கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என அரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார். கோவை நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டனை விவரத்தை நீதிபதி மதியம் அறிவிப்பார். கைது செய்யப்பட்ட 9 பேர் மீதான கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்கில் 48 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம்…
Author: admin
சென்னை: தமிழகத்துக்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை மீட்டெடுத்து இங்கு புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்பட்ட 20 வந்தேபாரத் ரயில்வண்டிகளுக்கான பெட்டிகளில் 9 ரயில்வண்டிகளுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் வந்தேபாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய ரயில்பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது. 2022-ம் ஆண்டில் வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் 20 வந்தேபாரத் ரயில்களை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. 20 பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்கள், 16 பெட்டிகளைக் கொண்ட…
கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கரங்களால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் திரளாக கூத்தாண்டவரை மணவாளனாக ஏற்று, திருமணம் செய்துகொள்கின்றனர். அதன்படி, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 19-ம் தேதி தொடங்கியது. கூவாகத்தைச் சுற்றியுள்ள 8 கிராம மக்கள் கூழ் தயாரித்து கோயிலில் படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கினர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகத்தில் நேற்று மதியம் முதலே குவியத் தொடங்கினர். திருநங்கைகள் பட்டுப்புடவை…
தாம்பரம், வண்டலூர் வட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரிடம் பட்டா பெற்றுத் தருவதாக கூறி வசூல் நடைபெறுவதாகவும், அப்பாவி மக்களை மோசடி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. சென்னையை சுற்றியுள்ள, 532 கிராமங்களைச் சேர்ந்த, 29,187 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்; தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 57,084 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், இதனையொட்டி வழிகாட்டி விதிகள், நடைமுறைகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி தரிசு நிலம், கல்லான்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை – புஞ்சை, அரசு அனாதீனம், பொதுகல் வகைபாட்டு நிலங்களில் வசிப்போர் பட்டா பெறலாம். வண்டிப்பாதை, பாதை, பாட்டை, களம், மயானம், தோப்பு வகைப்பாட்டில் உள்ள நிலங்களில் வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நீர்நிலை, மேய்க்கால், மந்தவெளி உள்ளிட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டா…
சென்னை: மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டி வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் சமுதாயத்தில், பாலின வேறுபாடுகளை களையவும், பெண்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உரிய அங்கீகாரம், சமூக நீதி, சமத்துவத்தை அளிக்கவும், “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை” கடந்தாண்டு வெளியிடப்பட்டது. மேலும் விடியல் பயணத்திட்டத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் என இதுவரையில் 682.02 கோடி முறை பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்தால், மாதம் ரூ.888 வரை பெண்கள் சேமிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இதுவரை 1.15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகின்றனர். இந்த உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும்…
மெல்பர்ன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இளம் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியில் கடைசி இரு ஆட்டங்களில் அறிமுக வீரராக இடம் பெற்ற இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படாத நிலையில் தற்போது மீண்டும்…
சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ. மழை பதிவாகியது. தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை லேசானது முதல்…
ராபர்ட் டவுனி ஜூனியர் உலகளவில் மிகவும் திறமையான மற்றும் பல்துறை நடிகர்களில் ஒருவர் மற்றும் அவரது பாணி, கவர்ச்சி மற்றும் வரம்பிற்கு பெயர் பெற்றவர். அவர் ‘சாப்ளின்’ மற்றும் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ போன்ற படங்களில் பாத்திரங்களுடன் புகழ் பெற்றார், ஆனால் மார்வெல் பிரபஞ்சத்தில் டோனி ஸ்டார்க் அல்லது அயர்ன் மேன் ஆகியோரின் சின்னமான சித்தரிப்பு அவரை ஹாலிவுட் ஏ-லிஸ்டர்களின் வரிசையில் சேர்த்தது. இங்கே எங்களிடம் நட்சத்திரத்தின் மாலிபு வீட்டின் சில படங்கள் உள்ளன, தனித்துவம், சுற்றுப்புற அலங்காரங்கள் மற்றும் அழகியல் ஆகியவற்றின் சரியான கலவையாகும். (படம்: ராபர்ட்டவுனிஜ்/இன்ஸ்டாகிராம்)
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் இல்லாததால் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு படியேறி செல்ல வேண்டிய நிலையுள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் தினசரி 300-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இவற்றில் பயணம் செய்கின்றனர். சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய இரு வழித்தடங்களில் உள்ள கோட்டை ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மற்றும் மின்தூக்கிகள் (லிஃப்ட்) இல்லாததால் பொதுமக்கள் படி ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயலாளர்…
எர்கோத்தியோனின் மற்றும் செலினியம் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. எர்கோத்தியோனைன் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது தோல் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் இலவச தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கிறது, இது வயதான செயல்முறையை துரிதப்படுத்தும். செலினியம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது, இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்குவதற்கும் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் உருவாக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு சமூகத்தில் சேரவும்! இங்கே கிளிக் செய்க
