Author: admin

ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்​தரி காய்​கறி கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. தொடர்ந்​து, 127-வது மலர்க் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. கண்​காட்சி வரும் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தக் கண்​காட்​சி​யில் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் ஜெர்​மனி​யம் சைக்​ளோபின் பால்​சம், புதிய ரக ஆர்​னமெண்​டல்​கேல், ஓரியண்​டல் லில்​லி, பேன்சி மேரி​கோல்​டு, ஜினி​யா, டெல்​முனி​யம் உள்​ளிட்ட 275 வகை​யான, 7.5 லட்​சம் மலர்ச் செடிகள் பூங்​கா​வின் பல்​வேறு பகு​தி​களில் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், மலர் மாடம் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் 45 ஆயிரம் மலர்த் தொட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. விழா​வின் முக்​கிய அம்​ச​மாக சோழர்​களின் பெரு​மையை விளக்​கும் வகை​யில் ராஜ​ராஜ சோழனின் அரண்​மனை உரு​வம் 2 லட்​சம் கார்​னேசன் மற்​றும் ரோஜா, கிரை​சாந்​தம் மலர்​களால் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, கரி​கால​னால் கட்​டப்​பட்ட கல்​லணை…

Read More

அமெரிக்காவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அரிசி பிராண்டுகள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆர்சனிக் மற்றும் காட்மியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கை முன்னுக்கு வந்துள்ளது.அமெரிக்கா முழுவதும் உள்ள மளிகை மற்றும் சில்லறை கடைகளில் இருந்து நான்கு மாதிரிகளில் ஒன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கனரக உலோகங்களின் அதிகப்படியான அளவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.”குறைந்த மட்டத்தில் கூட, ஆர்சனிக் மற்றும் காட்மியம் இரண்டும் நீரிழிவு, வளர்ச்சி தாமதங்கள், இனப்பெருக்க நச்சுத்தன்மை மற்றும் இதய நோய் உள்ளிட்ட கடுமையான சுகாதார பாதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று ஆய்வின் இணை ஜேன் ஹூலிஹான் சி.என்.என்.”இளம் குழந்தைகளில் ஹெவி மெட்டல் மாசுபடுவது குறிப்பாக உள்ளது, ஏனெனில் ஆரம்பகால வாழ்க்கை வெளிப்பாடுகள் குறைக்கப்பட்ட ஐ.க்யூ மற்றும் அறிவாற்றல் மற்றும் நடத்தை சிக்கல்களுடன் தொடர்புடையவை” என்று ஹூலிஹான் மேலும் கூறினார்.இந்த நச்சு கனரக உலோகங்கள் எங்கள் சமையலறைகளுக்குள் நுழைகின்றன, அவை மொத்தமாக இல்லை, அவை…

Read More

சென்னை: ‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் இமாமே ஹிந்த் செய்யது சாதிக் அலி சிஹாப் முன்னிலை வகித்தார். தேசிய பொதுச்செயலாளரும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி வரவேற்றார். கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட விரோதப் போக்குகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் துயர இழப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தேசியத் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் தேர்வு…

Read More

எங்கள் கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், செரிமானம், நச்சுத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற முக்கியமான பணிகளைச் செய்கிறது, இரத்தத்திற்கான வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், சில நேரங்களில் கல்லீரல் பலவீனமாக மாறும், கல்லீரல் சிரோசிஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும், இது முற்போக்கானது, சிகிச்சையளிக்க முடியாதது மற்றும் பெரும்பாலும் ஆபத்தானது. இருப்பினும், கல்லீரல் சேதத்தில் ஆல்கஹால் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், உங்கள் கல்லீரலையும் சேதப்படுத்தும் ஒரு உணவு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது பதப்படுத்தப்பட்ட உணவு. பார்ப்போம்.

Read More

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்தது. அதன்படி, தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிடுகிறார். 10-ம் வகுப்புக்கு காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகளை மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து…

Read More

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நேற்றிரவு மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்களிடமிருந்து விடைபெற்று அழகர்கோவில் மலைக்குப் புறப்பட்டார். இன்று (மே 16) காலை கோயிலை அடைகிறார். மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்க அழகர்கோயிலிருந்து கடந்த மே 10-ம் தேதி மதுரை புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று, அழகர்கோவில் மலைக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். வழிநெடுகிலும் மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்றிரவு 7 மணியளவில் மூன்றுமாவடி சென்றடைந்தார். அங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த…

Read More

ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன்மூலமாக, பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து…

Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், நேற்று காலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரியும் டெல்லி சென்றனர். இது ஆளுநரின் வழக்கமான பயணம் என ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டாலும், பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் அவர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பயணத்தை முடித்து வரும் வரும் 18-ம் தேதி மீண்டும்…

Read More

புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. ‘மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக…

Read More

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப்-2 மெயின் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. குருப்-2 பணிகளுக்கான மெயின் தேர்வு, கடந்த பிப்ரவரி 8 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற்றது. பவ்வேறு பதவிகளில் 537 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய அத்தேர்வை 5,553 பேர் எழுதினர். இந்நிலையில், மெயின் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிட்டது. தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களின் மதிப்பெண், தரவரிசையை தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். குருப்-2 ஏ சான்றிதழ் சரிபார்ப்பு: இதனிடையே, கடந்த மே 5-ம் தேதி வெளியிடப்பட்ட குருப்-2-ஏ மெயின் தேர்வு முடிவின்படி, கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலையும் டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை மே 16 முதல் 25-ம் தேதி வரை தேர்வாணையத்தின்…

Read More