ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. டெல்லி அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3 தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. கடைசியாக பஞ்சாப் அணியுடன் மோதிய ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொடர் மீண்டும்…
Author: admin
மூலவர்: மாதேஸ்வரர் தல வரலாறு: குட்டையூர் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற காராம்பசு, ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது. பசுவின் மடியில் பால் குறைவது கண்டு குழம்பிய மக்கள், ஒருநாள் அதைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்டு அதிசயித்தனர். பின்னர் அங்கே கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். இச்சம்பவம் நிகழ்ந்து ஏறத்தாழ 1,000 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோயில் சிறப்பு: வீட்டில் சுபகாரியம் நடத்துவதாக இருந்தாலோ, நிலத்தில் விதைப்பதற்கு நாள் குறித்துவிட்டு செயல்படுவதாக இருந்தாலோ, ஈஸ்வரனிடம் பூப்போட்டு சம்மதம் கேட்கும்சடங்கு பக்தர்களிடம் உள்ளது. அதில் சம்மதம் கிடைத்துவிட்டால், வீட்டில் சுபகாரியம் விமரிசையாக நடந்தேறி விடும், விளைச்சல்அந்த முறை அமோகமாக இருக்கும் என்பது ஐதீகம். சிறப்பு அம்சம்: சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து,காராம்பசு வணங்கியதால், ஊர் மக்களுக்கு சிவ தரிசனம் கிடைத்தது. இதன் காரணமாக குட்டையூரிலும் சுற்றுவட்டாரத்திலும் கால்நடைகளுக்கு ஏதேனும் பிரச்சினை, நோய் என்றால், சிவனாரை வழிபட்டு,…
இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டு களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா இல்லையா என்பதுதான் கதை. இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். குடும்ப உறவுகளின் நெருக்கம் அருகி வரும்இந்தக் காலகட்டத்தின், அதன் தேவைமற்றும் அவசியத்தை அழுத்தமாகப் பேசுகிறது, படம். குறிப்பாகத் தாய்மாமன் உறவு ஒரு குழந்தைக்கு ஏன் தேவை என்கிற கருத்தை அழகாகவே சொல்லியிருக்கிறார். அதேபோல்…
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 22 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது. அதை தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல், கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஓஎஸ்-09 செயற்கைக் கோள் மொத்தம் 1,696 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 5…
இஸ்ரோ தலைவர் வி நாராயணன் (படம் கடன்: பி.டி.ஐ) புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட பின்னர் பின்னடைவை எதிர்கொண்டது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்EOS-09, மூன்றாம் கட்டத்தில் தொழில்நுட்ப ஒழுங்கின்மை காரணமாக தோல்வியடைந்தது PSLV-C61 ராக்கெட் விமானம். இஸ்ரோ தலைவர் வி நாராயணன் விஞ்ஞானிகளுக்கு ஒரு பிந்தைய உரையின் போது சிக்கலை உறுதிப்படுத்தியது, திட்டமிட்டபடி இந்த பணியை முடிக்க முடியாது என்று கூறினார்.”மூன்றாம் கட்டத்தின் செயல்பாட்டின் போது, நாங்கள் ஒரு அவதானிப்பைக் காண்கிறோம், பணியை நிறைவேற்ற முடியவில்லை. பகுப்பாய்விற்குப் பிறகு, நாங்கள் திரும்பி வருவோம்” என்று நாராயணன் கூறினார். எக்ஸ் ஒரு இடுகையில் தோல்வியையும் இஸ்ரோ ஒப்புக் கொண்டார், “இன்று 101 வது ஏவுதல் முயற்சித்தது, பி.எஸ்.எல்.வி-சி 61 செயல்திறன் 2 வது கட்டம் வரை இயல்பானது. 3 வது கட்டத்தில் ஒரு கவனிப்பு காரணமாக, பணியை நிறைவேற்ற முடியவில்லை.”பி.எஸ்.எல்.வி-சி 61 வெளியீட்டு வரிசையில் பல சிக்கலான…
ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8-ம் தேதி விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோலின் கான்சால்வ்ஸ் ஆகியோரின் வாதங்களுக்கு பிறகு ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அப்போது நீதிபதிகள், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறினர். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “ஐ.நா. அகதிகள் மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை. மேலும் ரோஹிங்கியாக்களுக்கு ஐ.நா. ஆணையர் வழங்கிய…
பாகிஸ்தானின் நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவற்றை இந்திய பாதுகாப்புப் படையின் வான் தடுப்பு சாதனங்கள் வான் பகுதியிலேயே தாக்கி அழித்தன. அத்துடன், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில், ராவல்பிண்டி நுர் கான், சர்கோதாவின் முஷாப், போலாரி மற்றும் ஜகோபாபாத்தின் ஷபாஸ் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் படங்களும் வெளியாயின. ஆனால் இந்தியாவின் தாக்குதலால் விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை.…
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் முறையே, ராமர், சீதை, ராவணனாக நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளார். அவர் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் வேறுநடிகை நடிப்பதாக இருந்தது. காஜல் அகர்வால் தென்னிந்தியாவிலும் பிரபலமாக இருப்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆர் மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவி, காதுகள் மற்றும் தாடைக்கு இடையே பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சலும், அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படுகிறது. பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு அந்நோய் பரவுகிறது. ஒரு வாரத்தில் இருந்து 16 நாள்களுக்குள் பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்றாலும், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தி கொண்டால், பாதிப்பு சரியாகிறது.…
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதையில் (SSPO) நிலைநிறுத்தப்பட இருந்த நிலையில், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இத்திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ…
