டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு விவகாரத்தில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்பட 3 பேரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு,…
Author: admin
சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு, மின்சாரப் பேருந்துகளை ஜூன் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணி களை விரைவுபடுத்துமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சொகுசு வசதி தேவைப்படுவோருக்கு ஏற்பவும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். மின்சார பேருந்துகள் இயக்கப்படும் பணிமனையில் இருந்து டீசல் பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, இனி வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். இங்குள்ள பேருந்துகளை வெவ்வேறு பணி மனைகளு…
ஒரு வரலாற்று கண்டுபிடிப்பில், நாசாவைப் பயன்படுத்தும் விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) தொலைதூர இளம் நட்சத்திர அமைப்பில் படிக பனி நீரின் முதல் உறுதியான கண்டறிதலை உருவாக்கியுள்ளது. நமது சூரிய மண்டலத்தில் பனி நீர் பரவலாக இருக்கும்போது, உறைந்த நீர் அதற்கு வெளியே கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. இந்த கண்டுபிடிப்பு தொலைதூர கிரக அமைப்புகளின் ஒப்பனை மற்றும் வாழ்க்கையின் முக்கிய பொருட்களில் ஒன்றான தண்ணீரின் சாத்தியக்கூறுகள் பற்றிய முக்கியமான தடயங்களை அளிக்கிறது, இது பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு நமது புரிதலுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கலாம் கிரக உருவாக்கம் நமது கிரகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு என்ன தேவை.ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒரு தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி உறைந்த நீரைக் காண்கிறதுநேச்சர் இதழில் ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, எச்டி 181327 எனப்படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு வட்டமாக இருக்கும் தூசி வளையத்தில் பனி உள்ளது…
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் எளிதாக ஏமாற்றி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பிறகு கடந்த 7,8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை, இந்திய போர் விமானங்கள் பிரம்மோஸ், ஸ்கால்ப் உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் அழித்தன. இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் ட்ரோன், போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்க அந்த நாட்டின் விமான படை தளங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் லட்சியா என்ற ஆளில்லா ட்ரோன்கள் பாகிஸ்தான் விமான படை தளங்கள்…
சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர். சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரை ராஜ், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமை பண்பை பெற்று தரும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை…
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று செலுத்தும் செயற்கைக்கோள் மூலம் இரவுநேர கண்காணிப்பு திறன் அதிகரிக்க உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புதிய ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் 1,696 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இதனை விண்ணில் செலுத்தியது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரேடார் செயற்கைக்கோள் அனைத்து காலநிலையிலும் குறைந்த வெளிச்சத்திலும் பூமியின் மேற்பரப்பை தெளிவாக படம்பிடிக்கக் கூடியது. இது நாட்டின் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு திறனுக்கு மேலும் பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக…
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 14 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் நிதி தொடர்பான 4 மசோதாக்கள் உட்பட மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்நிலையில், துறைகளுக்கான நிதி ஒதுக்கம், மானிய கோரிக்கைகள்…
உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான ஒருவழி வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி, ஆப்கனிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை தரைவழியாக இணைக்கும் முக்கியமான அட்டாரி-வாஹா எல்லையை மத்திய அரசு மூடியது. இந்த சூழ்நிலையில், ஆப்கனிலிருந்து உலர்பழங்களை ஏற்றி வந்த 160 லாரிகள் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக வாஹா பகுதியைக் கடக்க பாகிஸ்தானும் அனுமதி வழங்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரின் ஆட்சி நடைபெறுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான இருதரப்பு உறவு…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்சே திவாரி, ரீனா தேவி தம்பதி, கடந்த 2019ம் ஆண்டு முதல், குடும்பத்துடன் சென்னை பல்லாவரத்தை அடுத்த கவுல் பஜார் வந்து தங்கி வருகின்றனர். தனஞ்சேதி வாரி அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் ஜியா குமாரி (16), கவுல் பஜார் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், ஜியா குமாரி 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்துள்ளார். குறிப்பாக தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று…
டாம் க்ரூஸின் மிஷன் சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. உள்ளூர் ஹீரோக்களுக்கு இணையாக இந்தியாவில் டாம் க்ரூஸுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய பெருமை ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களையே சாரும். 1996-ல் தொடங்கிய இந்த படவரிசை ஏறக்குறைய 34 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. முந்தைய பாகத்தில் என்டிடி எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்திடம் இருந்து உலகை காக்கும் பொருட்டு நடுக்கடலின் ஆழத்தில் கிடக்கும் செவாஸ்டோபோல் என்னும் நீர்மூழ்கியை தேடி ஈதன் ஹன்ட் (டாம் க்ரூஸ்) செல்வதுடன் முடிந்த கதை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இதில் தொடங்குகிறது. நீர்மூழ்கியில் இருக்கும் சோர்ஸ் கோட்-ஐ எடுத்து என்டிடியை தடுக்காவிட்டால் அது உலக நாடுகளின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இன்னொரு புறம் அதே சோர்ஸ் கோட்-ஐ கைப்பற்றி என்டிடியை கட்டுப்படுத்த நினைகும் வில்லன் கேப்ரியல். வில்லனை தடுத்து என்டிடியின் அட்டகாசங்களை ஹீரோ கட்டுப்படுத்தி மீண்டும்…
