ஹைதராபாத்: பிரமோஸ், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் விரைந்து விநியோகம் செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் தரை வழி தாக்குதலை விட வான் வழி தாக்குதல்களான ஏவுகணை தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்தான் அதிகளவில் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்க இந்தியாவும் அதிகளவிலான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியது. அதேபோல் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஸ்கால்ப், ஹேமர், ஸ்பைஸ் 2000 ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு ட்ரோன்கள் ஆகியவையும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. போரில் அதிகளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதால், ஆயுத கையிருப்பை மீண்டும் நிரப்ப ஏவுகணைகளையும், ட்ரோன்களை விரைந்து கொள்முதல் செய்ய அனைத்து ராணுவ கமாண்டர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள், ஏவுகணைகளின் பாகங்கள், ட்ரோன்களை தயாரிக்கும் டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்,…
Author: admin
‘கருடனு’க்குப் பிறகு, சூரி நாயகனாக நடித்திருக்கும் ‘மாமன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரே ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. ‘விலங்கு’ வெப் தொடரை அடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் படம் இது. வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம். “நான் இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும் அடுத்தப் படத்துக்கான முயற்சியில இருந்தேன். அப்ப தயாரிப்பாளர் லார்க் ஸ்டூடியோஸ் குமார் அண்ணன், சூரி அண்ணனை வச்சு படம் பண்ணலாம்னு கூப்பிட்டார். போனேன். அப்ப நான் வச்சிருந்த சில லைன்களை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும் சூரி அண்ணனே, ஒரு கதை வச்சிருக்கிறதா, தயாரிப்பாளர் சொன்னார். அவருக்கு ஒரு ஃபேமிலி டிராமா கதை பண்ணணும்னு ஆசை இருந்தது. நானும் ‘விலங்கு’ போல இல்லாம, வேற ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். சூரி அண்ணன் சொன்ன கதை பிடிச்சிருந்தது. அதுக்கு திரைக்கதை ரெடி பண்ணி ஆரம்பிச்சோம்.…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி இடவம் மாதத்துக்காக (வைகாசி) இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க உள்ளார். மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை சாத்தப்படும். தொடர்ந்து, நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வரும் 19-ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன. வரும் 19-ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அந்நாட்களுக்கான ஆன்லைன்…
வலுவான எலும்புகள், நோயெதிர்ப்பு ஆரோக்கியம் மற்றும் மனநிலை ஒழுங்குமுறைக்கு வைட்டமின் டி அவசியம். இருப்பினும், அதிகமான மக்கள் குறைபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு சப்ளிமெண்ட்ஸுக்குத் திரும்புவதால், அதிகப்படியான அல்லது பொருத்தமற்ற பயன்பாடு மறைக்கப்பட்ட பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று பலருக்குத் தெரியாது.வைட்டமின் டி நச்சுத்தன்மை அரிதானது என்றாலும், நீண்டகால தவறான பயன்பாடு அல்லது அதிக அளவு நுட்பமான ஆனால் குறிப்பிடத்தக்க சுகாதார கவலைகளை ஏற்படுத்தக்கூடும். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸின் ஆறு அமைதியான பக்க விளைவுகள் மற்றும் அவற்றை எவ்வாறு திறம்பட குறைப்பது என்பது இங்கே.அதிக கால்சியம் அளவு அதிகப்படியான வைட்டமின் டி இன் மிகவும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று ஹைபர்கால்சீமியா ஆகும், இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக மாறும்போது. அறிகுறிகளில் சோர்வு, குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் குழப்பம் ஆகியவை அடங்கும், ஆனால் பெரும்பாலும், உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை, இதனால் கவனிக்கப்படுவதை எளிதாக்குகிறது. வேறுவிதமாக பரிந்துரைக்கப்படாவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட தினசரி…
புதுடெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினையை பிரதமர் மோடி மிகத் திறமையாக கையாண்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை இந்தியா கொடுத்தது. அதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலையும் இந்திய திறமையாகச் சமாளித்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாடினார். நம் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற உரைகள் அடிக்கடி தேவைதான். அடிக்கடி நாட்டு மக்களிடையே இதுபோன்று பேசுவது பிரதமரின் கடமை. மன் கி பாத் என்ற பெயரில் மாதம்தோறும் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் பேசும் விஷயங்கள் வேறு. ஆனால், தற்போது நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றிய விஷயம் வேறு. தொலைக்காட்சியில் தோன்றி, மனதில் உள்ள…
பிரபல நடிகர் ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தான் நடிக்கும் படங்களில் டூப் போடாமல் ஒரிஜினலாக ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்பது இவர் வழக்கம். 1980-மற்றும் 90-களில் இவர் நடித்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இவரின் ‘ட்ரங்கன் மாஸ்டர்’ (1978), ‘போலீஸ் ஸ்டோரி’ (1985), ‘ரஷ் ஹவர்’ (1998)உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடின. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹாலிவுட் சண்டைக் காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால், உண்மைத் தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “நாங்கள் ஆக்ஷன் படங்களில் நடித்த போது எங்களுக்கு இருந்த ஒரேவழி, களத்தில் இறங்குவதுதான். ஆனால், இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நடிகர்கள் எதையும் செய்ய முடியும். ஆனால் அதில் யதார்த்தம் இல்லை என்பதை உணர முடிகிறது. கிராபிக்ஸ் என்பது, இரு முனை கூர் கொண்ட வாள். ஒருபுறம், நடிகர்கள் தொழில்நுட்ப உதவியுடன் சாத்தியமில்லாத சண்டைகளைச்…
முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஊட்டிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேற்று வந்தார். கல்லட்டி மலைப் பாதை வழியாக வந்த அவருக்கு, மாவனல்லா பகுதியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியில் காரிலிருந்து இறங்கிய முதல்வர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுடன் கை குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதேபோல, மசினகுடியிலும் திரளான பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து முகாமுக்கு நடந்தே வந்து, முதுமலை குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5. கோடி மதிப்பில்…
பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் (70) மைசூரு அருகே காவிரி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பன் (70) இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஏஆர்) இயக்குநராக இருந்தவர். நாட்டின் மீன் வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றிய ‘நீலப்புரட்சி’க்கு வித்திட்டவர்களில் இவர் குறிப்பிட்டத்தக்கவர். இவரது வேளாண் துறை பங்களிப்பாக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுப்பண்ணா ஐயப்பன் மைசூருவில் உள்ள வித்யாரண்யபுராவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் வித்யாரண்யபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மைசூருவை அடுத்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல்…
நாமக்கல்: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி வரும் 23-ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலையை யூனிட்டுக்கு ரூ.2,000 வரை உயர்த்தி உள்ளனர். அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அமைச்சர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், மணல் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசமறுக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அனைத்து கல்குவாரி, கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஆன்லைன் மூலம், ஜல்லி உள்ளிட்ட…
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை நடத்தப்போவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை கொன்று, உலக அமைதிக்கு எதிராகவும் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகவும் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தவகையில் வீரத்துடன், விவேகத்துடன் துல்லியமாக தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய பிரதமர் மோடியின் உறுதியான தலைமையை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக்கொடி ஏந்தியபடி 4 கட்டங்களாக யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில தலைநகரமான சென்னையில் நாளையும் (இன்று), இதர முக்கிய நகரங்களில் மே 15-ம் தேதியும் (நாளை), மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16, 17-ம் தேதிகளிலும்,…
