Author: admin

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. திருவள்ளூரில் அமைந்துள்ளது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரராகவபெருமாள் கோயில். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில் அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த வீரராகவபெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 6.30 மணியளவில், தங்க சப்பரத்தில் வீரராகவபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக விதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில், நாள் தோறும் காலை, இரவு வேளைகளில் ஹம்ச வாகனம், ஷேச வாகனம், யாளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீரராகவபெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு…

Read More

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த…

Read More

உங்கள் தலைமுடி உங்கள் கிரீடம் மகிமையாக இருக்கலாம், ஆனால் அன்றாட பழக்கவழக்கங்கள், அவற்றில் பல கவனிக்கப்படாமல் அமைதியாக உடைப்பு, மெலிந்து, நீண்ட கால சேதத்திற்கு வழிவகுக்கும்.

Read More

புதுடெல்லி: டெல்லில் இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மீட்பு பணிகளுக்காக பல குழுக்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் சென்றோம். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம்.” என்றார். கனமழையால் சாலைகளில் நீர் தேக்கம்: டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதையும், சாலையில்…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது. இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாததால், பலரும் வேறு நாடுகள் வழியாக தங்கள் தாய் நாட்டுக்குச் செல்கின்றனர். வேறு சிலர், பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி…

Read More

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கொலைகளைப் பட்டியலிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று பெருமை பேசிய முதல்வரே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல்…

Read More

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டதால், அவற்றிற்கு அதிக ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அத்துடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் சிறு கனிம நிலவரி விதிக்கப்பட்டது. இவற்றால் ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5…

Read More

அமராவதி: ஆந்​திர மாநில பிரி​வினைக்கு பிறகு ஆட்​சியை பிடித்த சந்​திர​பாபு நாயுடு அமராவ​தியை தலைநக​ராக அறி​வித்​தார். அவருக்கு அடுத்து ஆட்​சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்​கள் அமைக்​கப்​படும் என அறி​வித்​தார். இந்​நிலை​யில் 2024-ல் மீண்​டும் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு அமராவதி தான் ஆந்​தி​ரா​வின் தலைநகர் என்​பதை திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​​தார்​. இந்நிலையில் அமராவ​தி​ மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்​கல் நாட்டு விழா இன்று நடை​பெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொள்ள உள்​ளார். இதில் சுமார் 5 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வித​மாக சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு​புறம் பாகிஸ்​தான் மீது இந்​தியா போர் தொடுக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்ள நிலை​யில், இரு நாட்டு எல்​லைகளி​லும் போர்ப் பதற்​றம் நில​வு​கிறது. இன்று அமராவ​தி​யில் நடை​பெற உள்ள மாபெரும் பொதுக்​கூட்ட நிகழ்ச்​சி​யில் பிரதமர் என்ன பேசு​வார் என்​ப​தை​யும் மக்​கள் அறிய ஆவலாக உள்​ளனர். இதற்​கான ஏற்​பாடு​கள் அனைத்​தும்…

Read More

புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை ரகசியம் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸின் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் கடந்த வாரம் உரையாடல் நிகழ்த்திய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்து பாகிஸ்தான் தவறிழைத்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ மேற்கொண்ட உரையாடலில், குவாஜா எம் ஆசிப் கூறியதை வழிமொழிந்தார். “பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. இதன் விளைவாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் பல…

Read More

சென்னை: 234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தமிழகத்தில் ஏறக்குறையை 14 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. விடுப்பு கிடையாது. நிரந்தர செவிலியர்களின் ஊதியத்தில் பாதிதான் அவர்கள் வாங்குகிறார்கள். தற்காலிக செவிலியர்களின் பணியிடங்களை இன்னும் நிரந்தரமாக்கவில்லை. அதேபோல், 6,000-க்கும் மேல் காலி பணியிடங்கள் இருந்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் கிடைக்காமல் இன்னும் போராடி கொண்டிருக்கின்றனர். டாஸ்மாக், மருத்துவம், காவல்துறை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது. தேர்வானவர்கள்கூட இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு…

Read More