Author: admin

மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு லைவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசிய பாபில் கான, “ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல், ஆதர்ஷ் கவுரவ், அர்ஜித் சிங் போன்றோரை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறது. பாலிவுட் மிகவும் மோசமானது” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. ஏற்கெனவே சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்தச் சூழலில் தற்போது பாபில் கான் வெளியிட்ட இந்த வீடியோ மீண்டும் இதனை தட்டி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. சில மணி நேரங்களில் இந்த வீடியோவை பாபில் கான் டெலிட் செய்துவிட்டார். பாபில்…

Read More

சென்னை: சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. மருத்துவமனையில் இதுவரை 2.69 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். 210 அறுவை சிகிச்சைள் நடந்துள்ளன. முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி பெற்று கொள்வதற்காக மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் குஜராத், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி, கோவா, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 41 மருத்துவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று சென்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு, சுகாதாரத்துறைக்கு மகுடம் சூடுவது போல இந்த…

Read More

இங்கே ரகசியம்: வரிசையில் வரிசையில் செல்லுங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு குழுவாக மட்டுமல்லாமல் கவனமாகப் பாருங்கள். 11 வது வரிசையில் எங்கோ (மேலே இருந்து எண்ணுகிறது), இடது புறத்தை நோக்கி, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். இது சரியான மையத்தில் இல்லை, இதுதான் தந்திரமானதாக ஆக்குகிறது. இது தீவிர வலதுசாரி-குறிப்பாக 11 வது வரிசையில், இடதுபுறத்தில் இருந்து 16 வது நெடுவரிசையை நோக்கி ஒரு பிட். இரண்டு 8 களைத் தொடர்ந்து “பி” இல்லை என்பதை நீங்கள் உணரும்போது அதைக் கண்டுபிடிப்பீர்கள்.

Read More

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடை திறப்பின்போது இந்திய ராணுவத்தினர் தெய்வீக ராகங்களை இசைத்து பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கினர். பத்ரிநாத் கோயில் நடை திறப்பு நிகழ்வில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநில பிரிவு தலைவர் மஹிந்திர பட் மற்றும் டெஹ்ரி எம்எல்ஏ கிஷோர் உபத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்ரிநாத் யாத்திரை பாதுகாப்பாகவும், சீரானதாகவும் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து இந்தாண்டுக்கான சார்தாம்…

Read More

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன். நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டில் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும். ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரிகிறோம். அவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் வெளியாவது என்பது ஒரு கனவு. படம் அனைவருக்கும் பிடிக்கும்போது அது ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்கவிடக்கூடாது என்பது போல சில விமர்சனங்கள் இருக்கின்றன. நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள்…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும்.…

Read More

நாங்கள் அனைவரும் அங்கு இருந்திருக்கிறோம் – ஆர்டர் செய்வது, கூடுதல் சமைப்பது, அந்த சுவையான வறுத்த அரிசியை அடுத்த நாள் சேமித்தல். ஆனால் அது பாதிப்பில்லாத மீதமுள்ள உணவு ஒரு நேர வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது? 2008 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு சோகமான வழக்கில், பேசிலஸ் செரியஸால் மாசுபடுத்தப்பட்ட அரிசி உட்கொண்டு ஒரு இளைஞன் திடீரென இறந்தான். பல நாட்கள் அறை வெப்பநிலையில் விடப்பட்ட வறுத்த அரிசியை தனிநபர் சாப்பிட்டிருந்தார். நுகர்வு சில மணி நேரங்களிலேயே, அவர் கடுமையான அறிகுறிகளை அனுபவித்து இறந்தார். இது “ஒரு இளம் வயதுவந்தோரின் திடீர் மரணம் பேசிலஸ் செரியஸ் உணவு விஷம்”கிளினிக்கல் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டது.”அக்டோபர் 1, 2008 அன்று, தக்காளி சாஸுடன் ஸ்பாகெட்டியின் எஞ்சியவற்றை சாப்பிட்ட பிறகு 20 வயது நபர் நோய்வாய்ப்பட்டார், இது 5 நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு அறை வெப்பநிலையில் சமையலறையில் எஞ்சியிருந்தது. பள்ளிக்குப் பிறகு, அவர்…

Read More

Last Updated : 05 May, 2025 06:30 AM Published : 05 May 2025 06:30 AM Last Updated : 05 May 2025 06:30 AM கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ஆகாய கப்பலை, டிஆர்டிஓ நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்தது. இது வானில் 17 கி.மீ உயரம் வரை பறந்தது. | படம்: பிடிஐ | புதுடெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய கப்பல் பரிசோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன், வானில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பல் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இந்நிலையில் அதேபோன்ற ஆகாய கப்பலை ஆக்ராவை சேர்ந்த ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டி) உருவாக்கியது.…

Read More

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ, ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கெதிரான ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத் கவுர் 21-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.

Read More