Author: admin

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார். மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சுதாரித்த காரில் இருந்த சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து காயமின்றி தப்பினர். இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 18) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 17), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய…

Read More

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்த விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாக்‌ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே போன்ற முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது முகேஷ் கோயலின் விலகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றினார். “கடந்த ஓரிரு வருடங்களாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இடையூறுகள் காரணமாக சபை ஒருபோதும் சுமுகமாக…

Read More

ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது குடும்பத்தினர் கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவர், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 23-5-2016 முதல் 31-3-2021 வரையிலான கால கட்டத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8…

Read More

உலகளவில் சுமார் 830 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது, மேலும் எண்கள் ஏறுகின்றன. இரத்த குளுக்கோஸ் (அல்லது இரத்த சர்க்கரை) அதிக அளவில் ஏற்படக்கூடிய இந்த நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய், காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான சேதத்திற்கு வழிவகுக்கும், எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமானது. பல்வேறு வகையான நீரிழிவு நோய் இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த ஒரு அளவு-பொருந்தக்கூடிய அனைத்து தீர்வும் இல்லை, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது நிச்சயமாக உதவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் 5 பயனுள்ள வழிகள் இங்கே.

Read More

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து தேசிய நலனுக்காக அரசின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தகவல்: பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பஹல்காம் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவும், விளக்கங்கள் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கவும் வேண்டும். எங்கள் கட்சியின் மாநிலங்களவைத் தலைவரை அரசு அழைத்து, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கிற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்களைப் பற்றி தெரிவித்துள்ளது. மேற்சொன்ன விஷயங்கள் குறித்த தயக்கங்கள் இருந்தபோதிலும், எங்களின் இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளையில், பரந்த அளவிலான தேசிய நலனுக்காக அத்தகைய…

Read More

சென்னை: “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யவதையே முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசும் தமிழக முதல்வரும் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பள்ளிக் கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி…

Read More

ஆப்டிகல் மாயைகள் என அழைக்கப்படும் படங்கள் உங்கள் மூளை மற்றும் அவதானிப்பு திறன்களை ஏமாற்றுகின்றன, அவை மறைக்கப்பட்ட பொருள் அல்லது விலங்கு இல்லை என்று கருதுகின்றன. இந்த புதிர்கள் இப்போது நீண்ட நாள் கழித்து சிதைக்கவும், உங்கள் வழக்கமான பணிகளிலிருந்து வேறுபட்ட ஒன்றில் உங்கள் மனதை ஈடுபடுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் மாயை புதிர்கள் உள்ளன, மேலும் தனிநபர்கள் அவற்றைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.இன்று இதே சவாலுக்கு தீர்வைக் கண்டுபிடிப்பதில் எல்லோரும் சிரமப்படுகிறார்கள். இப்போது, ​​இந்த நம்பமுடியாத ஒளியியல் மாயையை கவனிக்க உங்கள் திறனை சோதிக்க தயாராக இருங்கள், அதில் நீங்கள் மறைக்கப்பட்ட ஒற்றைப்படை எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். பிடித்துக் கொள்ளுங்கள்! இந்த சிக்கல் கண்கவர் ஆகிறது! எண்ணை அடையாளம் காண உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன.கடிகாரத்தில் ஐந்து வினாடிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அழுத்தம் அதன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. நீங்கள் படத்தைப் பார்க்கும்போது,…

Read More

ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறது. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கைக்கு, நீண்ட அறிக்கையின் மூலம் பதில் அளித்திருந்தார் நடிகர் ரவி மோகன். தற்போது ஆர்த்தி ரவியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “கடந்த 25 வருடங்களாக திரைப்படத் துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இந்தத் துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தனை ஆண்டுககளில் பட வெளியீட்டின்போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர…

Read More

விழுப்புரம்: “ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என கூறுவது என்னைக் கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம்,” என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உருக்கமாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பத்துக்கு மாறாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இது நாளடைவில் கருத்து மோதலாக மாறியது. இதற்கு, பாமக இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தனை தன்னிச்சையாக ராமதாஸ் நியமனம் செய்ததே காரணம் என்று கூறப்பட்டது. மேலும், பல்வேறு குடும்ப பிரச்சினைகளும் சூழ்ந்தது. இதனால் கட்சியில் இருவருக்குமான பனிப்போர் தீவிரமடைந்தது. இதன் உச்சமாக, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, செயல் தலைவராக இருப்பார் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த ராமதாஸ், அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்கிறேன் என்றார். இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அன்புமணி, என்னை…

Read More