Author: admin

லக்னோ: தனது மகள் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி, அதனைக் கையாண்டு வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவ் மகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதள கணக்கில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்து 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில சமூக விரோத சக்திகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களின் ஒத்தப் பெயர்கள், படங்களை வைத்துக் கொண்டு மிகவும் கண்டிக்கத்தக்க வகையிலான சமூக ஊடக பதிவுகள் மற்றும் உள்ளடக்கத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படங்கள் மற்றும் பதிவுகள் மற்றும் கருத்துகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும்…

Read More

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளை நோக்கி மாணவ, மாணவிகள் படையெடு்த்து வருகின்றனர். கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை என்ற உயர்கல்வி திருவிழா தொடங்கிவிட்டது. எந்தக் கல்லூரியில் சேரலாம், எந்த பாடப்பிரிவை எடுக்கலாம், எதைப் படித்தால் உடனடி வேலை கிடைக்கும், அதிக ஊதியம் கிடைக்கும் என்றெல்லாம் பெற்றோர், மாணவர்கள் இடையே விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. வழக்கம் போல், நடப்பாண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மாணவ, மாணவிகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் என்கின்றனர் பேராசிரியர்கள். இது குறித்து உயர் கல்வி நிறுவன பேராசிரியர்கள் கூறியது: பொறியியல் கல்லூரிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான இருக்கைகளை அதிகம் கோரிப் பெற்றுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டுமன்றி, கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பல்வேறு சிறப்பு பிரிவுகளும் அதிகரித்துள்ளன. விரும்பிய கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு கிடைக்காது போனால் என்ன செய்வது என்று, நல்ல மதிப்பெண் தகுதி இருந்தபோதும் நிர்வாக…

Read More

சென்னை: “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

Read More

உடற்தகுதிக்கு வரும்போது, ​​குந்துகைகள் ஒரு அதிசய பயிற்சியாகக் கூறப்படுகின்றன, இது குறைந்த உடல் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. இதுவும் உண்மைதான் என்றாலும், எல்லோரும் குந்துகைகளைச் செய்வதை விரும்புவதில்லை அல்லது சிக்கலானதாகக் காணலாம். சமீபத்தில் 53 வயதில் டோன்ட் உடலமைப்பால் அறியப்பட்ட நடிகை மண்டிரா பெடி, வெளிப்படையாக அவர் குந்துகைகளை வெறுக்கிறார், குறிப்பாக எடையுள்ளவர்களை வெறுக்கிறார். நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் விரும்பாத பயிற்சிகளை பொருத்தமாக இருக்க உங்களை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, கிளாசிக், நேர சோதிக்கப்பட்ட பயிற்சிகளில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் – மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கே எப்படி …

Read More

திருவனந்தபுரம்: கேரளாவின் நந்தன்கோட்டில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர், சகோதரி உட்பட குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 4-ன் நீதிபதி கே.விஷ்ணு இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், குற்றவாளியான கேடல் ஜேன்சன் ராஜாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலீப் சத்யன் கூறுகையில், “நான்கு பேரைக் கொலை செய்த குற்றவாளி கேடலுக்கு ஒவ்வொரு கொலைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 436-ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 201-ன் கீழ் 5…

Read More

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடந்த இச்சம்பவம் தொடர்பாக முதலில் பொள்ளாச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (மே 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இந்த தீர்ப்பை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில்…

Read More

ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் அவை நமது உள்ளார்ந்த ஆளுமை மற்றும் மறைக்கப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், இது கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன.எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.இந்த படத்தில் மறைக்கப்பட்ட மீன்களை அடையாளம் காண முடியுமா?இந்த கருப்பு மற்றும் வெள்ளை ஓவியத்தில், ஒரு சிறுத்தை தனது பிற்பகல் சியஸ்டாவை அனுபவிக்கும் ஒரு மரத்தின் மீது வசதியாக அமைந்துள்ளது. அவரை மறந்துவிட்டால், ஒரு மீன் மூலையில் உள்ளது…

Read More

புதுடெல்லி: ‘போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும்’ என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் வர்த்தக அச்சுறுத்தல் கூற்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்த ரந்திர் ஜெய்ஷ்வால், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே பிரச்சினை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினாரா என கேட்கிறீர்கள். அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகம் குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் போர்…

Read More

உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? – பிளஸ் 2 படிக்கும் மற்றும் படித்து முடித்து உயர் கல்வியை தேடும் மாணவர்களை கொண்ட குடும்பங்கள் அனைத்திலும் இந்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கும். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்களுக்கு நடத்தப் பட்டு வருகின்றன. அதேசமயம், ஆண்டுதோறும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா கண்டு வருகின்றன. மேலும், பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகின்றன. இவற்றின் மத்தியில் இஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா என்ற கிலியும் அதிகரித்து வருகிறது. நகைச்சுவை துணுக்குகள் முதல் திரைப்படங்கள் வரை பொறியியல் படிப்புக்கு எதிரான கிண்டல்கள் மற்றும் சீண்டல்களில் நிதர்சனமும் நிறைந்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: பொறியியல் படிப்பில் 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாரம்பரியப் பொறியியல் படிப்புகளை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த…

Read More

திண்டுக்கல்: “புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்களை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம், என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது,” என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இந்து தமிழ் திசை நாளிதழக்கு, மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பாலபாரதி அளித்த பேட்டியில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வரமுடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் புகாரை வாங்க முன்வராதநிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது.பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்கள் தெரியாது. அதை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற…

Read More