Author: admin

ஜிதேந்திர சிங் (பி.டி.ஐ புகைப்படம்/ கோப்பு) புதுடெல்லி: அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தியா இப்போது வழங்க வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார், இந்திய ஆராய்ச்சியாளர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் காலவரிசைகளுடன் தங்கள் வருவாயைத் திட்டமிடுமாறு வலியுறுத்தினர். 55 வது அறக்கட்டளை நாளில் பேசுகிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை .”சில காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் எத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் இருப்பார்கள், அவற்றின் திட்டவட்டமான குறிக்கோள்களைத் திட்டமிட அறிவுறுத்தப்பட வேண்டும், இதனால் அவர்கள் திரும்புவதற்கான ஒரு காலவரிசை கைக்கு முன்பே தீர்மானிக்க முடியும். செய்தி மற்றும் விஞ்ஞானத்திற்கு வரும்போது இந்தியா இப்போது வழங்க வேண்டிய அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் சிறந்தவை விரைவில் வரும்,” என்று அவர் கூறினார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் இலாகாக்களை வைத்திருக்கும் சிங், இந்தியாவின் விஞ்ஞான சுற்றுச்சூழல் அமைப்பில் “360 டிகிரி திருப்புமுனை” என்று…

Read More

டெல் அவிவ்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது நடந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ, “பென் குரியன் விமான நிலையம் இனி விமான போக்குவரத்துக்கு பாதுகாப்பானது இல்லை” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக மத்திய இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்து…

Read More

சென்னை: “அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜகவுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்? தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராணுவ வாகனம் முழுவதுமாக நொறுங்கிவிட்டது.

Read More

நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு மையங்களுக்கும் வந்திருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர பரிசோதனைக்குப் பின் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 420 மாணவ, மாணவியருக்கு பின் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலதாமத்தை தவிர்க்க பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்…

Read More

சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் ஒருசில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும்…

Read More

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரைக் காண சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மலைக்கிராம மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் தவெக தலைவர் நடிக்கும் படப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மே.1-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் கீழ் மலைப் பகுதி கிராமமான தாண்டிக்குடிக்கு கார் மூலம் சென்றடைந்தார். மே 2-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார். அன்று அப்பகுதியில் மழை பெய்தது. முதல் நாள் மக்கள் அவரைக் காண காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காருக்குள்ளே அமர்ந்து பயணித்தார். இந்நிலையில் நேற்று மே 3-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்பும்போது திடீரென திறந்த ஜீப்பில் பயணித்து ‘ரோடு ஷோ’ நடத்தினார். தாண்டிக்குடி மலைக்…

Read More

இது அழகாக அழகாக இருக்கிறதுஅதன் நீண்ட, நேர்மையான, வாள் வடிவ இலைகள் மற்றும் பச்சை-வெள்ளை வடிவங்களுடன், பாம்பு ஆலை வீட்டிற்குள் ஒரு அழகியல் மற்றும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது நவீன, மிகச்சிறிய இடங்களில் அழகாக பொருந்துகிறது, மற்றும் படுக்கையறை முதல் பால்கனியில் வரை, முழுவதும் அழகாக இருக்கிறது.

Read More

மீண்டும் பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். ‘வேட்டையன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் தோல்வியை தழுவியது. இதனால் படத்தயாரிப்பினை சில காலத்துக்கு நிறுத்தியது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தினை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பொருளாதார சிக்கல்கள் அனைத்து சரி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் படங்கள் தயாரிப்பில் களமிறங்கவுள்ளது லைகா நிறுவனம். இதற்காக மகாவீர் ஜெயின் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

Read More

கோவை: “தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடரும் நிலையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.” என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், ‘நலம்’ இலவச மருத்துவ முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். புலியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்ட முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், கண் நலம் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: கோவை தெற்கு சட்டப்பேரவை…

Read More