ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள். 1875-ல் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது நூலகம் தொடங்கப்பட்டது. அவரது பெயராலேயே திறக்கப்பட்ட இந்த நூலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக வணிக வளாகம் ஒன்றும் பிற்பாடு கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்த வணிக வளாகத்தில் காய்கறி மார்க்கெட் உட்பட 150 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் நகரின் மையத்தில் இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று இடத்தில் நகராட்சி சார்பில் மார்க்கெட் வளாகம் திறக்கப்பட்டது. ஆனால், முதல்வர் கையால் திறந்து வைத்து ஓராண்டாகியும் இந்த மார்க்கெட்டுக்கு போக வியாபாரிகள் யாரும் தயாராய் இல்லை. இந்நிலையில், பென்னிங்டன் வணிக வளாக கடைகளுக்கு வாடகையை உயர்த்துவது, வாடகை செலுத்தாத கடைகளை…
Author: admin
ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சேர்மங்கள் காரணமாக ஆப்பிள்களுக்கு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த கூறுகள் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைத் தடுக்கலாம் மற்றும் பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும், குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் அதிகப்படியான குடிகாரர்களுக்கு. ஆப்பிள் உள்ளிட்ட ஃபிளாவனாய்டு நிறைந்த உணவுகளை உட்கொள்வது புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடும், இருப்பினும் மேலும் ஆராய்ச்சி தேவைப்பட்டது. உங்கள் உணவில் ஆப்பிள்கள் உள்ளதா? இல்லையென்றால், சிலவற்றைச் சேர்க்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம், ஏனென்றால் ஆப்பிள்கள் உண்மையிலேயே உங்கள் மருத்துவரின் அலுவலகத்திற்கு ஒரு பயணத்தை சேமிக்கக்கூடும். ஆப்பிள்கள் மருத்துவர்களை ஒதுக்கி வைக்க முடியும் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், அது அப்படியே மாறும்! ஆப்பிள்களை சாப்பிடுவதன் பல ஆரோக்கிய நன்மைகளுடன், சில ஆய்வுகள் இப்போது அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் குறிக்கின்றன. ஆப்பிள்களில் காணப்படும் பல சேர்மங்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதோடு இணைக்கப்பட்டுள்ளன.…
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், தேதிகள் மாற்றப்பட்ட காரணத்தால் விளையாட முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்றாக வேறு வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் சேர்க்கலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அந்த புதிய விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து பார்ப்போம். மே 17 முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த மாற்றம் காரணமாக பல்வேறு அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள், தாயகத்துக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்கள் எஞ்சியுள்ள ஆட்டங்களை பகுதி அளவிலும் அல்லது முழுவதும் மிஸ் செய்வார்கள் என தகவல் கிடைத்துள்ளது.…
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள். சுமார் 75 வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் மகாலிங்கம் என்பவர் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக பொருட்காட்சி நடத்தியவர், அதில் சேர்ந்த நிதியைக் கொண்டு 1950-ல் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னிதி தெருவில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்கினார். அத்தோடு அந்த முயற்சி கிடப்பில் போனதால், கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடமானது ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஒருகட்டத்தில், காங்கிரஸார் பெருமுயற்சி எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை மீட்டனர். இதையடுத்து, மீண்டும் கட்சி அலுவலகம் கட்டும் முயற்சியில் இறங்கிய கும்பகோணம்…
சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை முதல்வர், தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும். முன்னாள் ஆளுநர் தமிழிசை: மலர்…
2025 மெட் காலா ஷாருக் கான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரிடமிருந்து நிஜ வாழ்க்கை தோற்றங்களுடன் மூடப்பட்டிருக்கும் போது, ரசிகர்கள் இப்போது ஒரு மெய்நிகர் சிவப்பு கம்பளத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்-ஒன்று AI ஆல் தைக்கப்பட்டுள்ளது.
சென்னை: “காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, மின்வாரியம் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்” என, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் 9,331 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதோடு, எஞ்சிய 40 சதவீத மின்சாரம், மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் 2 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலைகளை அமைத்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் மின்தொடரமைப்புக் கழகத்தின் மின்வழித் தடத்தில் இணைத்துள்ளன. இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்தக் காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினசரி சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை ரூ.3.10-க்கு மின்வாரியம் வாங்குகிறது. கடந்த 2024 ஜுலை 30-ம் தேதியன்று 5,899 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலைகளில் இருந்து…
போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதத்தின் சகோதரி’ என்று அவர் அழைத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், அமைச்சர் விஜய் ஷா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 (குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல்) மற்றும் 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்) போன்ற கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் நான்கு மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று டிஐஜிக்கு உத்தரவிட்டார். செய்தி அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறிய நீதிபதி ஸ்ரீதரன், “‘பஹல்காமில்…
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை பலரும் போற்றி வரும் சூழலில், கிரிக்கெட் உடன் இணைந்த அவரது பர்சனல் பக்கங்களை சற்றே புரட்டுவோம்… ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’ என்று விராட் கோலியைச் சொல்லலாம். கடந்த காலங்களில் இந்திய அணியை வழிநடத்தி வந்தவர்கள் (கங்குலியைத் தவிர) சாந்த சொரூபியாகவே இருந்தார்கள். எதிரணி வீரர்கள் நம் வீரர்களை ‘ஸ்லெட்ஜிங்’ செய்து உசுப்பேற்றினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால், “நம்மில் ஒருவரைச் சீண்டினாலும், ஒட்டுமொத்த எதிரணியையும் பதிலுக்குச் சீண்ட வேண்டும்” என்ற புதிய யுத்த முறையைக் கொண்டுவந்தவர் கோலி. கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் ரிக்கி பான்டிங் என்று சண்டைக்கார கேப்டன்களின் கலவையாக நின்றவர் விராட் கோலி. ஆனால், ‘தேவையான’ ஆக்ரோஷம் மட்டுமல்ல… அன்பும் நிரம்பிய உணர்வுபூர்வமான மனிதர்தான் இந்த கோலி. ஆசிரியருக்கு மரியாதை: 2013 மற்றும் 2014-ம் ஆண்டின்…
திருநெல்வேலி: “பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அன்றைய அதிமுக அரசு நிற்கவில்லை.எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாதநிலை ஏற்பட்டதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசும்போது, “வரும் சட்டப் பேரவை தேர்தல் களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்கு கள நிலவரம் தேவைப்படுகிறது. மாவட்ட அளவில் களத்தில் பணி செய்யக்கூடிய நிர்வாகிகளான உங்களது கருத்துகளை கேட்டு தேர்தல் பணிகளை செய்வதற்கான வியூகங்கள் வகுப்பதற்கு ஆலோசனைகள் உதவும். விருப்பு வெறுப்புகளை கடந்து காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உங்களது கருத்துகளை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் தெளிவாக எடுத்துரைத்தால் தேர்தல் களத்தை சந்திப்பது எளிதாக இருக்கும். தேர்தல் நெருங்குவதால் திமுக அரசின் சாதனை திட்டங்களை…
