ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பிறந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பாத்திமா, ஜைன் அலியும் இறந்தனர். இதுகுறித்து இருவரின் தாய்மாமாவான ஆதில் பதான் கூறும்போது, “பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கிராமங்களில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர். கடந்த 7-ம் தேதி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கியது. இரட்டையர்களாகப் பிறந்து இணை பிரியாமல்…
Author: admin
ரோம்: இத்தாலின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 13-ம் நிலை வீராங்கனயைன ரஷ்யாவின் டயானா ஸ்னைடருடன் மோதினார். இதில் பவுலினி 6-7 (1-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 11 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாரா எரானி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 2-6, 6-4, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் முதல்…
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அப்போது சிம்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன போதே, இது சூப்பர் ஹிட் ஆகும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்றேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். ரசிகர்களின் ஆதரவுதான் அதற்கு காரணம். சசிகுமார் மிக அற்புதமான மனிதர். சிறந்த இயக்குநர். அருமையான ‘கோ ஸ்டார்’. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். நடிகர் சசிகுமார் பேசியதாவது, “இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நீங்கள் சம்பளத்தை ஏற்றி விடுவீர்களா? என கேட்டார்கள். கண்டிப்பாக ஏற்ற மாட்டேன். இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது, நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம். வித்தியாசமான படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம்…
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்துக்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை குற்ற செயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பல்வேறு வகைகளிலும் அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தோழி…
கோப்பு புகைப்படம்: ரெப் ஸ்ரீ தானேதர் (பட கடன்: ஆபி) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு உட்படுத்துவதற்கான இந்திய-ஆரிஜின் பிரதிநிதி ஸ்ரீ தானேதரின் முயற்சி புதன்கிழமை தனது சொந்த கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சரிந்தது. ஏப்ரல் மாதத்தில் ஏழு குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்த மிச்சிகன் ஜனநாயகக் கட்சி, ஹவுஸ் வாக்கெடுப்பை கட்டாயப்படுத்துவதிலிருந்து பின்வாங்குவதாகவும், அதற்கு பதிலாக தனது தீர்மானத்தைத் திருத்துவதற்கும் கட்சி வழிகளில் ஆதரவை வளர்ப்பதற்கும் தேர்வு செய்ததாகக் கூறினார்.”பல சகாக்களுடன் பேசிய பிறகு, இன்று குற்றச்சாட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்,” என்று தானேலர் கூறினார், “நான் எனது குற்றச்சாட்டு கட்டுரைகளைச் சேர்ப்பேன், என்னுடன் அரசியலமைப்பைப் பாதுகாக்க ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவைத் தொடர்ந்து அணிதிரட்டுவேன்.” ஏப்ரல் முதல் “கத்தாரிலிருந்து 400 மில்லியன் டாலர் ஜெட் விமானத்தை ஏற்றுக்கொள்வது” உட்பட, ஏப்ரல் முதல் ட்ரம்ப் “மேலும் குற்றமற்ற குற்றங்களை” செய்ததாகவும் அவர்…
கொச்சி: ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் பங்கு’ என்ற தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐஓடி) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் பேசியதாவது: சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஓடி இந்த திட்டத்தைச் செயல்படுத்தும். ‘மட்ஸ்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி நீர்மூழ்கி வாகனம் தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இது 25 டன் எடை கொண்ட 4-வது தலைமுறை வாகனம் ஆகும். ஆழ்கடலின் தீவிர அழுத்தம் மற்றும் வெப்பநிலையைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள…
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆகர்ஷி காஷ்யப், உனதி ஹூடோ ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நஹட் நுயனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானிடம் தோல்வி கண்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என்ற செட் கணக்கில் போராடி ஜப்பானின் கவுரு சுகியாமாவையும், உனதி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின்…
கீர்த்தி சுரேஷ், தமிழில் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ராஜ்குமார் ராவ், ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். “இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை நையாண்டியாகப் பேசும் படமாக இது உருவாகிறது. இரண்டு கல்வியாளர்களின் பார்வையில் அறிவை விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிக மயமானது என்பதையும் இந்தப் படம் சொல்லும்” என்கிறது படக்குழு. ராஜ்குமார் ராவின் மனைவி பத்ரலேகா இதைத் தனது கம்பா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டம் இயற்றியது. தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம், பூஜைமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கியது. அதன் அடிப்படையில், 2007-ல் திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, பழனி, திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டன. 240 மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்த நிலையில், 2008-ல் 207 பேர் பயிற்சி முடித்தனர். இந்நிலையில், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து, அரசின் முடிவை எதிர்த்து தடை உத்தரவு பெற்றது. இதனால் அந்த மாணவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் உச்ச…
கடந்த சில ஆண்டுகளில், சியா விதைகள் பாரிய பிரபலத்தைப் பெற்றுள்ளன, இப்போது இந்த “சூப்பர்ஃபுட்” எனக் கூறப்படுகின்றன, இது உங்களை ஹைட்ரேட் செய்கிறது, உங்களை நார்ச்சத்து நிரப்புகிறது, மேலும் புரதத்தைக் கொண்டுள்ளது! இருப்பினும், தினமும் சியா விதைகளை வைத்திருப்பது பாதுகாப்பானதா? ஆழமாக தோண்டுவோம்…சியா விதைகள் என்றால் என்ன?சியா விதைகள் கருப்பு அல்லது வெள்ளை நிறமாக இருக்கலாம், மேலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சால்வியா ஹிஸ்பானிகா தாவரத்திலிருந்து வந்தவை. இப்போது எளிதில் கிடைக்கக்கூடிய விதைகள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் ஒரு பஞ்சைக் கட்டுகின்றன. அவற்றை தண்ணீர்/பாலில் ஊறவைப்பதன் மூலம் அவற்றை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது நனைத்த பதிப்பை மிருதுவாக்கிகள், குலுக்கல், சாலடுகள் அல்லது இனிப்பு வகைகளில் கூட சேர்க்கலாம்!சியா விதைகள் எவ்வாறு உதவுகின்றன?செரிமானத்திற்கு உதவுகிறது: இது நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சியா விதைகள் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் வழக்கமானதாகவும் வைத்திருக்கின்றன.இதய ஆரோக்கியத்திற்கு…
