Author: admin

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த…

Read More

சென்னை: ​நாடு முழு​வதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்​தது. இயற்​பியல் பாடக் கேள்வி​கள் மிகக் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி ஆகிய​வற்​றில் இளநிலை படிப்​பு​களுக்​கும், கால்​நடை மருத்​து​வப் படிப்​பில் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இளநிலை படிப்​பு​களுக்​கும், ராணுவ நர்​சிங் கல்லூரி​யில் பி.எஸ்​சி. நர்​சிங் படிப்​புக்​கும்நீட் நுழைவுத் தேர்​வில் தேர்ச்சிபெற வேண்​டியது அவசி​யம். இந்த தேர்​வில் பெறும் மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே மாணவர் சேர்க்​கை​யும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்டு மருத்​து​வப் படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத் தேர்வை எழுது​வதற்கு நாடு முழு​வ​தி​லும் இருந்து சுமார் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், 12 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவி​கள் என மொத்​தம் சுமார் 22 லட்​சத்து 70 ஆயிரம் பேர் விண்​ணப்​பித்து இருந்​தனர். இந்த தேர்​வுக்​காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்​கள் இந்​தி​யா​விலும்,…

Read More

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யா, ப்ரப்சிம்ரம் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன்னுடன் வெளியேறினார். எதிர்முனையில் ஆடிய ப்ரப்சிம்ரன் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜோஸ் இங்கிலிஷ் 30 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 45, நேஹால் வதேரா 16, ஷஷாங்க் சிங் 33, மார்கஸ் ஸ்டாய்னின் 15 என 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு 237 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் ஓப்பனர்கள் எய்டன் மார்க்ரன், மிட்சல் மார்ஷ் இருவரும் முதலில் இறங்கினர். இதில் மார்க்ரம் 13 ரன்கள் எடுத்தார்.…

Read More

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. யுவராஜ் கணேசன் தயாரித்து வெளியிட்ட இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இப்படம் குறித்து, “’டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும்,இரக்கமும்,உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை.. இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக் காட்டும் அற்புதமான படம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர்…

Read More

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “நமது நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் பணி தர்மம் மற்றும் விடாமுயற்சியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் அமர்ந்து இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களையும் நாங்கள் விடமாட்டோம். பாதுகாப்பு அமைச்சராக, வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதும் எனது பொறுப்பு ஆகும்” இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். முன்னதாக இன்று (மே 4) விமானப்படைத் தளபதி…

Read More

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. ‘எம்புரான்’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, எந்தவித விளம்பரமும் இன்றி வெளியான படம் ‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் வசூலில் 100 கோடியை கடந்துவிட்டது. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை முன்வைத்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். அதே போல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மே 9-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் டப்பிங்கிற்கு ‘தொடரும்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதர மொழியில் ரீமேக் உரிமைக்கு பலரும் அணுகினார்கள். ஆனால், யாருக்குமே கொடுக்காமல் நேரடியாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்களா அல்லது டப்பிங் செய்து வெளியிடுகிறார்களா என்பதும் விரைவில் தெரியவரும்.

Read More

DIY அழகு வைத்திய உலகில், சில பொருட்கள் சாயின் தாழ்மையான கோப்பையைப் போலவே ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஆனால் அதன் நறுமண மயக்கத்திற்கும் ஆறுதலான அரவணைப்புக்கும் அப்பால், “சாய் கா பானி” அல்லது தேயிலை நீர் இப்போது முடி மீண்டும் வளர்வதற்கு ஒரு ஆச்சரியமான ரகசியம் என்று புகழப்படுகிறது. எளிய தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வயதான வீட்டு பிரதான உணவு, உங்கள் உச்சந்தலையில் மற்றும் இழைகளுக்கான நன்மைகளின் புதையலை வைத்திருக்கிறது. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலுக்கான அதன் முழு சக்தியையும் நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது இங்கே.’சாய் கா பானி’ சரியாக என்ன?’பக்தான்’சாய் கா பானி’பால் அல்லது சர்க்கரை இல்லாமல் வெற்று காய்ச்சிய தேயிலை நீரைக் குறிக்கிறது. இது அடிப்படையில் கறுப்பு தேநீர், இது செங்குத்தாகவும் குளிராகவும் உள்ளது, டானின்கள், காஃபின், கேடசின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களை கூட தடுமாறும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. கிரீன் டீ அதன் தோல்…

Read More

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு, செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிப்பு, மானியங்களை வாரி வழங்கும் பிற மாநிலங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதல் நூற்பாலை 1818-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதிலும் 4,210 நூற்பாலைகளில் 5.5 கோடி ஸ்பிண்டல்(நூற்பு இயந்திரங்கள்) திறனுடன் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 42 லட்சம் கைத்தறி, 33 லட்சம் விசைதறி, 53 லட்சம் ரோட்டார் திறனை இந்தியா கொண்டுள்ளது. இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்தது. இருந்தபோதும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் போட்டியிட முடியாத நெருக்கடியான நிலை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் நிலவுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: சர்வதேச சந்தையில் போட்டியிட போதுமான தொழில் கொள்கைளை மத்திய, மாநில…

Read More

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 207 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 95 ரன்கள் விளாசி இருந்தார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரஸல், 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ரகுவன்ஷி 44, ரஹானே 30, குர்பாஸ் 35 ரன்கள் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிரடியாக ஆடி…

Read More

நாய்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பர் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. நாய்கள் விசுவாசம், பாதுகாப்பு மற்றும் நிபந்தனையற்ற அன்புக்கு பெயர் பெற்றவை- இவை அனைத்தும் தங்கள் மனிதர்களுக்கு சிறந்த தோழர்களாக அமைகின்றன. இருப்பினும், சில செல்லப்பிராணி நாய் இனங்கள் அவற்றின் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்காக அறியப்படுகின்றன, இது பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிறந்ததாக அமைகிறது. உதாரணமாக, ஜெர்மன் மேய்ப்பர்கள் மற்றும் டோபர்மேன் பின்ஷர்கள் இருவரும் உலகின் சிறந்த காவலர் நாய் இனங்களில் இடம் பெறுகிறார்கள். உங்கள் வீடு, வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்புக்கு எது பொருத்தமானது என்பதை நீங்கள் தீர்மானிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. அவற்றுக்கிடையேயான சில முக்கிய வேறுபாடுகளை இங்கே பட்டியலிடுகிறோம், இது ஒரு சிறந்த காவலர் நாய் என்பதை தீர்மானிக்க உதவும்:

Read More