புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆவணங்களை சரிபார்க்குமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அகமது தாரெக் பட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் காஷ்மீரில் வசித்து வருவதாகவும், தங்கள் மகன் பெங்களூருவில் பணிபுரிவதாகவும் ஆனால், விசா காலம் முடிந்துவிட்டதாகக் கூறி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்த அதிகாரிகள் தங்களை தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்தப் பிரச்சினை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் உள்ளது. விசா காலாவதியானதாகக் கூறப்படும் ஆறு பேரின் அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது போன்ற கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். ஆவணச் சரிபார்ப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஜம்மு…
Author: admin
சென்னை: கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். மேலும், கோடை விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே சென்னை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சில பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துவதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது வெயில்…
‘ரோலக்ஸ்’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கிவைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய லோகேஷ் கனகராஜ், “‘ரெட்ரோ’ படம் இன்னும் பார்க்கவில்லை. படம் ரொம்ப நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். கார்த்திக் சுப்புராஜ் படம் கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும். ‘கூலி’ படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நானும் சூர்யா சாரும் இணைந்து படம் பண்ணுவோம். அதுதான் ‘ரோலக்ஸ்’. அடுத்து சூர்யா சாரும் நிறைய படங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். நானும் படங்கள் இயக்க இருக்கிறேன். நேரம் வரும்போது இருவரும் இணைந்து படம் பண்ணுவோம். அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். ஆனால், கண்டிப்பாக ‘ரோலக்ஸ்’ செய்தே ஆக வேண்டும்” என்றார் லோகேஷ் கனகராஜ்.
சென்னை: ஜிஎஸ்டி வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி, 285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342 ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், “மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும்.…
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1937-ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஏஜெஎல் நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் ஆகிய நாளிதழ்கள் 2008 வரை வெளிவந்தன. அதன்பின் இந்நிறுவனம் இழப்பை சந்தித்து முடங்கியது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா, பஞ்ச்குலாம் ஆகிய இடங்களில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்நிறுவனம் நாளிதழ்களை…
சேலம்: ராமானுஜரின் 1008-வது அவதார ஜெயந்தி உற்சவத்தையொட்டி, சேலத்தில் உள்ள ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ராமானுஜரின் 1008-வது திருநட்சத்திர அவதார ஜெயந்தி உற்சவம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் எருமாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையொட்டி, மணிமண்டப வளாகத்தில் காலை 7 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருவாராதனம் ஆகியவை தொடங்கி நடைபெற்றன. பின்னர், 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராமானுஜரின் பிரம்மாண்டமான திருவுருவச்சிலையின் முன்பாக, ஸ்ரீ ராமானுஜர் உற்ஸவ மூர்த்திக்கு 108 கலச ஸ்தபன விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமானுஜ நூற்றந்தாதி பாராயணமும் நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா…
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார். ‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. இவருடைய வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். மேலும், பல படங்கள் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ப்ளாக் ஷீப் யூடியூப் தளத்தில் இருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கியவர் வி.ஜே.சித்து. ப்ளாக் ஷீப் அணியில் இருந்து பலரும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் வி.ஜே.சித்துவும் இணைந்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘டயங்கரம்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் வி.ஜே.சித்து, அவரது யூடியூப் சேனல் குழுவினர், நடிகர் இளவரசு மற்றும் ஐசரி…
சென்னை:“பொதுமக்களுக்கு சுயபாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இலவச தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும்” என்று, சர்வதேச கராத்தே பயிற்றுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் எஸ்.பாலமுருகன் இன்று (மே 2) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்களது கராத்தே சங்கம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 55 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டது. நமது முன்னோர்கள் நமக்கு தந்து சென்ற பாதுகாப்பான சமுதாயத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். தொழில்நுட்பத்தில் மிகவும் நவீனமயமான இந்த உலகில் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்களின் சுயபாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, பொதுமக்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5 ஆயிரம் கராத்தே மாஸ்டர்கள் 8 கோடி பேருக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,…
புதுடெல்லி: ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ‘கண்ணியத்துடன் கூடிய முதுமை’ எனும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “நமது கடந்த காலத்துடன் ஒரு முக்கிய இணைப்பாகவும், நமது எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் மூத்த குடிமக்கள் திகழ்கிறார்கள். நமது மூத்த குடிமக்கள் ஞானம், விவேகம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அவர்களின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியம் ஒரு பகிரப்பட்ட கடமை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் இருப்பை மதிப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை மதிப்பதும், அவர்களின் தோழமையை மதிப்பதும் முக்கியம். முதியோர் வாழ்வில் கண்ணியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளதற்காக நான் பாராட்டுகிறேன். மூத்த குடிமக்களுக்காக ஒரு பிரத்யேக போர்டல் தொடங்கப்பட்டதற்கு எனது…
நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. மே 1-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வசூல் படைக்கும் இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார் நானி. சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹிட் 3’. முதல் இரண்டு பாகமுமே பெரும் வெற்றியடைந்து இருந்ததால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்தினார் நானி. இது அவருக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. நானியின் திரையுலக வாழ்க்கையில் ‘ஹிட் 3’ படத்தின் முதல் நாள் வசூல் அதிகம்…
