Author: admin

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார், தீபிகா படுகோன். இவர் பிரபாஸ் ஜோடியாக ‘கல்கி 2898’ ஏடி படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு அதிக சம்பளம் என்று கூறப்பட்டது. ஆனால் எவ்வளவு என்று கூறவில்லை. இப்போது மீண்டும் பிரபாஸ் ஜோடியாக ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்தப் படத்துக்காக நடிகை தீபிகா படுகோனுக்கு ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கைவிட தீபிகா அதிக சம்பளம் வாங்குவதாகவும் இந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுதான் என்றும் இணையத்தில் கூறி வருகின்றனர்.

Read More

சென்னை: நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல் நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், குறிப்பிட்ட பாடலில் ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டதாகவும், பாடல் டியூன் ‘மியூட்’ செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதையும், டியூன் ‘மியூட்’ செய்யப்பட்டதையும் சரிபார்த்து தெரிவிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,…

Read More

நான்சி தியாகி மீண்டும் கேன்ஸில் வந்துள்ளார், இந்த நேரத்தில், அவள் முழு பச்சை தெய்வம் போய்விட்டாள். ஆனால் செல்வாக்கு செலுத்துபவரின் இரண்டாவது சுய தயாரிக்கப்பட்ட கவுன் தலைகளைத் திருப்பினாலும், எல்லா கிசுகிசுக்களும் போற்றப்படுவதில்லை.நான்சி தியாகி யார்?டெல்லியைச் சேர்ந்த 23 வயதான பேஷன் கிரியேட்டர், கடந்த ஆண்டு தனது 20 கிலோ இளஞ்சிவப்பு சிதைந்த கனவு ஆடையுடன் 1000 மீட்டர் துணியில் தைக்கப்பட்டார், கேன்ஸ் 2025 சிவப்பு கம்பளத்திற்கு மற்றொரு DIY ஷோஸ்டாப்பருடன் திரும்பினார். புதினா பச்சை மற்றும் கற்பனை ஆடை பிளேயரின் நிழல்களில் நனைந்து, இந்த ஆண்டு அவரது கவுன் மலர் கட்டிடக்கலை மற்றும் விசித்திரக் நாடகத்தால் ஈர்க்கப்பட்டது, ஆம், அவர் ஒவ்வொரு இதழையும் தைத்தார், ஒவ்வொருவரும் தன்னைத்தானே திணறடித்தனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூரில் இருந்து துணி துணி, நான்சி ஒரு கவுனை உருவாக்கினார், அதில் ஒரு வியத்தகு தோள்பட்டை மற்றும் ஒரு டல்லே ரயில் கையால் வடிவமைக்கப்பட்ட ரோஜாக்களுடன்…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் கடந்த வாரம் விடுவித்தது. பூர்ணம் குமார் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதுகுறித்து பூர்ணம் குமாரின் மனைவி ரஜனி கூறியதாவது: பாகிஸ்தானின் பிடியிலிருந்த 21 நாட்களும் என் கணவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளனர். அவரைத் தூங்க விடாமல் செய்துள்ளனர். பஞ்சாபின் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் பிஎஸ்எஃப் உயர்…

Read More

எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். மர்டர் மிஸ்டரி க்ரைம் த்ரில்லர் படமான இதில் அவர் காவல் அதிகாரியாக, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர், தீப்ஷிகா உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவா எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை, நீருக்கடியில் நடப்பது போல, மும்பையில் படமாக்கியுள்ளனர். இந்தக் காட்சி பிரமிப்பாக இருக்கும் என்றும் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் ஜுன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Read More

சென்னை: மாநகர பேருந்தில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் – கோயம்பேடு இடையே 70-சி வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. மேலும், முதியவரை நடத்துநர் பேருந்தில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினார். பேருந்தில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநரும் முதியவரை தாக்கியுள்ளார். இதை பார்த்த பயணிகள், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த காணொலி இணைய தளத்தில் வேகமாக பரவி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த சம்பவம், வண்டலூர் கேட் அருகே நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற…

