Author: admin

ஸ்ரீநகர்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்பு, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் நடந்தது. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஜீலம் நதியால் நிரம்பிய வுலர் ஏரியை புனரமைக்க முயற்சி செய்யும் துல்புல் திட்டம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு திட்டம் நிறுத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு ஏப்.23-ம் தேதி சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வியாழக்கிழமை கோரியிருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உமர் அப்துல்லா வெளியிட்டிருந்த பதிவில், “வடக்கு காஷ்மீரில் உள்ள வுலர் ஏரி. இந்த வீடியோவில் நீங்கள்…

Read More

மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 13 மத்தியப் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர 5 பல்கலைக் கழகங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே மிகவும் குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகின்றன. மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான ஹாஸ்டல் வசதியும் இங்குண்டு. மத்தியப் பல்கலைக் கழங்களுக்கு என நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் ஏதாவது ஒரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் (ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஹரியாணா, ஜம்மு, ஜார்க்கண்ட், காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பிஹார், பெர்ஹாம்பூர்) சேர்ந்து படிக்கலாம். தமிழகத்தில், திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிக்க 60 சதவீத மதிப்பெண்களோடு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.…

Read More

அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அளவுக்கு மதுபான ஊழல் நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டினார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு பெரிய மதுபான ஊழல் நடந்ததாக ஆந்திர கலால் துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான பிராண்டுகளுக்கு சாதகமாக செயல்பட தானியங்கி ஆர்டர் செய்யும் முறையை முடக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். ஆந்திராவில் நடந்ததாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் மே 9 அன்று பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது. 2019 மற்றும் 2024 க்கு இடையில், மதுபானக் கொள்கை சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் நன்கு திட்டமிடப்பட்ட ரூ.3,200 கோடி ஊழல் நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறியது. முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும்…

Read More

சென்னை: “தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட10 நாட்களில் 1,69,634 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்,” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியது: “கடந்த மே 7-ம் தேதி அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள மற்றும் விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டது. இன்று (மே 16) மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 மாணாக்கர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் 53,624 மாணவர்களும் 48,514 மாணவிகளும் ஆக மொத்தம் 1,02,138 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது பொறியியற் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 6-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும்,…

Read More

காசா சிட்டி: “நாங்கள் காசாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது பதவிக் காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வளைகுடா நாடுகளில் தொடங்கிய ட்ரம்ப், முக்கிய நட்பு நாடான இஸ்ரேலை தவிர்த்துவிட்டார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் மார்ச் மாதத்தில் முறிந்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான தாக்குதலை தொடங்கியது. இது அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறையை கடுமையாக்கி உள்ளதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்நிலையில், அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் காசாவைப் பார்த்து வருகிறோம். அதை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நிறைய பேர் பட்டினியால் வாடுகிறார்கள்,” என்று கூறினார். காசாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டதாகவும், ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்ததால் டஜன் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. “நாங்கள்…

Read More

மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர், பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு இன்று (மே 16) காலையில் கோயிலுக்கு திரும்பினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மலர்கள் தூவி வரவேற்றனர். அப்போது 21 பெண்கள் பூசணிக்காயில் தீபமேற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்தனர். மதுரை அழகர்கோவில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் நேரிக்கம்புடன் மே 10-ல் அழகர்மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மே 11-ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். மே 12-ல் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடிக் கொண்டு ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்பு சித்ரா பவுர்ணமியன்று அன்று காலை 5.59 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை…

Read More

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய 3 பேர் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 80…

Read More

பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கவும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவும் இந்தியா இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கினிகேரா விமானப்படை தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “காஷ்மீரில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் அடைக்கலம் கொடுப்பதும் பாகிஸ்தான்தான். என்னைப் பொறுத்தவரை, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு உதவாமல், ஒத்துழைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும், பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாம் அமைதியாக இருக்க முடியாது. பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்துக்கு…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனியார் பள்ளிகள் 96.86 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரியில் அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன. இருப்பினும் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை கடந்த மார்ச் மாதம் எழுதினர். இதில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 3,912 மாணவர்கள், 3,627 மாணவிகள் என மொத்தம் 7,539 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 3,739 மாணவர்கள், 3,563 மாணவிகள் என மொத்தம் 7,302 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.86 ஆகும். புதுச்சேரி, காரைக்கால் இரு பிராந்தியங்களிலும் தனியார் பள்ளிகள் 100 உள்ளன. இதில். புதுச்சேரியில் 29, காரைக்காலில் 11 என 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. பல்வேறு பாடங்களில் 100…

Read More

திருநெல்வேலி: “தமிழகத்தின் நிதிநிலை குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே, காலம் கனியும்போது மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்” என்று மின்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். திருநெல்வேலியில் நேற்று மாலையில் சூறை காற்றுடன் பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. திருநெல்வேலி தச்சநல்லூரில் மின்தடையால் எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று (மே 16) ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “எதிர்பாராத வகையில் சூறை காற்றுடன் கோடை மழை பெய்யும்போது பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் பெய்த கோடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் செய்யப்பட்டுவிடும். மின் வாரியத்தில் போதுமான…

Read More