Author: admin

எங்களைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களில் சமீபத்திய குடியேற்ற கைதுகள் வக்கீல்கள் கவலைப்படுகின்றன (புகைப்படம்: ஆபி) ஒரு வர்ஜீனியா நீதிமன்றத்தின் உள்ளே, தெளிவான மூன்று குடியேற்ற முகவர்கள் – ஒரு முகமூடி – தவறான தாக்குதல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த ஒருவரை தடுத்து வைத்தனர். மனிதனுக்கு அடையாளம் அல்லது ஒரு வாரண்டைக் காட்ட அவர்கள் மறுத்துவிட்டனர், மேலும் தலையிட முயன்ற திகிலூட்டும் சாட்சிகளைத் தண்டிப்பதாக ஒருவர் அச்சுறுத்தினார், செல்போன் வீடியோ காட்டுகிறது. வட கரோலினாவில், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கமானது ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு பேரை கைது செய்ததாக உறுதிப்படுத்தியது, உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஏஜென்சியிலிருந்து தொடர்பு இல்லாதது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்த ஷெரிப் தூண்டினார். நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்குள், ஒரு ஜோடி முகவர்கள் ஒரு வெனிசுலா மனிதனை ஒரு லிஃப்ட் வெளியே சமாளித்தனர், ஒரு வயதானவரை கரும்புடன் தட்டச்சு செய்தனர்.…

Read More

பெலகாவி: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அமைச்சர், “அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான மதச் சுதந்திரம் உண்டு. என்றாலும் அவர்கள் பணியில் இருக்கும் போது அதில் கட்டுப்பாடுகள் உண்டு. பேருந்தில் பயணிகள் இருக்கும் போது பயணத்தின் நடுவில் பேருந்தை நிறுத்தியது ஆட்சேபனைக்குரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சம்பவம் ஏப்.29ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.…

Read More

கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல்காந்தியை பாஜகவினர் கேலிக்குரியவராக சித்தரித்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்காக பாஜகவை பணிய வைத்த வேலையை ராகுல் காந்தி செய்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும் மைக்ரோ மைனாரிட்டி (நுண் சிறுபான்மை) மக்களுக்கும் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். இதில் தமிழ்நாடு முன்னேறி போய்க்கொண்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாஜக அரசு படிப்படியாக குறைத்து அதை நிறுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை…

Read More

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து சரக்குகளை கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் சுனில்பாலிவால் கூறியுள்ளார். சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 2024-25-ம் நிதியாண்டில் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் தொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தில் உள்ள அரங்கில் இன்று (ஏப்.3) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் நிறுவன தலைவர் சுனில்பாலிவால் கூறியது: “சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்கு கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்களையும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன்களையும்…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று கூறினார். ​ கர்னாலை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும்…

Read More

ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாநில பொருளாளர் எஸ்.நாராயணன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க தலைவர் ம.அர்ஜூன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றை எங்களது கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறது. அதேசமயம் திமுக கடந்த தேர்தல்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைத்து வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை கூடுதல் வரிகளை விதித்து பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார். 10% அடிப்படை வரி, ஏப்ரல் 5, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 10 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்புமுறை ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வரும். அமெரிக்க அதிபரின் நிர்வாக உத்தரவின்படி இந்தியாவுக்கு 27% வரி விதிக்கப்பட்டுள்ளது. (ட்ரம்ப் காட்டிய வரிவிகிதப் பட்டியலில் இந்தியாவுக்கு 26% என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ உத்தரவில் 27% என தெரிவிக்கப்பட்டுள்ளது.) இந்திய தொழில்துறை…

Read More

மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார். மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் என்று நான் உறுதியுடன் இருந்தேன். ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு போராளி, எந்தச் சூழ்நிலையையும் அவர் எதிர்கொள்ளுவார், கடந்த பத்தாண்டுகளாக எந்தச் சூழ்நிலைகளையும் அவர் திறமையாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார். அவர், காஷ்மீரில் அமைதியையும் நாட்டுக்கு பெருமையையும் கொண்டுவருவார். நான் இங்கு…

Read More

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளத்தில் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார பேரணி நடந்தது. அப்போது தல்லாகுளத்திலிருந்து அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணி சென்றனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சியர் காரில் சென்று பேரணியை சீர்குலைக்க முயற்சி செய்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதனைக் கண்டித்தும், கட்சிக்கொடி ஏற்றுவது தொடர்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றக்கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்கட்சியினர் நேற்று தல்லாகுளத்தில் ஆட்சியரை பணியிட மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read More

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்று ஏஇபிசி துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக வரி கொள்கை குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வணிகப் பரிமாற்றத்தில் உள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருளின் மதிப்புக்கு ஏற்ப கூடுதல் வரி விதித்துள்ளார். வரும் 9-ம் தேதி முதல் அமெரிக்கா, அதன் வர்த்தக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய வரிகளைக் கொண்டுள்ளது. புதிய வரிகள் அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் பொருந்தும். இந்தியா 26 சதவீதம் என்ற வரி கட்டணத்தை எதிர்கொள்ளும். இந்தியாவின் ஆடை ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு 35 சதவீதம் வர்த்தக பங்கை கொண்டதால் 26 சதவீதம் வரியானது செலவுகளை அதிகரிக்கும். இதனால், இந்திய தயாரிப்புகளுக்கு போட்டித்தன்மை குறைவாகும். இந்தியாவின் முக்கியப்…

Read More