Read More

மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், புற்றுநோய் இன்னும் பெரும்பாலும் குணப்படுத்த முடியாததாகவே உள்ளது, இருப்பினும் இது சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படலாம். புற்றுநோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லாததற்கான காரணம் முதன்மையாக உடலில் உள்ள எந்தவொரு உறுப்பையும் நடைமுறையில் தாக்க முடியும், மேலும் விரைவாக பெருகும், பாரம்பரிய சிகிச்சையின் பெரும்பாலான வடிவங்களை தோற்கடிக்கும். இது இன்னும் தந்திரமானது என்னவென்றால், உங்களுக்கு ஒரு முறை புற்றுநோய் இருந்தால், நீங்கள் அதை மீண்டும் பெறுவீர்கள், இந்த முறை கடைசியாக இருந்ததை விட ஆக்ரோஷமாக இருக்கும். இருப்பினும், நோய் குணப்படுத்த முடியாததாக இருக்கும்போது, ​​அது (பெரும்பாலும் தடுக்கக்கூடியது) மற்றும் மருத்துவர்கள் எப்படி என்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் … பார்ப்போம் …

Read More

திருமலை: ஆகஸ்ட் மாதம் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் மற்​றும் இலவச டோக்​கன்​களை திருப்​பதி தேவஸ்​தானம் தனது இணை​யதளத்​தில் வெளி​யிட உள்​ளது. அதன்​படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்​கல் முறை ஆர்​ஜித சேவை​களுக்கு பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை மற்​றும் வரு​டாந்​திர பவித்​ரோற்​சவத்​திற்கு முன்​ப​திவு செய்​ய​லாம். 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்​கப்​பிரதட்சண டோக்​கன் வெளி​யாக உள்​ளது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட் தொடங்​கு​கிறது.

Read More

தோஹா: தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர், 90+ மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டி எறிவது இதுவே முதல் முறை. தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார் நீராஜ். தொடர்ந்து இரண்டாவது முயற்சி ‘நோ த்ரோ’ என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து 80.56 மீட்டர், ஃபவுல் மற்றும் 88.20 மீட்டர் தூரம் என அடுத்தடுத்த வாய்ப்புகளில் நீரஜ் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவரது முந்தைய தேசிய சாதனையை தகர்த்துள்ளார். கடந்த 2022-ல் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார். தற்போது அதை முறியடித்துள்ளார். 25 தடகள வீரர்கள் மட்டுமே 90+ மீட்டர்…

Read More

கிஷ்சா 47 (சந்தானம்) என்ற பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ‘ஹிட்ச்ஹாக் இருதயராஜ்’ என்ற ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அழைக்கப்படுகிறார். இதற்காக, கிஷ்சா, அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குக்கு குடும்பமாகச் செல்கின்றனர். படம் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான், அந்த திரையரங்கமும் அதில் ஓடும் திரைப்படமும் தங்களைப் போன்றவர்களுக்காக வைக்கப்பட்ட கொலைகார ‘டிராப்’ என்பதை உணர்கிறார்கள். விமர்சனம் என்ற பெயரில், திரைப்படங்களைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்கவிட்டு, அவை தோல்வியடையக் காரணமாக இருக்கும் கிஷ்சாவையும் அவன் குடும்பத்தையும் சைக்கோ கொலைகாரர்கள் துரத்த, அவர்களிடமிருந்து காதலி மற்றும் குடும்பத்தினரை கிஷ்சா காப்பாற்றினாரா, இல்லையா என்பது கதை. ‘திரைப்படத்துக்குள் ஒரு திரைப்படம்’, அந்தத் திரைப்படத்துக்குள் பிரவேசிப்பது, அதில் உலவும் கொலைகாரக் கதாபாத்திரங்களிடம் சிக்குவது என்கிற கான்செப்டை வைத்து, இயக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த். அதே நேரம், சில ஹாலிவுட் ஹாரர் கிளாசிக் படங்களின்…

Read More