சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில், நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், கடந்த 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையம், பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு, சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பகுதியில் உள்ள 12 குடியிருப்பு பகுதிகளுக்கும், சூரப்பட்டு மற்றும் சண்முகாபுரம் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. 59 ஆண்டுகள் பழமையான இந்த நிலையத்தில் தற்போது தினமும் 7 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இதனால், இந்த பழைய கட்டமைப்பை இடித்துவிட்டு, நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்கவும், இந்த…
Author: admin
“நடைபயிற்சி” என்ற வார்த்தையை நம்மில் பெரும்பாலோர் கேட்கும்போது, ஒரு நியான் விசர் மற்றும் ஒரு ஃபன்னி பேக் கொண்ட ஒரு பவர் வாக்கரை நாங்கள் சித்தரிக்கிறோம், அல்லது அந்த அரிய 10,000-படி நாட்களைப் பற்றி சிந்திக்கிறோம், எங்கள் உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள் நம்மை குற்றவாளிகளாக்குகிறார்கள்.ஆனால் ஒரு புதிய வகையான நடைபயிற்சி மிகவும் எளிமையானது, எனவே ஸ்னீக்கி அமைதியாக சுகாதார உலகில் இழுவைப் பெறுகிறது என்று நாங்கள் சொன்னால் என்ன செய்வது? உள்ளிடவும்: மைக்ரோவெக்கிங், நீங்கள் கேள்விப்படாத சுகாதாரப் புரட்சி, ஆனால் உங்கள் உடல் குறைந்த முக்கிய பிச்சை எடுக்கிறது.எனவே, மைக்ரோவாக்கிங் என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால், ஒரு பெரிய பயிற்சி அமர்வுக்காகக் காத்திருப்பதை விட, நாள் முழுவதும் குறுகிய, வேண்டுமென்றே நடைப்பயணங்களை எடுக்கும் யோசனை இது. சிந்தியுங்கள்: ஜூம் கூட்டங்களுக்கு இடையில் உங்கள் வாழ்க்கை அறையைச் சுற்றி ஐந்து நிமிட மடியில். மதிய உணவுக்குப் பிறகு ஹால்வேயில் ஒரு விறுவிறுப்பான உலா. உங்களிடம்…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா. இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உட்பட 6 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு தகவல்களை உளவு சொன்னதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் அமைந்து உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும்,…
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் 23 டைகளில் போட்டியிட உள்ளன. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்கிறது. சென்னை லயன்ஸ் தனது ஆட்டத்தில் ஜூன் 2-ம் தேதி அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸுடன் மோதுகிறது. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் ஐந்து டைகளில் விளையாடும். ஒவ்வொரு டையும் 5 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரு டையில் 2 ஆண்கள் ஒற்றையர், இரண்டு பெண்கள் ஒற்றையர் மற்றும் ஒரு கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் இடம்பெறும். லீக் கட்டத்திற்குப் பிறகு, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குக்கு முன்னேறும். அரையிறுதிப்…
முகமூடி அணிந்த ஒருவன் சென்னையில் தொடர் கொலைகளைச் செய்கிறான். கொல்லப்பட்டவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்ற நோக்கத்துடன் உடல்களை எரித்துவிடுகிறான். இந்த வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் அரவிந்தன் (நவீன் சந்திரா), ஒரு சிறிய ஆதாரத்தைக் கொண்டு, கொலை செய்யப்படுபவர்கள் யார்? அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரால் அந்த கொலையாளியை நெருங்க முடிந்ததா என்பது கதை. புலன் விசாரணைப் படங்களில், கொலையாளி வரித்துக் கொண்டிருக்கும் உளவியல் காரணம், கொலை செய்யப்படுகிறவர்களுக்கு அவனுடன் இருக்கும் தொடர்பு ஆகியன நம்பகமாகவும் ஆழமாகவும் இருந்தால் தவிர, அதில் பார்வையாளர்களின் மனம் ஈடுபாடு காட்டாது. இந்த அடிப்படையான தர்க்கத்தில் நேர்மையான ஈடுபாட்டைக் காட்டியிருப்பதுடன், ‘இரட்டையர்’களைக் கொண்டு பிளாஷ் பேக் கதையை வடிவமைத்த விதமும் அதைப் படமாக்கிய விதமும் அபாரம் என்று சொல்ல வைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில், கொலை காட்சிகளை ரத்தக் களரியாகக் காட்டி முகம் சுளிக்க வைப்பதுதான் இன்றையப் போக்கு. அதை அடியோடு…
