சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஏப்.28) நடைபெற உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி,…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில், பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு, பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில், “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற ‘போராளி தாக்குதலை’ தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ள மத்திய அரசு, பிபிசியின் செய்தி அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும்…
Last Updated : 04 Mar, 2025 12:20 PM Published : 04 Mar 2025 12:20 PM Last Updated : 04 Mar 2025 12:20 PM சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனுடன் கேலக்சி ஏ36 மற்றும் ஏ26 போனையும் சாம்சங்…
சென்னை / தருமபுரி: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சென்னையில் ஆடிட்டர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள். இவர்களில் மூத்த மகன் சிவச்சந்திரன் (28) சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து சி.ஏ தேர்விலும் வெற்றி பெற்றார். இருப்பினும் காவல் துறையில் பணியாற்றும் விருப்பத்துடன் இந்திய குடிமைப் பணி தேர்வுக்காக சில ஆண்டுகளாக படித்து வந்தார். 4 முறை இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டபோதும் நடப்பு ஆண்டில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது வெளியான குடிமைப் பணி தேர்வு முடிவுகளின்படி சிவச்சந்திரன் இந்திய அளவில் 23-வது இடத்திலும், தமிழக அளவில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த…
புதுடெல்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரும் மே 24-ம் தேதி பெங்களூருவில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்தார். மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்திருந்தார். இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாதலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் வீரருக்கு…
வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலமானார். மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர். போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும், தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து, அந்தச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார். போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16…
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது. விழாவில், கடந்த 10-ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தியும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை சார்த்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு சைவ வேளாளர்கள் சங்கத்தில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.…
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்திடம், பஹல்காம் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள். அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது. மத்திய அரசு…
சென்னை: “காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம். எனவே, எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இருப்பதாக பேசியிருந்தார். அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பதிலளித்து பேசினர். இதைத் தொடர்ந்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “உறுப்பினர் வானதி சீனிவாசன் உரையாற்றியபோது ஆடிட்டர் ரமேஷ் தொடர்பான கொலை பற்றிக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்தக் கொலை என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று, காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று நடக்கக்கூடாது என்று இங்கே பேசியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதுபோன்று நிச்சயமாக நடைபெறவே நடைபெறாது என்பதை…
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்பு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தொடந்து 4-வது நாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “ஏப் 27 – 28 இடைப்பட்ட இரவில், பூஞ்ச் மற்றும் குப்வரா மாவட்டங்களின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் இதற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது” என்றனர். இந்த தாக்குதல்களில் உயிர்ச் சேதம் ஏதும் பதிவாகவில்லை. பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பல்வேறு இடங்களில்…
