Author: admin

சென்னை: சந்தையில் விற்கப்படும் திரவ உப்பு – சர்க்கரை கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்க செய்யும். எனவே, பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறிவிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு – சர்க்கரை கரைசலை (ஓஆர்எஸ்) பயன்படுத்துவதால், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும். ஒரு ஓஆர்எஸ் பொட்டலத்தின் 20.5 கிராம் மொத்த எடையில் 13.5 கிராம் குளுக்கோஸ், 2.9 கிராம் டிரைசோடியம் சிட்ரேட், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை உள்ளன. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு…

Read More

புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி உள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.…

Read More

இந்திய தோற்றம் யுகே எம்.பி. பிரிதி படேல் (கோப்பு படம்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுனைடெட் கிங்டம் எம்.பி. பிரிதி படேல் புதன்கிழமை அழைத்தார் பஹல்கம் தாக்குதல் ஒரு “பயங்கரவாத செயல்”இங்கிலாந்து எப்போதும் கடினமான நேரத்தில்” நண்பர் “இந்தியாவுடன் நிற்க வேண்டும் என்று கூறினார். பாராளுமன்றத்தில் பேசியபோது, ​​படேல் 2002 ல் புதுடெல்லி பிரகடனத்திலிருந்து இங்கிலாந்து இந்தியா 2030 சாலை வரைபடத்திற்கு இந்தியா-யுகே மூலோபாய உறவை நினைவு கூர்ந்தார். “Speaker, my condolences, thoughts and prayers are also with all those affected by this murderous, violent terrorism that has taken place in Faglan. And I recognise that for India and the diaspora communities in the UK in particular, this has been a really difficult week. This was an act of terrorism…

Read More

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது. இதையடுத்து அப்போதைய துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஏசிபி ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஊழலில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பிறரின் பங்கை கண்டறிய விரிவான விசாரணையை ஏசிபி தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறியதாவது: 34 ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலோர் ஆம் ஆத்மி…

Read More

கராச்சி: வங்கதேச கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெற்ற இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது வங்கதேச அணி. அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடுகிறது. இந்தத் தொடர் முதலில் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களை கொண்டவையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் முழுமையாக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடராக நடத்த பாகிஸ்தான்…

Read More

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய இயக்குநர் ஒருவர், கோல்டன் குளோப் விருதின் சிறந்த இயக்குநர் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விருது கிடைக்கவில்லை. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக பாயல் கபாடியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஜூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பிரெஞ்சு மற்றும் ஆங்கில நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில், அமெரிக்க நடிகை ஹாலே பெரி, நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க்,…

Read More

தருமபுரி: தருமபுரியில் நடந்த தேமுதிக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையில் நேற்று தேமுதிக-வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஆகியோர் வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக சுதீஷ் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் பிரேமலதா மேடையில் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு தேமுதிக வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நாட்டின் எல்லைப்பகுதிகளை மத்திய அரசு…

Read More

மும்பை: ட்ரம்ப் தொடங்கிவைத்த வரி யுத்தம், பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. அத்துடன், உலக வர்த்தகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது. இந்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கமாக, ‘ரெசஷன்’ எனப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் வலுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகள் வரலாறு காணாத தடுமாற்றத்தைக் கண்டுள்ளன. இந்தப் போக்கு, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. சென்செக்ஸ் சரிவும் மீட்சியும்:…

Read More

பெற்றோருக்குரியது முடிவில்லாத மகிழ்ச்சியுடன் வருகிறது. டிஜிட்டல் யுகத்தில், கூகிள் புதிய பெற்றோர் மற்றும் பெற்றோருக்குரிய வழிகாட்டியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் பராமரிப்பாளர்களை ஒன்றிணைக்கும் மிகவும் கேட்கப்பட்ட சில கேள்விகளைப் பாருங்கள்.

Read More

நெல்லூர்: ஆந்திராவில் கார் விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 6 மாணவர்கள், புச்சிரெட்டி பாளையம் பகுதியில் நேற்று காலையில் நடைபெற்ற தங்கள் நண்பனின் தங்கை நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர். பிறகு இவர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நெல்லூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாதிரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் வீட்டில் இருந்த வெங்கடரமணய்யா (50) என்பவர் அதே உயிரிழந்தார். மாணவர்கள் 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நெல்லூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நெல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read More