திருவாரூர்: நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில், தமிழகத்தில் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்துவதாக கூறி, மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பில் அனுமதி பெற்று, தமிழக அரசிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு தனிநபர் ஒருவர் அனுமதி பெற்றுள்ளார். இவரது நிறுவனத்துக்கு நெல் கொள்முதலில் முன் அனுபவம் கிடையாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணியாளர்கள், கட்டமைப்புகளை பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கின் மூலம்…
Author: admin
எடை இழப்புக்கு மருந்துகளின் பயன்பாடு தொடர்ந்து விவாதங்களைத் தூண்டுகிறது என்றாலும், ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பு அவர்களின் நீண்டகால பயன்பாட்டிற்கு அதிக கவலைகளைச் சேர்த்தது.உடல் பருமன் குறித்து ஐரோப்பிய காங்கிரசில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, எடை இழப்பு மருந்துகள் உள்ளவர்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் அவர்கள் இழந்த எடையை மீண்டும் பெறுகிறார்கள்.”ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பழைய மற்றும் புதிய ஜி.எல்.பி -1 எடை இழப்பு மருந்துகளின் 11 ஆய்வுகளின் பகுப்பாய்வு, நோயாளிகள் பொதுவாக எடை இழப்பு ஜப்களில் 8 கி.கி.”செமக்ளூட்டைட் (வெகோவி) மற்றும் டிர்ஜெபாடைட் (ம oun ன்ஜாரோ) எடுப்பவர்கள் பழைய ஜப்களைப் பயன்படுத்தும் நபர்களுடன் ஒப்பிடும்போது எடையின் இரு மடங்காக இழந்தனர் – சராசரியாக 16 கிலோ – நோயாளிகள் ஒரு வருடத்திற்குள் 9.6 கிலோவை வைத்தனர், அதாவது 20 மாதங்களுக்குள் மீண்டும் 16 கிலோவை மீண்டும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்று அறிக்கை மேலும் கூறியது.”இந்த மருந்துகள் உடல்…
விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத் தலைவர் ஜகியா கசம் நேற்று பாஜகவில் இணைந்தார். விஜயவாடாவில் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்தார். நிகழ்ச்சியில் புரந்தேஸ்வரி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் ஜகியா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். ஜகியா கசம் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் சம உரிமையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்த ஒரே பிரதமர் மோடி ஆவார். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திடம் இருந்து ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புவதற்காக நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார். முன்னதாக சட்டமேலவை துணைத் தலைவர் பதவியை ஜகியா கசம் ராஜினாமா செய்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டும் விலகினார். கடந்த 2 வருடங்களாக அவர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தனர்.
புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடர் ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, போலந்து கிராண்ட் மாஸ்டரான டூடா ஜான்-கிர்ஸிஸ்டோஃபுடன் மோதினார். இந்த ஆட்டம் 32-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தனது 6-வது சுற்றில் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரூஸ்ஜாவுடன் மோதினார். இதில் 69-வது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார். 6 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் ஃபேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குகேஷ் 2 புள்ளிகளுடன் 10 பேர் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன. கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி. இதை பாகிஸ்தானால் தடுக்க…
தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து 12-ம் தேதி காலை 1,200 கனஅடியாகவும், 13-ம் தேதி காலை 700 கனஅடியாகவும் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 714 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 390 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 108.06 அடியாகவும், நீர்இருப்பு 75.68 டிஎம்சியாகவும் இருந்தது.
சென்னை: 10, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நாளை (மே 16) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பொதுத் தேர்வை 11-ம் வகுப்பில் சுமார் 8 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பில் 9 லட்சம் மாணவர்களும் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 80-க்கும் மேலான முகாம்களில் ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம்…
சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்களின் பயோமெட்ரிக்கில் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது. , நடப்பாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகை பதிவு, அதிலும் ஒரு முறை மட்டும் வருகை பதிவு, இணை பேராசிரியர், பேராசிரியர் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில் கல்லூரிகளின்…
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் விமானப்படை மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வெற்றிகரமாக முறியடித்தது. இதில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள கண்காணித்து 400 கி.மீ தூரம் வரை எஸ்-400 ஏவுகணைகள் வானில் இடைமறித்து தாக்கின. போர் விமானம், ஏவுகணை, ட்ரோன் என எதுவந்தாலும், 4 வித ஏவுகணைகள் மூலம் இது நடுவானில் இடைமறித்து அழிக்கும். இதனால் எஸ்-400 ஏவுகணை யூனிட்டுகளை இந்தியாவுக்கு கூடுதலாக விநியோகிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன. மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 7.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மலர் மாடம் உட்பட…
