இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இணையத்தின் சமீபத்திய வைரஸ் விவாதம், கேன் 100 நிராயுதபாணியான மனிதர்கள் ஒரு சில்வர் பேக் கொரில்லாவை தோற்கடிக்க முடியும், விஞ்ஞானிகள், பாதுகாவலர்கள் மற்றும் உளவியலாளர்களிடமிருந்து தீவிர வர்ணனையைத் தூண்டியுள்ளது. ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான ஒலெக்ஸாண்டர் உசிக் நம்பிக்கையுடன் “ஆம், ஆம்” என்று அவர் வெல்வாரா என்று கேட்டபோது, வல்லுநர்கள் மிகவும் நுணுக்கமான காட்சியை எடுத்தனர்.ப்ரிமாடாலஜிஸ்டுகள் மற்றும் பாதுகாவலர்களின் கூற்றுப்படி, கொரில்லா எந்தவொரு தனிப்பட்ட மனிதனையும் விட சந்தேகத்திற்கு இடமின்றி வலுவாக இருக்கும்போது, அலை சுத்த எண்கள் மற்றும் மூலோபாயத்துடன் மாறுகிறது.தாரா ஸ்டோயின்ஸ்கி டியான் ஃபோஸ்ஸி கொரில்லா நிதி ஒரு மனிதனை விட 10 மடங்கு வலிமையான ஒரு கொரில்லாவின் உயர்ந்த வலிமை, ஆரம்பத்தில் ஒரு விளிம்பைக் கொடுக்கும் என்று ஃபோர்ப்ஸ் மேற்கோள் காட்டினார், ஆனால் சோர்வு அதற்கு எதிராக செயல்படும். “இது சுத்த எண்களின் ஒரு பிரச்சினை,” என்று…
Author: admin
புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். மேலும், இதற்கென பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை திறந்தநிலை செயல்முறையை கடைப்பிடிக்கிறது. அதன் ஐடியாக்களை தேசிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பிலும் பின்பற்ற…
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் களத்தில் இருந்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இந்த ஜோடி 11 ரன்கள் விளாசியது. ஆனால் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் அஷுதோஷ் சர்மா (7) ஆட்டமிழந்தார். இது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதன் பின்னர் விப்ராஜ் நிகாம் போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைக்க முடியாமல் போனது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி…
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’, ‘கோடித்துணி’ உள்பட சில கதைகள், திரைப்படமாகி உள்ளன. அவரது ‘பூக்குழி’ நாவலும் திரைப்படமாகி வருகிறது. இதை ‘சேத்துமான்’ தமிழ், இயக்குகிறார். தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற நாவலான ‘கூளமாதாரி’ திரைப்படமாகிறது. இதை பாலாஜி மோகன், பிரசாத் ராமர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்குமார் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆடுகள் மேய்க்கும் அவர்களின் வறுமையையும் இயலாமையையும் பேசும் நாவல் இது. வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை, சில மாற்றங்களுடன் திரைப்படமாக்க உள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் நடிக்கும் சிறுவர்களுக்கு, இரண்டு வாரங்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாதுகாப்புக் குழுவினரின் வாகனங்களில் ஏறுவது, குதிப்பது, பயணத்தின்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற கட்சியின் பூத் கமிட்டி முகவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த என்னை அன்பால் நனைய வைத்தீர்கள். உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் எனது அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இளைய தோழர்கள், நமது வாகனங்களை இருசக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. உங்களின் பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். உங்க அன்பை மதிக்கிறேன். அதேபோல நீங்களும் என்மேல் அன்போடு…
சென்னை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3 ,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது. தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்கி உள்ளதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ம் தேதியன்று 19 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவாகும்.…
பில்லியனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் நீண்டகாலமாக டெக்சாஸை ஒரு வணிக மையம் மற்றும் விளையாட்டு மைதானமாக ஏற்றுக்கொண்டனர், ராக்கெட்டுகளைத் தொடங்குவது, கார்களைக் கட்டுவது மற்றும் ஆஸ்டினின் கிராமப்புற புறநகரில் உள்ள தனது தொழிலாளர்களுக்காக ஒரு கற்பனாவாத சமூகத்தை கற்பனை செய்தனர்.இப்போது.பல தகுதியான வாக்காளர்கள் அவரது ஊழியர்கள் என்பதால், இந்த முயற்சி வெற்றிக்கு முன்னதாகத் தோன்றுகிறது. இது கோடீஸ்வரருக்கு ஒரு நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கும், கூட்டாட்சி செலவுக் குறைப்புகளில் அவர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதன் பொது உருவம் மற்றும் விஸ்கான்சின் உச்சநீதிமன்றத் தேர்தல்களில் 20 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. அவரது டெஸ்லா ஆட்டோமொடிவ் எண்டர்பிரைஸ் குறைந்த இலாபங்களை அனுபவித்துள்ளது.செவ்வாயன்று, தகுதியான 283 வாக்காளர்களில் சுமார் 200 பேர் ஆரம்பகால வாக்களிப்பில் பங்கேற்றதாக கவுண்டி தேர்தல் பதிவுகள் குறிப்பிடுகின்றன. நவம்பர் தேர்தல்களில் மஸ்க் கவுண்டியில் வாக்களித்தாலும், ஆரம்பகால வாக்காளர்களிடையே அவரது பெயர் தோன்றவில்லை.முன்மொழியப்பட்ட நகராட்சி, ஒரு பணக்கார…
பெங்களூரு: கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோகம்’ என தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது 30 வயதான நபர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 20 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது தேச துரோகம். அந்த நாட்டுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது நமது நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகும். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்காது. அதேவேளையில் பாகிஸ்தானை எதிரியாக சித்தரித்து இங்கு சிலர் அரசியல் செய்வதையும் மக்கள்…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அமையும். ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே வெற்றி கண்டது. 14 வயதான தொடக்க…
ஸ்ரீலீலா நடித்து கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘கிஸ்’. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி உள்பட பலர் நடிக்கின்றனர். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். கன்னடத்தில் இயக்கிய ஏ.பி.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். படத்துக்கு ‘கிஸ் மீ இடியட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சென்டிமென்ட் கலந்த காதல் கதையுடன் இந்தப் படம் உருவாகி வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
