Author: admin

சென்னை: அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழக காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வோம்’ என்ற தலைப்​பில் அரசி​யல் மாநாடு சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காங்​கிரஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மாநாட்​டுக்கு தலைமை வகித்​து, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார். ‘ஒரு​மித்த குரலோடு, ஒற்​றுமை​யான கைகளோடு இந்​திய தேசத்தை பாது​காப்​போம்’ என்று உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர். மாநாட்​டில் கு.செல்​வப்​பெருந்​தகை பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்​டங்​கள் மக்​களுக்​கானது. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்​டங்​கள் அம்​பானிக்​கும், அதானிக்​கு​மானது. பாஜக ஆட்​சி​யில் 50 சதவீதத்​துக்கு மேல் தேசத்​தில் ஒவ்​வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்​தப்​பட்​டிருக்​கிறது. அரசி​யலமைப்பு சட்​டத்தை மாற்றி எழுத வேண்​டும் என்​பது தான் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் திட்​ட​மாகும். ஆனால் யார்…

Read More

கடந்த சில தசாப்தங்களாக, மருத்துவ அறிவியல் பல முனைய நோய்களுக்கு ஒரு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதில் இருந்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலிருந்து, நீங்கள் பார்க்கும் விதம், எடை மற்றும் எதுவுமில்லை என்பதை மாற்றுவதிலிருந்து பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கிரையோஃப்ரீசிங் மூலம், இறந்தவர்களை மீண்டும் கொண்டுவருவது குறித்து தொடர்ந்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் உள்ளன, அங்கு இறந்த உடல் பல ஆண்டுகளாக உறைவிப்பான் இடத்தில் வைக்கப்படுகிறது, இது ஒருநாள் மீண்டும் உயிருக்கு வரும் என்ற நம்பிக்கையுடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. எவ்வாறாயினும், இது ஒரு தொலைதூர கனவைப் போலவே இருக்கும்போது, ​​(மற்றும் இயற்கை அன்னை முடிவு செய்ததை சரிசெய்ய முயற்சிக்கிறோமா என்பதைப் பற்றி விவாதிக்கத் திறந்திருக்கும்), மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் உண்மையில் வாழ முடியும், அல்லது மாறாக, உண்மையில் நீண்ட நேரம் வரை முடியும் என்று நிபுணர்கள் இப்போது நம்புகிறார்கள். எப்படி என்று பார்ப்போம் …என்பது அழியாத தன்மை சாத்தியமா?நன்கு அறியப்பட்ட எதிர்கால நிபுணரான டாக்டர் இயன்…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது. ‘‘பாகிஸ்தான் படைகளின் தயார் நிலை குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், முப்படை தளைபதி ஆகியோர் தங்களின் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாக். ராணுவம் கூறியுள்ளது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், ‘‘பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

Read More

பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பிரேவிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.நடுவர் அவுட் என அறிவித்ததும், முதல் 15 விநாடிகளுக்குள் டிஆர்எஸ் ரிவியூவை பேட்ஸ்மேன்கள் செய்யவேண்டும். ஆனால், பிரேவிஸ் ரிவியூ செய்யாமல் ரன் எடுப்பதில் கவனமாக இருந்தார். அதன் பிறகு ஜடேஜாவுடன், பிரேவிஸ் ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து டிஆர்ஸ் ரிவியூ செய்ய பிரேவிஸ் முயன்றார். ஆனால், டிஆர்எஸ் ரிவியூ கேட்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று நடுவர் தெரிவித்தார். ஆனால், டி.வி. ரீபிளேவில் பார்த்த போது, பந்து லெக் சைடில் விலகிச் செல்வது தெரியவந்தது. இதனால் அவர் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. ஒருவேளை, முன்னதாகவே டிஆர்எஸ் ரிவியூ எடுத்திருந்தால் அவுட்டாவதிலிருந்து பிரேவிஸ் தப்பித்திருக்கலாம் என்றும், அதிரடியாக விளையாடக்கூடிய பிரேவிஸ் களத்திலிருந்தால் வெற்றி சிஎஸ்கே பக்கம் வந்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள்…

Read More

வாஷிங்டன்: வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது. இந்த செயல்முறையை தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். “அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன. எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்தப் புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும்…

Read More

சென்னை: குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ எனும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த மாநாடு ‘ரெட்டிகான் 2025’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் முன்னிலையில் மாநாடு நடைபெற்றது. வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, அகில இந்திய கண் மருத்துவ சங்க துணை தலைவர் மோகன் ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணர்கள் பற்கேற்று சிறப்புரையாற்றினர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்திய தலைவர் எஸ்.சவுந்தரி, விழிப்படிக -…

Read More

லேமன் மொழியில் உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம், தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது ஏற்படுகிறது. உலகளாவிய மட்டத்தில், இது 120/80 க்கு அப்பாற்பட்ட எந்தவொரு வாசிப்புக்கும் அமைக்கப்பட்டுள்ளது (சிஸ்டாலிக் அழுத்தம் (சிறந்த எண், இதயம் துடிக்கும்போது) மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் (கீழ் எண், இதயம் ஓய்வில் இருக்கும்போது), இது வயது, பாலினம், எடை போன்றவற்றால் பெரிதும் மாறுபடலாம் என்றாலும், “அமைதியான கொலையாளி” என அழைக்கப்படுவது மற்றும் நிலைமைக்கு வழிவகுக்காது, ஆனால் தனிநபர்களும் கூட ஏற்படலாம். கட்டுப்படுத்தப்படுகிறது.

Read More

இந்தூர்: ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி, உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் தேதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதால்…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார். நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.ஜேக்கப் பெத்தேல் 55, விராட் கோலி 62, தேவ்தத் படிக்கல் 17, கேப்டன் ரஜத் பட்டிதார் 11, ஜிதேஷ் சர்மா 7 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் களம்புகுந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு…

Read More

பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இந்தத் தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மிகவும் பழமையானவை. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததால் வெடிமருந்து தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவில்லை. அதனால் இங்கு உடனடியாக வெடிமருந்து பொருட்களை அதிகளவில் தயாரிப்பது சிரமம். பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி படையைத்தான் அதிகளவில் சார்ந்துள்ளது. அப்படைக்குத் தேவையான தளவாடங்கள் குறைவாக இருப்பது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு…

Read More