உடலின் அனைத்து உறுப்புகளையும் போலவே, நம் மூளைக்கும் கூர்மையாகவும், ஃபிட்டராகவும் உடற்பயிற்சி தேவை. உளவுத்துறை ஒரு பரந்த கருத்தாகும், இது மரபணுவாக இருக்கும்போது (உங்கள் பெற்றோர் இருந்தால் நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பீர்கள்), கற்றல், வாசிப்பு, மக்களைச் சந்திப்பது மற்றும் பயணம் செய்வதன் மூலமும் இது பயிரிடப்படலாம்! ஆமாம், எங்கள் மூளை ஒரு அற்புதமான உறுப்பு, மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்களைத் தவிர, யோகாவும் மூளை சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அது உண்மை …யோகாவில் குந்துதல் சக்திபடி சத்குருயோகா என்பது ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த யோகா நடைமுறையாகும், இது மூளை சக்தியை அதிகரிக்கும். அவரைப் பொறுத்தவரை, குந்துதல் முதுகெலும்பைப் பயன்படுத்துகிறது, இது மன தெளிவு மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. இந்த பண்டைய தோரணை வெறும் உடல்-இது முதுகெலும்பின் இடுப்பு பகுதியை செயல்படுத்துகிறது மற்றும் அதனுடன் கூடிய தசைகளை பலப்படுத்துகிறது, இது ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டை ஆதரிக்கிறது.உளவுத்துறையுடன் முதுகெலும்பின்…
Author: admin
கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன .எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னரே அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதற்கு முன்னர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்றதாகவே இருந்தன” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாக்கெட் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்தப் பதிவில், “2014-ம்…
‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் எனக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவதாக நானி தெரிவித்துள்ளார். சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி தயாரித்து, நடித்த படம் ‘ஹிட் 3’. உலகமெங்கும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நாட்களில் 62 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதை முன்னிட்டு படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் நானி, “திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. ‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் என்று கேட்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் ஆரம்பம் தான். இந்தப் பயணம் எவ்வளவு தூரம் செல்லும் என்று தெரியவில்லை. எனவே, இன்னும் பெரிய அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்கிறேன். ஏனென்றால் இன்னும் 4 அல்லது 5 முறையாவது இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். இந்த வெற்றி இன்னும் பொறுப்பை அதிகமாக்குகிறது. சைலேஷை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.…
சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நல்லதம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “உயர்மட்டக் குழு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான்…
உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றவர் – அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் டோஜ் தலைமை தாங்குதல், ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது, மின்சார கார்களைக் கட்டுவது மற்றும் தொழில்நுட்ப உலகத்தை கிட்டத்தட்ட தினமும் தனது அசத்தல் யோசனைகளுடன் அசைப்பது. ஆனால் எலோன் மஸ்க் மற்றவர்களை விட அதிகமாகச் செய்ய முடியும், அவருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரம் இருப்பதைக் கருத்தில் கொண்டு? தீவிரமான உற்பத்தித்திறனுக்கான மஸ்கின் ரகசிய பழக்கம் வியக்கத்தக்க எளிமையான ஒன்று: ஐந்து நிமிட விதி. எனவே, எலோன் மஸ்கின் ஐந்து நிமிட விதி என்ன அது உங்களையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா? இதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ள இங்கே படியுங்கள்:எலோன் மஸ்கின் 5 நிமிட விதி ஐந்து நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது அல்லது ஒரே இரவில் வெற்றியை அடைவது பற்றி அல்ல. மஸ்க் தனது நாளை எவ்வாறு ஒழுங்கமைக்கிறார் என்பது…
பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது, 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளிட்டுள்ள சுற்றறிக்கையில்,. ‘ஸ்ரீகாவோவில் ஸ்ரீலைராய் தேவி கோயிலில் ஜாத்ரா திருவிழாவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு சார்பில் நடக்க இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களையும் ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளும் இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசல் சம்பவம்…
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் இப்படத்துக்கு கிடைக்கும் வசூல் வைத்தே, இதன் வெற்றி உறுதி செய்யப்படும். இப்படத்தை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கார்த்திக் சுப்பராஜ், “‘ரெட்ரோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும், திரையரங்குகளில் ஒலித்த ஆரவாரம், கைதட்டல் மற்றும் உங்களுடைய அன்பை வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி. இது நல்ல நேரத்துக்கான தொடக்கம் என்று தெரியும். ஆனால், இதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மத்தியஸ்தம் மையத்தில் வழக்கு தொடர்பவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழகறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்குமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் கொடுத்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது. மாற்றுமுறை தீர்வாக செயல்படுத்தப்படும் இந்த மத்தியஸ்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு குழு உள்ளது. இந்தக் குழுவில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு மத்தியஸ்தம் தொடர்பாக விவாதித்தல், சர்வதேச மத்தியஸ்த மையம் அமைத்தல், உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தை வலுப்படுத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்.…
சில கோடைகால சிறப்பு லெஹங்காக்கள் இங்கே.
’குட் பேட் அக்லி’ மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. அஜித் ரசிகர்களும் இப்படத்தினைக் கொண்டாடித் தீர்த்தார்கள். தற்போது இப்படம் மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பினை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடியில் இப்படம் எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவரும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை…
