ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று (திங்கள் கிழமை) தயாரானது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று இரவு குண்டம் தயாரானது. அம்மன் அழைத்தல் நிகழ்வு: இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு…
Author: admin
‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தின் கதை கார்த்திக் சுப்பராஜ் உடையது. அவருடைய கதையை வைத்து ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார். தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து கார்த்திக் சுப்பராஜ், “சாதாரண ஓர் ஐஏஸ் அதிகாரியை பற்றிய ஒரு கதையினைத் தான் ஆரம்பத்தில் ஷங்கர் சாரிடம் கூறினேன். ஆனால், அது முற்றிலுமாக வேறொரு களத்தில் மாற்றிவிட்டார்கள். அக்கதையில் பல எழுத்தாளர்கள் ஈடுபட்டதால், கதை மற்றும் திரைக்கதை முற்றிலுமாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியான சமயத்தில், அதனை பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவினை முன்வைத்து இப்போது பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது நண்பர். ஆனால், அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள். திருமாவளவனின் கருத்துகள், அவர் தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதிமுக அனைவரையும் மதிக்கும் பண்பை கொண்டுள்ளது. சிறிய கட்சிகளாக இருந்தாலும், உரிய மரியாதை கொடுப்போம். ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் கசப்பான அனுபவத்தோடு, கசப்பான மனநிலையோடுதான் கூட்டணியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக கூட்டணியில் விசிக சேருமா என்று…
டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி அருகே சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் விரைவுச்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மாண்டி கேரா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறை ஆய்வாளர் அமன்சிங் கூறுகையில், ‘‘ கோர விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்துக்கான கரணத்தை அறிய சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை முடிந்து வேன் டிரைவர் அடையாளம் காணப்பட்டதும் வழக்கு…
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக வீடியோவை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தாண்டில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கினால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனை கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ‘செவ்வாய் கிரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒரு நிமிடம், 12 விநாடிகள் ஓடுகிறது. அதில் உயரமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய ரக விண்கலன்கள், விமானங்கள் வலம் வருகின்றன. அந்நகரத்தின் கட்டமைப்புகள் எல்லாம் மிக நவீனமாக உள்ளன. சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த சிலர் அங்கு சுவாசிக்கும் சூழல் இருக்குமா? என…
அரசுப் பணி தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விசிக தலைவரும், திருமா பயிலகத்தின் காப்பாளருமா ன திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ‘திருமா பயிலகம்’ இயங்கி வருகிறது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்புகளு க்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயின்ற பலர், அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த பயிலகத்தில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2ஏ, 4, விஏஓ, உதவி ஆய்வாளர் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் பல பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. அதன் விவரம்: அங்கனூர் (9843660449), ஜெயங்கொண்டம் (9952860844), சிதம்பரம்…
ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியாரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயற்கை சூழல் நிறைந்த பஹல்காம் பள்ளத்தாக்கை குறிப்பிடும் வகையிலான படத்தை பகிர்ந்துள்ளார். அதன் மேல் பக்கம் ரத்தம் சொட்டும் வகையில் உள்ளது. அந்த படத்தில் ‘All Eyes On Pahalgam’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை குறித்து பேசுவதில் நான் மிகுந்த வருத்தத்தோடு உள்ளேன். இந்த கொடுஞ்செயலால் அப்பாவி மக்களின் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உடைந்து போயுள்ளன. இத்தகைய வன்முறை தனிநபர்களை குறிவைப்பது மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் கட்டமைப்பையும் மட்டுப்படுத்துகிறது. சோதனையான இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கண்டிப்பதில்…
வாஷிங்டன்: சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடான, மெக்சிகோ உட்பட உலகின் பல நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தினார். இந்தியாவுக்கு 27% வரியை உயர்த்திய அமெரிக்கா, சீனாவுக்கு 34% வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வுக்கு உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தியது. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்…
திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் ”பண்ணாரி” எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடும், நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக ( ஏப்ரல் 8. ஆம் தேதி) இன்று அதிகாலை 3 மணிக்கு, குண்டம் பூ இறங்குதல் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40 நாள்கள் தீவிரமான விரதம் இருந்து, துளசி மாலை, மஞ்சள் ஆடை அணிந்து, மாலையில் தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். இன்று அதிகாலை நான்கு…
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன். ‘தெய்வ மகள்’ சீரியல் வாணி போஜனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்தது. சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சில திரைப்படங்களில் வந்து சென்றார். அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். அடுத்து ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘மிரள்’ படங்களில் நடித்தார். தற்போது சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