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எழுதியுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, சிறப்பு பங்கேற்பாளர்கள் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.கோபால கவுடா ஆகியோர் பெற்று கொண்டனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வேல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் கொள்கையை விட்டுத் தரமாட்டோம். தமிழகத்தின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் தலைப்பே மொத்த கருத்தையும் சொல்லிவிட்டது. இப்படி ஒரு கல்விக்கொள்கையை மத்திய பாஜக அரசு உருவாக்கியபோதே கல்வியில்…
ஹைதராபாத்: ஹைதராபாத் சாதர்காட் பகுதியை சேர்ந்தவர் ஃபஹியுத்தீன். வியாபாரி. இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களும் துணைக்கு வீட்டில் இருந்த தனது வயதான பெற்றோருக்கு சொல்லிவிட்டு, ஃபஹியுத்தீன் மனைவியுடன் இருக்க மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, கொள்ளையர்கள் அந்த வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் குதித்தனர். அதன் பின்னர், வீட்டில் இருந்த முதியோரை ஒரு அறையில் அடைத்து தாளிட்டனர். பின்னர், வீட்டில் இருந்த 700 கிராம் தங்க நகைகளை பீரோவில் இருந்து கொள்ளையடித்தனர். அதன் பின்னர், பிரிட்ஜில் இருந்த பழங்கள், திண்பண்டங்களை ருசித்து சாப்பிட்டு விட்டு,அதன் பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்த ஃபஹியுத்தீன் தனது பெற்றோரின் கூச்சலும், அழுகையையும் கேட்டு அதிர்ச்சி அடைந்து அறையின் கதவை திறந்து நடந்தவற்றை கேட்டறிந்தார். அதன் பின்னர், இது தொடர்பாக சாதர்காட் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீஸார் வழக்கு…
புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா 90.3 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவரது சொந்த மற்றும் தேசிய சாதனை 89.94 மீட்டராக இருந்தது. நீரஜ் சோப்ரா தனது 3-வது முயற்சியில் 90 மீட்டரை கடந்து வீசினார். 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற சாதனையையும், உலக அரங்கில் 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 27 வயதான நீரஜ் சோப்ரா. ஆசிய வீரர்களில் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.27 மீட்டரும், சீன தைபேவின் ஷாவோ சன் செங் 91.36 மீட்டரும்…
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. இந்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதேசமயம், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை வாக்குகளாக அறுவடை செய்ய ஆயத்தமாகிறது எதிர்க் கூட்டணி. இப்படியான சூழலில், “அதிருப்தியில் இருப்பவர்கள் 30 சதவீதம் பேர் தான்… மீதி இருக்கும் 70 சதவீத மக்கள் இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என நினைக்கிறார்கள்” என்கிறார் திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அதுகுறித்து அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசியதிலிருந்து… நான்காண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டாலும், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டுகளால் சரிவு இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில், இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்தாலும், அதன்…
இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக மிருதுஞ்சய் சிங் கூறுகிறார். ஆனால், அவர் கூறியதுபோல் இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாகவோ, வலுவாகவோ இல்லை. இண்டியா கூட்டணி அப்படியே இருப்பதாக அவர் பார்க்கிறார். ஆனால், எனக்கு அப்படி உறுதியாக தெரியவில்லை. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மட்டுமே பதில் அளிக்க முடியும். ஏனென்றால் இண்டியா கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் சல்மான் குர்ஷித் இடம் பிடித்திருந்தார். கூட்டணி முற்றிலும் உறுதியாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தற்போது அப்படி உறுதியாக இருப்பதுபோல்…
