Author: admin

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக இந்தியா கூறுவது, அது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் துயரம். இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகள், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனத்தின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த அவரது அறியாமையையே காட்டுகிறது. இந்தியாவில் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்கள் திருடப்படுகின்றன அல்லது சட்டவிரோதமாக கடத்தத்தப்படுகின்றன. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டும்.…

Read More

‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தை எடுப்பதற்கு இயக்குநர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஆமிர்கான் – ராஜ்குமார் ஹிரானி இருவரும் இணைந்து படம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியானது. ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘பி.கே’ என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இதனிடையே, ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான செய்தியும் வெளியாகிவிட்டது. தற்போது, ராஜ்குமார் ஹிரானி – ஆமிர்கான் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தாதா சாகிப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது எனவும், அக்டோபரில் படப்பிடிப்பு…

Read More

மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு தம்பிரான்களை நியமனம் செய்யக் கோரி தருமபுரம் ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த சுவாமிகளுக்கு, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீன கர்த்தராக ஹரிஹர ஞான சம்பந்த தேசிகர் இருந்து வருகிறார். அவரை ஒரு சிலர் கைப்பாவையாக பயன்படுத்தி ஆதீன மடத்தின் முதன்மை நோக்கமான சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியை தடை செய்து வருகின்றனர். மதுரை ஆதீனம் மூலம் சைவத்தையும், தமிழையும் வளர்க்க பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் சொத்துக்களை தானமாக வழங்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தி மடத்தின் நோக்கம் நிறைவேற செய்தனர். தற்போதைய ஆதீன கர்த்தர் வருமானங்களை முறையாக வசூலிக்காமலும், முந்தைய ஆதீன கர்த்தர் விற்பனை செய்த மடத்தின் சொத்துக்கைள…

Read More

வரவு: இன்ஸ்டாகிராம்/கிரிக்மோர் “ஒரு உண்மையான நண்பர் எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரியவர்.” பிரான்சுவா டி லா ரோச்செஃபூபால்ட். இந்த மேற்கோள் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவின் நட்பின் சாரத்தை சரியாக இணைக்கிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரண்டு கிரிக்கெட் வீரர்களான ரோஹித் மற்றும் விராட், நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.திரையில் நட்பைக் காட்டிலும் அவர்களின் பிணைப்பு எதையாவது மீறிவிட்டது என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் கண்டோம். அவை நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக மாறிவிட்டன, சகோதரத்துவத்தின் உண்மையான உதாரணத்தை அமைக்கின்றன. நீங்கள் கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர் என்றால், இந்த இரட்டையர் அதை களத்திலும் நிஜ வாழ்க்கையிலும் கொன்றுவிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களின் நட்புகள் அதன் மையத்தில், கிரிக்கெட் என்பது களத்தில் மற்றும் வெளியே உறவுகள் பற்றியது என்பதை நினைவூட்டுகிறது, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சமும் அவர்களின் நட்புக்கு ஒரு அடுக்கைச்…

Read More

கொல்கத்தா: சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்த காரணத்துக்காக மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் பர்தாமான் மாவட்டத்தை சேர்ந்த ஷாருக் ஷேக் மற்றும் நூர் முகமது ஷேக் ஆகிய இருவரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, திங்கட்கிழமையன்று மிலன் ஷேக் மற்றும் இம்ரான் ஷேக் ஆகிய இருவர் இதே காரணத்துக்காக மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை மூன்று நாட்களுக்குள், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் பகிர்ந்தது என்ன? – பர்தாமான் மாவட்டத்தின் குஸ்கரா நகராட்சியில் வசிக்கும் ஷாருக் ஷேக் என்பவர் ஃபேஸ்புக்கில்,…

Read More

சென்னை: “இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சரியான இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்” என்று அவர் கருத்து தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த இரு நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தின் முடிவில் இன்று (மே 15) அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால், எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, கட்சி ரீதியிலான…

Read More

உங்கள் அறிவாற்றல் திறன்களை சோதிக்க, உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவின் எல்லைகளைத் தள்ளும். இது ஒரு உயர் மட்ட நுண்ணறிவு மட்டுமல்ல, பரிதாபகர்களை விரைவாக தீர்க்க விதிவிலக்கான கவனம் மற்றும் செறிவு எடுக்கும்.பாலைவனத்தில் இரண்டு ஒட்டகங்களின் புகைப்படத்தில் ஒரு பிழையை ஐந்து விநாடிகளில் அடையாளம் காண்பதே இன்றைய பணி. இது மிகவும் புத்திசாலித்தனமான நபர்களால் மட்டுமே விரிவாக தீர்க்கப்படும். உங்களால் முடியுமா? உங்கள் அவதானிக்கும் திறனை சோதிக்கும் தருணம் இப்போது! ஒரு பாலைவனத்தின் அழகான நிலப்பரப்பை நீங்கள் காணலாம், அங்கு 2 ஒட்டகங்கள் மணல் திட்டுகள் வழியாக வெப்பத்தில் நடப்பதைக் காணலாம். கீழே உள்ள பாலைவனத்தில் நிற்கும் இரண்டு ஒட்டகங்களின் படத்தில் ஒரு சிறிய பிழை மறைக்கப்பட்டுள்ளது.ஐந்து வினாடிகளில், அதை அடையாளம் காண முடியுமா? உங்கள் IQ மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் இந்த பணியால் மதிப்பிடப்படும்.நேர அழுத்தத்தின் கீழ், அதிக நுண்ணறிவு, விரைவான சிந்தனை மற்றும் தீவிரமான…

Read More

புதுடெல்லி: முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் இன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக பொறுப்பேற்றார். இவருக்கு யுபிஎஸ்சி ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்பு யுபிஎஸ்சி தலைவராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனின் பதவிக்காலம், ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக அஜய் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியலில் பிடெக் பட்டம் பெற்ற அஜய் குமார், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக கார்ல்சன் மேலாண்மைப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அஜய் குமார் 1985-ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஆகஸ்ட் 23, 2019 முதல் அக்டோபர் 31, 2022 வரை பாதுகாப்புத்…

Read More

சென்னை: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: தமிழகத்தில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 25 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதையேற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை இணையவழியில் ஜூன் 6ம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின்…

Read More

சச்சின் டெண்டுல்கரில் இருந்து தொடங்கியது கிரிக்கெட்டில் இந்த சிறுவயது சாகசங்கள். சச்சினுக்குப் பிறகுதான் வயதே புள்ளி விவரங்களில் ஒரு பகுதியாக அமையத் தொடங்கியது எனலாம். ஆனால், இதனை இந்திய ஊடகங்கள் இந்திய வீரர்களின் சிறுவயது சாகசங்களை மட்டுமே குறிப்பிடும் ஒரு குறுக்கல்வாதம் செய்ய மற்ற நாட்டின் சிறுவயது சாகசங்கள் இந்திய ரசிகர்களின் பார்வைக்கு வருவதேயில்லை. இன்று வரை இதுதான் நிலை. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை வெற்றிக் கேப்டன் பாட் கம்மின்ஸும் தன் 18 வயதில், அதுவும் தென் ஆப்பிரிக்கா என்னும் கடினமான பிரதேசத்தில் வலுவான அந்த அணிக்கு எதிராகச் செய்ததுதான் பெரிய விஷயம். 2011-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் போட்டியில் சந்தித்த போது ஆஸ்திரேலியாவின் இப்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் டெஸ்ட் அரங்கிற்கு அறிமுகமானார். அது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். முதல் டெஸ்ட்…

Read More