சென்னை: ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்க வீரரின் ஒப்பந்தம் லீக்கின் விதிமுறைகளின்படியே இருந்தது என தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த வேகப் பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெல் வால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் டெவால்ட் பிரேவிஸின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாகவே இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது டெவால்ட் பிரேவிஸை யாரும் வாங்கவில்லை. அவர், விலைபோகாத வீரராக இருந்தார். ஐபிஎல் விதிமுறைகளின் படி காயம் காரணமாக அணியில் இருந்து வீரர் விலகினால் அவருக்கு…
Author: admin
தனுஷின் ‘கொடி’, அதர்வா ஜோடியாக ‘தள்ளிப்போகாதே’, ஜெயம் ரவியின் ‘சைரன்’, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து வரும் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் அது போன்ற கதாபாத்திரங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “‘தில்லு ஸ்கொயர்’ படத்தில் நான் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் இப்போது நடிக்கச் சொன்னால் மறுத்து விடுவேன். என்னால் அந்த கதாபாத்திரத்தைச் சரியாகக் கையாள முடியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வது பற்றிய கேள்வியும் பதற்றமும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. தன்னம்பிக்கை இன்றிதான் அதில் நடித்திருந்தேன். என்னால் அந்த கதாபாத்திரத்தின் பலத்தைத் தாங்க முடியவில்லை. அந்த படம் முடியும் வரை, பயத்துடன் இருந்தேன். ஆனால் ரசிகர்கள் எனது…
சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு என்று தெரிவித்துள்ளார். விஷ்வ வாரகரி சந்த் ஸ்ரீ ஞானேஸ்வர் மகராஜ் மற் றும் வாரகரி சந்துக்களின் ஆன் மிக பாரம்பரியத்தை உலக அள வில் பரப்பும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழா, சென்னை அடையார் அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் காஞ்சி மகாஸ்வாமி அனந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி, கடையநல்லூர் விஷ்வ வாரகரி சம்ஸ்தான் நிறுவனத் தின் உத்ராதிகாரி ரகுநாத் தாஸ் மஹராஜ், தனது முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படையில் எழு திய ‘த்யானோத்தர பக்தி்’ என்ற நூலை வெளியிட்டார். முதல் பிர தியை வேதாந்த விற்பன்னர் ஆர். ரங்கன் ஜியும், இரண்டாவது…
இப்போது, இதயம், நுரையீரல் அல்லது கல்லீரல் வியாதிகளை குணப்படுத்தும் தீர்வுகளை நாம் அனைவரும் அறிவோம், கடைப்பிடித்திருக்கிறோம், ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, நிணநீர் அமைப்பு நச்சுகளை அகற்றுவதன் மூலமும், உடல் திரவங்களை சமநிலைப்படுத்துவதன் மூலமும், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதன் மூலமும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி, நம் இதயத்தைப் போலல்லாமல், நமது நிணநீர் மண்டலத்திற்கு மைய பம்ப் இல்லை, எனவே இது மூச்சு, தசை மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை நம்பியுள்ளது.உடலின் உள் அமைப்பு திடீரென்று மந்தமாக செயல்படுவதை கற்பனை செய்து பாருங்கள்; உடல் முதலில் நுட்பமான ஏற்றத்தாழ்வுகளாகத் தோன்றக்கூடிய அறிகுறிகளையும் சமிக்ஞைகளையும் அனுப்புகிறது, பின்னர் சோர்வு, மார்பில் கனமான உணர்வு, மற்றும் வீக்கம் போன்ற முக்கிய அறிகுறிகளாக உருவாகிறது. படிப்படியாக, இது உடல் முழுவதும் பரவுகிறது மற்றும் நம் உயிர்ச்சக்தியை பாதிக்கிறது.அடைபட்ட நிணநீர் அமைப்பைக் குறிக்கும் ஏழு அறிகுறிகளைப் பற்றி அறிய கீழே உருட்டவும்.தொடர்ச்சியான, உள்ளூர்மயமாக்கப்பட்ட வீக்கம்…
பேகா: என்எஸ்டபிள்யூ பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் பேகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் நூர் கஃபாகியை எதிர்த்து விளையாடினார். 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17 வயதான அனஹத் சிங் 3-2 (10-12, 11-5, 11-5, 10-12, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அனஹத் சிங், எகிப்தின் ஹபீபா ஹானியுடன் மோதுகிறார். ஹபீபா ஹானி அரை இறுதியில் 3-1 (11-9, 7-11, 12-10, 11-6) என்ற செட் கணக்கில் இந்தியாவின் அகன்க்ஷா சலுங்கேவை வீழ்த்தினார்.
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கிய இதில் கன்னட நடிகை ஜான்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், அழகன் தமிழ்மணி, சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நடிகர் உதயா பேசுகையில், “இந்தப் படம் திரையரங்கில் மூன்றாவது வாரமாக, ஓடிக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு மக்கள் காரணம். சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ‘மோனோபோலி’யாக இருக்கிறது.…
தருமபுரி: விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி எம்.பி மணி, முன்னாள்…
தந்திரமான பகுதி? உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் இரண்டும் பொதுவாக ஆரம்ப கட்டங்களில் ஒரு பெரிய காட்சியை உருவாக்காது. எச்சரிக்கை அறிகுறிகள் இல்லை, ஒளிரும் சிவப்பு விளக்குகள் இல்லை, ஆண்டுதோறும் அமைதியான சேதம் குவிக்கும். வீக்கம், சோர்வு அல்லது சிறுநீர் கழிக்கும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை நீங்கள் கவனிக்கும் நேரத்தில், நிறைய தீங்கு ஏற்கனவே செய்யப்படலாம்.இது இரு வழி வீதி. உயர் இரத்த அழுத்தம் உங்கள் சிறுநீரகங்களை அழிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த சிறுநீரகங்கள் உண்மையில் உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். இது ஒரு மோசமான சுழற்சியை உருவாக்குகிறது: உயர் பிபி உங்கள் சிறுநீரகங்களை காயப்படுத்துகிறது, மேலும் போராடும் சிறுநீரகங்கள் உங்கள் பிபியை இன்னும் உயர்த்துகின்றன.இங்கே உதைப்பவர்: அமெரிக்காவில் சிறுநீரக செயலிழப்புக்கு (நீரிழிவு நோய் முதலிடத்தைப் பிடிக்கும்) இரண்டாவது முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம். மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே ஒருவித சிறுநீரக சேதத்துடன் வாழ்கின்றனர், மேலும்…
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 7-2 என்ற கோல் கணக்கில் எஸ்.எம்.நகர் அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணி சார்பில் ஆனந்த், சதீஷ் ஆகியோர் தலா இரு கோல்களையும், ஸ்டாலின் அபிலாஷ் சோமன்னா, ஆர்யன் உத்தப்பா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். தயான்ந்த் வீரன்ஸ் வருமானவரித்துறை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கிய படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். அடல்ட் காமெடி படமான இது, சிங்களத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘டென்டிகோ’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம், கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியானது. இது இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல இந்தி இயக்குநர் ஹன்சல் மேத்தாவும் முகேஷ் சாப்ராவும் இணைந்து இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ளனர். படத்தை ஹன்சல் மேத்தா இயக்குவார் என்று கூறப்படுகிறது.