லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “லீ ஃபோர்டிஸ் நடந்துகொண்ட விதம் தேவை இல்லாதது. இதற்கு முன்னர் எங்களுக்கு இப்படி நடந்தது இல்லை. குறைவான ஸ்பைக்குள் கொண்ட ஷு அல்லது…
Author: admin
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் உங்கள் மூளை வேதியியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் மருத்துவ மனச்சோர்வுக்கு கூட பங்களிக்கும். குளுக்கோஸ் அளவு மிகக் குறைவு அல்லது ஸ்பைக் மிக அதிகமாக இருக்கும்போது, அது தெளிவான காரணத்திற்காக இல்லாமல் உணர்ச்சி ஏற்ற இறக்கம், பதட்டம் அல்லது “விளிம்பில்” உணர்வுக்கு வழிவகுக்கும். பெண்கள் இந்த அறிகுறிகளை பி.எம்.எஸ், வேலை மன அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகளுக்கு தவறாகப் பயன்படுத்தலாம், ஆனால் நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை குறை கூறலாம். நீரிழிவு நோயாளிகளிடமும் மனச்சோர்வு மிகவும் பொதுவானது, மன மற்றும் உடல் ஆரோக்கிய சவால்களின் இரு வழி வீதியை உருவாக்குகிறது.
புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.யின் நொய்டாவில் 31-வது செக்டார் குடிசைப் பகுதியில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயினர். அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்பெண் காணாமல் போய் வழக்கு பதிவானது. பாயலின் கைப்பேசி ஒரு ரிக் ஷா ஓட்டுநரிடம் இருந்து போலீஸாரிடம் சிக்கியது. பிறகு இதனை அவருக்கு வழங்கிய 31-வது செக்டார் டி-5 பங்களாவின் பணியாளர் சுரேந்தர் கோலி போலீஸாரிடம் சிக்கினார். விசாரணைக்கு பிறகு டி-5 பங்களா வளாகத்திலும் அதன் முன்புள்ள கால்வாயிலும் டிசம்பர் 2006-ல் தோண்டப்பட்டது. இதனுள் ஒன்றன்பின் ஒன்றாக சடலங்கள், எலும்புக்கூடுகள், 26 மண்டை ஓடுகளும் வெளியாகி நாட்டையே உலுக்கின. இதன் காரணமாக பங்களா உரிமையாளர் மொஹீந்தர் சிங் புந்தேர் மீதும் புகார் எழுந்தது. குழந்தைகள், பெண்களை கொலை செய்ததுடன், சில உறுப்புகளை கோலி உட்கொண்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியானது. இருவரும் கைது செய்யப்பட்டு 10 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் கொலையானதாக வழக்குகள் பதிவாகின.…
சென்னை: சென்னையில் நடந்த முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் 6 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி) சார்பில் முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாடு சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. ‘அறிவுசார் மையம் மூலம் தமிழகத்தை இந்தியாவின் புதுமையின் தலைநகரமாக மாற்றுதல்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டில் டீப்-டெக் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகேந்திரா, போஷ் உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.…
சென்னை: பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் 26-ம் தேதி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அன்றிரவு விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர், 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்றார். பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில், ஆக.26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை கோயில்களில் தரிசனம் செய்ய இருப்பதாகவும், தரிசனத்தை முடித்துவிட்டு, சிதம்பரத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படைப்பு குழந்தையை வளர்ப்பதற்கான 10 கேள்விகள்கற்பனைக்கான ஒரு குறுநடை போடும் குழந்தையின் திறன் யாரையும் ஆச்சரியப்படுத்தும். அதனால்தான் சரியான கேள்விகளைக் கேட்பது அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டும். உங்கள் குழந்தையின் மனநிலையை விரிவுபடுத்துமாறு நீங்கள் கேட்க வேண்டிய 10 கேள்விகள் இங்கே
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை தொடங்கும் காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று நடைபெற்றது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நேற்று முன்தினம் நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்பன் சந்நிதிக்கு தலைச்சுமையாகக் கொண்டு வரப்பட்டன. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில் இந்த நெற்கதிர்கள் பெறப்பட்டன. தொடர்ந்து கொடி மரத்துக்கு கிழக்கே உள்ள மண்டபத்தில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நேற்று சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு ஐயப்பன் சந்நிதியில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு, பூஜைகள்செய்யப்பட்டன. பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்குப் பிறகு நேற்று இரவு 10…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதன்படி 7.5 சதவீத உள்…
குழந்தைகளாகிய நாம் அடிக்கடி நம் பெற்றோரை பாதுகாப்பான இடமாக பார்க்கிறோம், அவர்கள் ‘எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள்’ என்று நம்புகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் சொந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பது இயல்பானது என்றாலும், அந்த வேறுபாடுகளை குழந்தையின் முன் விவாதிப்பது சரியில்லை. ஒரு குழந்தை பெற்றோரின் பாதுகாப்பின்மை, இயலாமை அல்லது சந்தேகங்களைப் பற்றி கேட்கும்போது, அது தவிர்க்க முடியாமல் கவலையையும் குழப்பத்தையும் உருவாக்கும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பிரச்சினைகள் அல்லது சுமைகளுக்கு காரணம் என்று நினைத்து இந்த உணர்வுகளை உள்வாங்கலாம். இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வின் உணர்வை சீர்குலைக்கும்.