மும்பை: மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரெட்டிக்கு சொந்தமான 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது இவரது வீடுகளில் இருந்து ரூ.23.25 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், தங்கக் கட்டிகள், ரூ.8.6 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாசை விரார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு நிலங்களில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டுவதற்காக இவர் பலரிடம் லஞ்சமாக இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டு முதல்…
Author: admin
மதுரை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து, இந்து பட்டியலின இடஒதுக்கீட்டில் போட்டியிட்ட அதிமுக பெண் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2022 உள்ளாட்சித் தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு 8-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அமுதாராணி, பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பதவி பட்டியலினத்துக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்டிருந்தது. அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்தார். தேர்தலில் இதை மறைத்துவிட்டார். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் வேறு மாதத்துக்கு மாறினால், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது. எனவே, அமுதாராணியின் எஸ்.சி. சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு…
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் அன்புமணி, எம்எல்ஏ-க்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம், மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. ஏறத்தாழ 180 நிர்வாகிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் சுமார் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர். இக்கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தால், காலை 10 மணிக்குத் தொடங்க…
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது பணிக் காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினமே அவர் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது. இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பும், யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு உள்ளது என்பது போன்ற விவாதங்களும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால்,…
சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 8.07 லட்சம் மாணவர்களில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 6.43 சதவீத மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 282 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,042 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 மையங்களில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 8.18 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், 4.25 லட்சம் மாணவிகள், 3.82 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 8.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 11,025 பேர் பங்கேற்கவில்லை. சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார். மதியம் 2 மணி அளவில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள்…
ஊட்டி: 2026-ல் மட்டுமின்றி 2031-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட யானைப் பாகன்களுக்கான குடியிருப்புகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பி சேவை, வனச் சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2.93 கோடியில் 32 வாகனங்களின் சேவை உள்ளிட்டவற்றைத் தொடங்கிவைத்தார். நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார். இந்நிலையில், நேற்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதஸ்வர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊட்டியில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்தது. மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவர்,…
ப Buddhist த்த உணவு பெரும்பாலும் சைவ உணவு அல்லது சைவ உணவு உண்பவர், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் போன்ற புதிய, பருவகால மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளில் கவனம் செலுத்துகிறது. துறவிகள் பணக்கார, காரமான அல்லது அதிகப்படியான இனிப்பு உணவுகளைத் தவிர்க்கிறார்கள், அவை பசி அல்லது அச om கரியத்தைத் தூண்டும். இந்த எளிய, தாவர அடிப்படையிலான உணவில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் ஊட்டச்சத்துக்கள் அதிகம், இது எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது.
மற்றவர்களின் எதிர்மறையும் வெறுப்பும் உங்களை அவர்களின் நிலைக்கு இழுக்க விடாதீர்கள். அதற்கு பதிலாக, அமைதியாகவும், இசையமைக்கவும் மற்றும் வெறுப்பு அல்லது தற்காப்புடன் பதிலளிப்பதற்குப் பதிலாக தயவுடன் பதிலளிக்கத் தேர்வுசெய்க. உங்கள் சக்தியை நீங்கள் அவர்களுக்கு வழங்கவில்லை என்பதையும், உங்களையும் நிலைமையையும் நீங்கள் இன்னும் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. உங்கள் கருணை வலிமை, முதிர்ச்சி மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு ஆகியவற்றைக் காட்டுகிறது. மேலும், அவர்களின் அணுகுமுறை மாறாவிட்டாலும், உங்கள் ஒருமைப்பாட்டுடன் நீங்கள் விலகிச் செல்வீர்கள்.
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் உள்ளார். நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க…
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வரையறுத்து உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக,…
