ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்தது முதல் எத்தனை சிக்சர்கள், எத்தனை பவுண்டரிகள் என்பதையெல்லாம் பெருமை பொங்க காட்டி வருகிறது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சீரழிந்து வரும் கிரிக்கெட்டின் இன்னொரு இன்றியமையாத பங்கான ஃபீல்டிங் தவறுகளின் எண்ணிக்கையையும், கேட்ச்கள் விடப்பட்டதன் எண்ணிக்கையையும் காட்டினால் கூட அத்தொடருக்கு ஒரு நடுநிலைத் தன்மை கிடைத்து விடும். ஐபிஎல் தொடர்களில் விடப்படும் கேட்ச்கள் எண்ணிக்கை தொடருக்குத் தொடர் அதிகரித்து வந்தவண்ணமே உள்ளன. கிரிக் இன்போ தகவல்களின் படி 2025 சீசனில் 431 கேட்ச் வாய்ப்புகளில் 103 கேட்ச்கள் நழுவ விடப்பட்டு தரைத் தட்டியுள்ளன. அதாவது, 76% என்று கேட்சிங் திறமை குறைந்திருப்பதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரம் சுட்டுகிறது. இந்த சீசனில் 2 மேட்ச்களில் 9 கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டுள்ளது, லீகின் தரமதிப்பைச் சரித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி இடையேயான போட்டி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே மேட்ச் இரண்டிலும்தான் இந்த அதிகப்படியான கேட்ச் ட்ராப்கள் நடந்துள்ளன.…
Author: admin
ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பல்கலை. மாணவர்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகம் சர்வதேச புகழ் பெற்ற கல்வி நிலையமாக அறியப்படுகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 42,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்…
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா, தியாகேசா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஆயில்ய நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆழித்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஆழித்தேரில் நேற்று முன்தினம் இரவு தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 9 மணிக்கு ஆழித் தேரோட்டம்…
அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன் தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவுக்காகத்தான் சற்று பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினர் பேசுவதை விட, படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’, ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்…
சென்னை: கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் வழங்கறிஞர் பிரிவு சார்பில் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சுதந்திரத்தின்போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தனர். ஜவஹர்லால் நேரு, காந்தி, படேல், ராஜாஜி உள்ளிட்ட பல சட்ட நிபுணர்கள் இருந்தாலும் அரசியல் சாசனக் குழுவுக்கு தலைவராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்தனர். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை மற்ற நாடுகள் சுதந்திரம் பெற்று பல்லாண்டு காலம் கழித்துதான் போராடி வாங்கினர். ஆனால், இந்தியா குடியரசு ஆன முதல் நாளே அனைத்து மக்களுக்கும் உரிமை என அரசியல் சாசனத்தில் எழுதியது அம்பேத்கர்…
இந்த ஆண்டில் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானின் இருப்பிடமாக இந்துக்களால் கருதப்படும் கைலாஷ் மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீன நாடுகள் தரப்பில் ராணுவ படையினரை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்…
இன்று தகவல் தொடர்புக்கு ஏராளமான சாதனங்கள் இருந்தாலும் அரசியல் நெருக்கடி நிலை, பெருவெள்ளம், நில நடுக்கம், போர், பஞ்சம், கொள்ளைநோய், காட்டுத்தீ உள்ளிட்ட அசாதாரண சூழல்களில் வானொலியே தகவல் தொடர்புக்கான முக்கியமான கருவியாக இருக்கிறது. ஏ.எம், எஃப்.எம் போன்ற பண்பலை வானொலிகளைவிடக் குறுகிய அலை வானொலி, ஹாம் (HAM) வானொலி, சமூக வானொலி போன்றவை எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுபவை. தகவல் தொடர்பு அற்றுப்போன நிலையில் வதந்திகளும் பொய்ச் செய்திகளும் மக்களிடையே பரவும் சூழலில் சமூக வானொலிகள் உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளும் கருவியாக விளங்குகின்றன. பேரிடர் மேலாண்மை: மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், பிஹார் பெருவெள்ளம், போபால் விஷவாயுக் கசிவு, குஜராத் நிலநடுக்கம், ஆந்திர மாநிலக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட புயல், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களின்போது சமூக வானொலிகள் பெருமளவில்…
சென்னை: கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தகுதித் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நேற்று மதியம் வெளியிட்டது. அவற்றை மாணவர்கள், பெற்றோர்கள் www.dge.tn.gov.in என்ற…
இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை உள்ளது. தான் இறங்குவதை தோனி போலவே ஒத்திப் போடுகிறார். தோனிக்கு வயதாகிறது, சரி. இவருக்கு என்னவாயிற்று? அதுவும் ஓர் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஓர் உத்வேகமான தலைமையாக வழிகாட்டியாக இல்லாமல் ஓ.பி. அடிக்கலாமா? திடீரென அவருக்கு இத்தகைய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன என்பதை கம்பீர் உட்பட பிசிசிஐ நிர்வாகம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஓப்பனிங் இறங்கினார், 4-ம் நிலையில்…
புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும். ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கெனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் ஹேப்பி பாசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில், ஹேப்பி பாசியா மீது 18 குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.…
