பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உள்ளூரை சேர்ந்த மட்டக் குதிரை ஓட்டியும் ஒருவர். இவரைப் போல மட்டக் குதிரை ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட உள்ளூர் காஷ்மீரிகள் பலர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியுள்ளனர். இதற்காக அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளூர் காஷ்மீரிகளுக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த ஒரு சிறுவனை சஜ்ஜாத் அகமது பட் என்ற காஷ்மீரி பல கி.மீ. தூரம் தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் அந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து சஜ்ஜாத்…
Author: admin
கடந்த பத்து ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, தொலைக்காட்சியின் காட்சித் தன்மையும் வடிவமைப்பும் அதன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதலை எதிர்கொண்டு வருகின்றன. பாட்காஸ்டை நோக்கி… கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே கேபிள் இணைப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மக்கள் பாட் காஸ்ட்டை நோக்கிப் பயணிக்க ஆரம் பித்துவிட்டனர். 2023 புள்ளி விவரப்படி 57% வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். ஸ்ட்ரீமிங்: யூடியூப், பாட்காஸ்ட், இன்ஸ்டா போன்ற தளங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாகப் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி வந்து விட்டன. அதை உணர்ந்து பார்வையாளர்களுக்குச் சுவாரசியத்தைத் தரக்கூடிய நெருக்கடியான காலக்கட்டத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆகையால், டிரெண்டிங்குக்கு ஏற்றபடி ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளைக் கூடுதலாக வழங்கும் சூழலுக்குத் தொலைக்காட்சி அலை வரிசைகள் தள்ளப்பட்டுள்ளன. நேரலை, பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இணையம் வழியாகக் கணினி, அலைபேசி சாதனங்களுக்கு வழங்கப்பட்டு, ஒளிபரப்பாகும். பாட்காஸ்ட்கள், வெப்காஸ்ட்கள், திரைப்…
சென்னை: டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை திங்கட்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்டது. அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. 2025-ம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை (வருடாந்திர தேர்வு அட்டவணை) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பழைய அறிவிப்புகள். 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும். அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டார கல்வி அலுவலர்களை (பிஇஓ)…
ஐபில் போட்டிகளில் அதிகவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்தியர் என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல். ராகுல் பெற்றார். இதன் மூலம் எம்.எஸ். தோனி மற்றும் ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 35-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்களை விளாசிய கே.எல்.ராகுல் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 200 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார் ராகுல். தனது 129வது ஐபிஎல் இன்னிங்ஸில் 200 சிக்ஸர்களை வேகமாக எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார். கிறிஸ் கெய்ல் (69 இன்னிங்ஸ்) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (97 இன்னிங்ஸ்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை விரைவாக…
பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் இருக்கும் உலக நாடுகளுக்கு கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் சமநிலையையும், சர்வதேச வர்த்தகத்தின் மூலம் நீண்ட காலமாக அமெரிக்கா பயனடைந்து வந்துள்ளது என்பதையும் புறக்கணிக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. மேலும் சீனா தனது சொந்த நலன்களை பாதுகாக்க எதிர்நடவடிக்கையில் ஈடுபடும்.”என்று தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதில் அதிகபட்சமாக கம்போடியா 49 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், இலங்கை 44…
கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மாசிமக விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் 6 சிவன் கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள், அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர். குளத்தில் அஸ்திர தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, ‘சிவாய நம, சிவாய நம’ என பக்தர்கள் முழக்கமிட்டபடி மகாமக குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பினர். இதேபோல, திருப்புறம்பியம்…
ஆத்தூரில் இளம் பெண் காணாமல் போகும் புகாரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்) களத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்வதாகப் புகார் வருகிறது. அந்தப் பேருந்தை மடக்கும்போது பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பயணியைக் கொன்றது யார்? டார்ச்சருக்கு உள்ளான பெண் யார்?, காணாமல் போன பெண் என்ன ஆனார்? இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பதை 10 மணி நேரத்தில் துப்பு துலக்குவதுதான் படத்தின் கதை. ஓர் இரவில் நடக்கும் மர்மக் கதைகளைத் தாங்கி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஓர் இரவில், 10 மணி நேரத்தில் நடக்கும் த்ரில்லர் க்ரைம்தான். விடிந்தால் சபரிமலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் நாயகன், ஓர் இரவில் நடக்கும் குற்றங்களைத் துப்பறிகிறார். இளம் பெண் கடத்தப்பட்டதற்கும், பயணியின் கொலைக்கும் உள்ள தொடர்பை சுவாரஸியமாகப் படமாக்க இயக்குநர்…
சென்னை: “எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு கவலையளிக்கிறது. இனி எப்பவும் இதுபோல் செய்யவே கூடாது. இதை எனது கட்டளையாகவோ, கண்டிப்பாகவோ கூட எடுத்துக் கொள்ளலாம்.” என்று தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! கோவையையும், கொங்கு தங்கங்களையும் நான் நேசிக்கிறேன். நம் மீது இத்தனை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத்…
சென்னை: அட்சய திருதியை தினமான இன்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று (30-ம்) மாலை 6.45 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் இன்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர். நகைக் கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டது. நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அட்சய திருதியை தினமான இன்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும்,…
பட கடன்: Instagram/@ellezsandasblog திரைப்பட தயாரிப்பாளருக்கு மேகன் மார்க்கலின் ஆரம்ப திருமணம் ட்ரெவர் ஏங்கெல்சன் இளவரசர் ஹாரிக்கு அவரது தற்போதைய திருமணத்தை வடிவமைக்கக்கூடிய நிஜ வாழ்க்கை பாடங்களை வழங்குகிறது. மேகன் தனது முன்னாள் கணவனிடமிருந்து 2013 இல் பிரிந்துவிட்டார், மேலும் எந்தவொரு பிரபல தம்பதியினருக்கும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அழுத்தங்களைக் குறிக்கும் பல சிக்கல்களை எதிர்கொண்டார். நீண்ட தூர உறவுகளில் தகவல்தொடர்புக்கு முன்னுரிமை அளித்தல்ட்ரெவர் ஏங்கெல்சனுடனான திருமணத்தின் போது மேகன் தொலைக்காட்சி தொடர் வழக்குகளுக்கான நடிகராக பணிபுரிந்தார்; அவரது வேலை டொராண்டோவுக்குச் செல்ல வேண்டியிருந்தது, அதே நேரத்தில் ஏங்கல்சன் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்தார். இருப்பினும், தூரம் அவர்களின் திருமணத்தை ஆழமாக பாதித்தது. எனவே, இது நல்ல தகவல்தொடர்பு மிகவும் முக்கியமானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக தூரத்தைப் பொறுத்தவரை. நீண்ட தூர தம்பதிகளுக்கு அடிக்கடி திறந்த தொடர்பு மற்றும் ஒருவருக்கொருவர் சோதனை செய்வது அவசியம். திருமண கடமைகளுடன் வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல்பட கடன்:…
