சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 20 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம். நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன. எஞ்சியுள்ள 8 அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் உள்ளன. இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். மும்பை இந்தியன்ஸ்: நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த அணி சிறந்த நெட் ரன் ரேட் கொண்டுள்ள காரணத்தால் டாப் 4…
Author: admin
சென்னை: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையிலும், அதுதொடர்பாக எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் மென்பொருளை உருவாக்க வேண்டும். கட்டிடங்களில் கட்டுமான பணி முடிந்த பிறகு, தற்காலிக இணைப்பில் இருந்து நிரந்தர வகைக்கு இணைப்பு மாற்றவும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய ஆவணங்களின் அதிகபட்ச அளவு போதுமானதாக இல்லை. குறைந்தது 5 எம்.பி. அளவுக்கு அதிகரிக்க வேண்டும். மின்கட்டணம்…
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால், பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அந்நாட்டின் முக்கிய பங்குக்குறியீடான ‘கேஎஸ்இ – 100’ ஏப்ரல் 22 முதல் 30-ம் தேதி வரை மட்டும் 8,000 புள்ளிகள் (6%) சரிவடைந்துள்ளது. ரத்தக்களரி ஆன ஏப்.30: ஏப்ரல் மாத இறுதி பாகிஸ்தான் சந்தை வர்த்தகமானது ரத்தக்களரியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 30 அன்று கேஎஸ்இ – 100 ஒரேநாளில் 3,545 புள்ளிகள் (3.09 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 111,326.57 ஆக இருந்தது. பல ஹெவி வெயிட் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்திருந்தன. குறிப்பாக, நான்கு முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் மொத்தமாக 1,132 புள்ளிகள் சரிந்திருந்தன. ஆறுதல் அளித்த மே 2: பல நாள் இடைவிடாத சரிவுக்கு பின்பு, மே 2-ம் தேதி பாகிஸ்தான் பங்குச் சந்தை சற்றே ஆறுதல் அளித்து சிறிய…
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் கணினி ஆய்வகம் அமைப்பதற்காக எனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னைப் பல்கலைக்கழகம் அதன் வளங்களை பயன்படுத்தாமல் சீரழிவை உணர முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த கவுரி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். தேர்வுக்குழு அமைப்பது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல்…
புதுடெல்லி: “நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும் பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பை ஒடுக்க முயன்ற மோடி அரசு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி, எண்ணற்ற சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக இப்போது அடிபணிந்துள்ளது. சமூக நீதிக்கான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். நேற்று வரை அப்பெயரை சொல்வதைக் கூட தவிர்த்து, அதனைத் தாமதப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் எந்தவொரு விஷயத்தையும் தவறவிட்டுவிடாத மோடி அரசு, மக்களின் பெரிய அளவிலான நெருக்கடி மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு…
சென்னை: அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்: > 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும், திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளைக் கூட்டணியில் இடம்பெறச் செய்து ‘மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள். > 2021 சட்டமன்றத் தேர்தலின்போது 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களைத் தந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். > ‘நீட்’ ரத்து விஷயத்தில்…
இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குவதும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், கற்றல் விளைவுகளையும் பள்ளிகளில் மதியம் உணவு அல்லது மதிய உணவு பற்றிய யோசனை. நிபுணர்களின்படி, சீரான உணவு ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகளின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஆனால் சமீபத்தில், ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வடகிழக்கு நகரமான மொகாமாவில் பள்ளி மதிய உணவை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டனர்.தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) படி, வடகிழக்கு நகரமான மொகாமாவில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த வாரம் பள்ளி உணவை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டனர். இறந்த பாம்பை அகற்றிய பின்னர் பள்ளி சமையல்காரர் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.இரண்டு வாரங்களுக்குள் இந்த சம்பவம் குறித்த “விரிவான” அறிக்கையை வழங்குமாறு உள்ளூர் காவல்துறையினர் கோரியுள்ளனர், இது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சுகாதார நிலையை…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் பெருமை மிக்க இந்திய கடற்படை குடும்ப உறுப்பினரும், கல்வியாளருமான லலிதா ராம்தாஸ். முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் குறிவைக்கப்படுவதற்கு எதிராக ஹிமான்ஷி பேசியது பேசுபொருளானது நிலையில், இந்தப் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி ஹிமான்ஷி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நேற்று (மே 1) வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே ‘கனிமா’ பாடல் தாறுமாறான வைரல், அல்போன்ஸ் புத்திரனின் ‘வித்தியாசமான’ எடிட்டிங்கில் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு, சூர்யாவின் கெட்-அப் என பல பாசிட்டிவ் அம்சங்களுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படம் வெளியான முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் சூர்யா ரசிகர்களையும் கூட திருப்திபடுத்தவில்லை என்பதை ஆடியன்ஸ் விமர்சனம் + சமூக வலைதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ’கங்குவா’ படத்தோடு ஒப்பிட்டு, அதற்கு இது பரவாயில்லை என்று சொல்லும் பல விமர்சனங்களை பார்க்க முடிகிறதே தவிர, ஒட்டுமொத்தமாக படத்தை பாராட்டுபவர்கள் குறைவாகவே தென்படுகின்றனர். ஒருகாலத்தில் விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளி தொடர் ஹிட் படங்களை கொடுத்து ‘டயர் 1’ நடிகராக இருந்த…
சென்னை: சென்னையில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை, மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணா நகர் 2-வது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் சாலை, பெசன்ட் நகர் 6-வது அவென்யூ, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு மெக்நிக்கோலஸ் சாலை ஆகிய இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி முன்னாள் படைவீரர் கழகமான டெக்ஸ்கோ நிறுவனத்திடம் கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி வழங்கப்பட்டது. மென்பொருளில் திருத்தம்: டெக்ஸ்கோ நிறுவனம்…
