரில் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு நடைபாதை வழியாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ. ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம். கோயில் அமைந்த இடம் வனப்பகுதி என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒருநாள் மட்டும் வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.…

Read More

கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (மே 13) ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17, 18-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெ்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், வரும் 15-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி…

Read More

நாம் அனைவரும் ஒரு நல்ல ஆரோக்கிய போக்கை விரும்புகிறோம், இல்லையா? அதிகாலை சக்தி நடைகள் மற்றும் பச்சை மிருதுவாக்கிகள் முதல் “தோலைப் பாதுகாக்க” உட்புறத்தில் தங்குவது வரை, பொருத்தமாகவும் அற்புதமானதாகவும் இருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.ஆனால் இங்கே அவ்வளவு துல்லியமான திருப்பம் இல்லை: இந்த பழக்கவழக்கங்களில் சில, உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, உண்மையில் நீங்கள் அதை உணராமல் உங்கள் வைட்டமின் டி அளவை இழுத்துச் செல்லலாம்.ஆமாம், “சன்ஷைன் வைட்டமின்” என்பது சில நிமிடங்கள் வெளியே அடியெடுத்து வைப்பது அல்ல. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு வலிமை, ஹார்மோன் ஆரோக்கியம், மனநிலை மற்றும் எடை மேலாண்மை ஆகியவற்றில் வைட்டமின் டி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, பல “ஆரோக்கியமான” விஷயங்கள் உங்கள் உடலை உருவாக்குவதிலிருந்து அல்லது பயன்படுத்துவதைத் தடுக்கும்.உங்கள் வைட்டமின் டி நீரில் மூழ்கக்கூடிய பொதுவான பழக்கவழக்கங்களை உடைப்போம் – அதற்கு பதிலாக என்ன…

Read More

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமியின் 71-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கட்சியின் பல்வேறு அணிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தியாவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் நலன் காக்க அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. சில இடங்களில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகங்களை கட்சி நிர்வாகிகள் வழங்கினர். பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி…

Read More

ஆல்கஹால் மற்றும் வைட்டமின் பி 12 உறிஞ்சுதல்: கனமான குடிகாரர்களுக்கு 5 விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

Read More