சென்னை: “தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம் – ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகளான ராமசாமி – பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை…
Author: admin
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றியமைத்துள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த இந்த கார், திருமணங்களில் மணமகனுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. பட்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் பத்வா பிரதாப்கரின் கடைவீதி பஜாரில் ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் வடிவிலான கார், அவரது கண்களில் தென்பட்டுள்ளது. இந்த காரை ரோஹிடாவைச் சேர்ந்த தினேஷ் குமார் படேல் என்ற ஓட்டுநர் ஒட்டி…
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததற்காக கேரளா கிரிக்கெட் சங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து, ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம். கேரளா கிரிக்கெட் லீகின் ஏரீஸ் கொல்லம் செய்லர்ஸ் அணியின் சக உரிமையாளராகவும் ஸ்ரீசாந்த் இருப்பதால், அந்த அணி உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம். அதாவது, சஞ்சு சாம்சன் விவகாரத்தில், “அடிப்படை ஆதாரமற்ற, கேரள கிரிக்கெட் சங்கத்தின் நேர்மைக்குக் களங்கம் ஏற்படும் விதமாக ஸ்ரீசாந்த் பேசியதால் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளா கிரிக்கெட் சங்கம் குறித்து அவதூறாகப் பேசிய சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் மற்றும் அவரது கருத்துக்களை ஒளிபரப்பிய 24 நியூஸ் சேனலின் ஆங்கர் ரெஜி லூகோஸ் ஆகியோருக்கும் கேரளா கிரிக்கெட் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் ஹசாரே டிராபியில் தன் மகன் சஞ்சுவை கேரளா அணியில்…
சென்னை: “பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நமது பலமே திமுகவின் கட்டுமானம்தான். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத இந்த நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பிக்கிறோம். புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வரும் தடங்கல்களை உங்கள் உழைப்பால் வெல்ல வேண்டும். பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதனால் அச்சுறுத்தி, அதிமுகவை அடக்கிவிட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்காவிட்டால் சொந்த கட்சியில் அவரது தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை…
புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடாடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவிழ்த்து விடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட…
இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார். ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கவாஜா அசிஃப் அளித்த பேட்டியில், “சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கியாலோ துப்பாக்கியாலோ சுடுவது மட்டுமில்லை; அதற்கு பல முகங்கள் உள்ளன. தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதோ, திசைத் திருப்பி விடுவதோ அதில் ஒன்று .இது தாகம், பட்டினி மரணங்களுக்கு வழிவகுக்கும். நாங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதல்ல. சம்பந்தப்பட்டவர்களை பாகிஸ்தான் அணுகும்” என்று தெரிவித்தார். மேலும், இந்தியா தொடர்ந்து…
சூர்யா – வெங்கி அட்லுரி இணையும் படத்தின் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ரீதியாக படம் வெற்றியா, தோல்வியா என்பது தெரியவரும். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பணிகளை முடிக்கும் முன்பே, வெங்கி அட்லுரி படத்தின் பணிகளைத் தொடங்க சூர்யா திட்டமிட்டு இருக்கிறார். நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் இதன் ஓடிடி உரிமையினை 85 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இது பெரும் விலையாகும். வெங்கி அட்லுரியின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும்…
சென்னை: “பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன? ஏனென்றால், மத்திய பாஜக ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்துகிறது, செய்தியாளர்களைச் சிறையில் தள்ளுகிறது, பாஜக அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது. உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று, யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல,…
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு தாயானதைத் தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகி இருந்தார் தீபிகா படுகோன். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ‘கிங்’ படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தீபிகா படுகோன். அதனைத் தொடர்ந்து பிரபாஸுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தீபிகா படுகோன். இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘கல்கி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். 2024-ம் ஆண்டு ‘ஸ்பிரிட்’ படம் தொடங்க இருந்தபோது, முதலில் தீபிகாவிடம் தான் பேசினார்கள். அச்சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டதால் இப்போது மீண்டும் தீபிகாவிடமே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.
மதுரை: “தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை,” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது என பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தியாவில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. அதில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக பங்கெடுத்துள்ளது. இந்திய மாநில கட்சிகளில் மத்திய…
