சென்னை: ‘முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் சத்யா ஏற்பாட்டில் தியாக ராயநகர், முத்துரங்கன் சாலையில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த ஆட்சியில் அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும்தான் மிகப்பெரிய சாதனை. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம். தமிழகத்தில் 2026 தேர்தல், குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசிய லுக்கும், மன்னராட்சிக்கும் முடிவு கட்டும் தேர்தல். இந்த ஆட்சி எப்போது அகற்றப் படும் என்று தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் கூட்டணி வைத் தால் திமுகவுக்கு ஏன் பதற்றம், கோபம்…
Author: admin
ரயில்வேக்கு புதிய டிஜிட்டல் கடிகாரம் வடிவமைப்புக்கான தேசிய அளவிலான போட்டியை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வடிவமைப்புக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் நிறுவப்படவுள்ள டிஜிட்டல் கடிகாரங்களுக்கான வடிவமைப்பைத் தேர்வு செய்ய தேசிய அளவிலான போட்டியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. படைப்பாற்றல் மிக்க நபர்களிடம் இருந்து வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இப்போட்டி தொழில்முறை நிபுணர்கள், கல்லூரி – பல்கலை., மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 3 பிரிவுகளில் நடக்கும். பள்ளி பிரிவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்லூரி பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை., சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். மற்றவர்கள் தொழில் முறை பிரிவில் வருவார்கள். இந்திய ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்புக்கான முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.…
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக உள்ளூர் வியாபாரிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த சுமார் 20 பேர் உதவி செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இதில் 4 பேர், தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகிறோம். பஹல்காம் சுற்றுலா தலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்த கடைகளின் உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு கடைக்காரர் 15 நாட்களுக்கு முன்பு கடையை திறந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 22-ம் தேதி அவர்…
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் பதிரனாவின் பந்தில் டெவால்ட் பிரேவிஸின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். விராட் கோலி 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசிய நிலையில் சாம் கரண் பந்தில் வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் அடித்துள்ள 7-வது அரை சதம் இதுவாகும். அதேவேளையில் சிஎஸ்கேவுக்கு எதிராக இது 10-வது அரை சதமாக அமைந்தது. இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற…
போலீஸாரிடம் இருந்து துப்பாக்கிய பறிக்க முயன்ற பாலியல் குற்றவாளிக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. மத்தியப் பிரதேசம் போபாலில் இளைஞர்கள் சிலர் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அவர்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளனர். இதர மாணவிகளை தங்களிடம் அழைத்து வரும்படி வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பர்ஹான் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய அப்ரார் என்பவரை கைது செய்வதற்காக பர்ஹானை போலீஸார் காவலில் எடுத்து ஜீப்பில் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அப்போது உடல் உபாதை காரணமாக வாகனத்தை நிறுத்தும்படி பர்ஹான் கூறியுள்ளார். அவருக்கு பாதுகாப்பாக எஸ்.ஐ ஒருவர் உடன் சென்றார். அப்போது, எஸ்.ஐ துப்பாக்கியை பர்ஹான் பறிக்க முயன்றார். இதை எஸ்.ஐ தடுத்தபோது, துப்பாக்கியின் டிரிக்கரில் கை பட்டு, குண்டு வெளியேறியது. இதில் பர்ஹானின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. அவர்…
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் 13-வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷால் படேல், ஹென்ரிச் கிளாசன் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த ரன் அவுட் சர்ச்சைக்குரிய முறையில் இருந்தது. ஏனெனில் ஸ்டெம்புகளுக்கு முன்பு இருந்து பந்தை பிடித்த கிளாசன் பந்தை ஸ்டெம்புகளை நோக்கி தள்ளினார். அப்போது பந்து விலகிய நிலையில் கிளாசனின் கையுறை ஸ்டெம்பில் பட்டு பெய்ல்ஸ் விழுந்தது. 3-வது நடுவர் பலமுறை இந்த காட்சிகளை ரீப்ளேவில் பார்த்துவிட்டு அவுட் கொடுத்தார். இதனால் விரக்தியுடன் களத்தில் இருந்து வெளியேறிய ஷுப்மன்…
சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி அதி விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் வாழும் ராஜஸ்தான் மக்கள் அவரை சந்தித்து, சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ரயில்வே வாரியம் பரிசீலித்து, சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி இடையே புதிய அதிவிரைவு ரயில் இயக்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புனே – ஜோத்பூருக்கு புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
பெங்களூரு: கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஹொசப்பேட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் அனைவரும் இந்தியர்கள். பாகிஸ்தானுடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. பாகிஸ்தான் நம்மை எதிரியாக நினைக்கிறது. பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், நான் சண்டையிட தயார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனுமதி அளித்தால் நான் பாகிஸ்தானுக்கு தற்கொலை படையாக செல்ல தயாராக இருக்கிறேன். மத்திய அரசு எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை அளித்தால் எனது உடலில் கட்டிக் கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று எதிரிகளை தாக்குவேன். இதனை நான் வெறும் வார்த்தைகளுக்காக கூறவில்லை. அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். நமது எதிரிகளை அழிப்பதற்காக நான் எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் ஷெர்கர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் (50). இவர் மதுராவில் உள்ள ஜமுனாபர் பகுதியில் தனது மாமியார் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினர். அவர்களுடைய பெயர்களையும் மாற்றிக் கொண்டனர். ஜாகிர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மாறும் வேத சடங்குகள் விருந்தாவனில் நேற்று முன்தினம் நடந்தன. ஜாகிர் தனது பெயரை ஜகதீஷ் என்று மாற்றிக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது குடும்பத்தினர் இந்துக்களின் பெயர்களை வைத்துக் கொண்டனர். இதுகுறித்து ஜகதீஷ் கூறியதாவது: இந்தியாவில் முகலாயர்கள் படையெடுப்புக்கு முன்னர் எங்களுடைய மூதாதையர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தவர்கள்தான். அவர்களை கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். எனினும், என்னுடைய மனம், சொல், செயல் அனைத்தும் காளியை வணங்குவதாக இருக்கிறது. என் கிராம மக்கள் கூட என்னை பகத் ஜி என்றுதான் அழைப்பார்கள். முஸ்லிம்…
மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக அங்கீகரித்திருக்கிறது தேமுதிக பொதுக்குழு. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது. தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் உங்களுக்கு உறவு மலர்ந்ததை சுருக்க மாகச் சொல்ல முடியுமா? எனது தந்தை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றியதால் நான் பிறந்து வளர்ந்து எல்லாமே குடியாத்தத்தில் தான். பள்ளிச் சிறுவனாய் இருந்த போதே கேப்டனின் வெற்றிப் படங்களை குடும்பத்துடன் பார்த்து ரசித்திருக்கிறேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த நான் அதன் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வந்தேன். அந்த சமயத்தில் ஹாஸ்டல் மாணவர்கள்…
