Author: admin

கசப்பான சுண்டைக்காயை யாரும் விரும்புவதில்லை, மிகச் சிலரே அதை உண்மையில் வீட்டிலேயே வளர்க்க விரும்புவார்கள். ஆனால், ஒரு உண்மையான தோட்டக்கலை ஆர்வலருக்கு இது மற்றொரு சவாலாக இருக்கும். செர்ரியை மேலே வைக்க, கசப்பான சுண்டைக்காய்கள் விதைகளிலிருந்து எளிதில் வளர முடியும். பால்கனியில் அதை வளர்க்க சில படிகள் இங்கே.

Read More

ஒரு துணிச்சலான ஸ்காட்டிஷ் ஜெனரலான மாக்பெத், காசோலைகள் மற்றும் நிலுவைகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வைக்கும் ஒரு கதை உள்ளது. குற்ற உணர்வு அவரை பைத்தியம் பிடிக்கும், சக்தி அவரை பசியடையச் செய்கிறது, மேலும் கொலை செய்வது அவரது அரசாட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வேலை போன்றது. ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’ ஐ 10 வாக்கியங்களில் விளக்க இங்கே முயற்சிக்கிறோம்.

Read More

‘வாடிவாசல்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக சூர்யா – வெற்றிமாறன் இணைப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு, சூர்யா மற்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளனர். அதற்கான முதற்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறனிடம் ‘வாடிவாசல்’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அந்த எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல. அந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. எனது ஒவ்வொரு படத்தை உருவாக்கும்போது எனது 100% உழைப்பைக் கொடுப்பேன்” என்று பதிலளித்துள்ளார் வெற்றிமாறன் தற்போது ஆர்.ஜே.பாலாஜி படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி படத்தை துவங்கவுள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.

Read More

சென்னை: தமிழகத்தில் மே., 18,19,20 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (மே.18) ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40…

Read More

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘கில்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்டாடப்பட்டு, படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை ரமேஷ் வர்மா கைப்பற்றி இருந்தார். இதில் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது சுமுகமாக முடியவடையவில்லை. தற்போது ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.…

Read More

மதுரை: பாசம், உணவு விஷயத்தில் மதுரை மக்கள் மாறமாட்டார்கள் என, நடிகர் விஷால் கருத்து கூறினார். நடிகர் விஷால் ரசிகர் மன்ற செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் என்பவரின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்தார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும். எங்கள் அம்மா வீட்டுக்குள் சேர்க்கமாட்டார். எங்கள் அம்மா கொடுத்த புடவையை அம்மனுக்கு கொடுத்து தரிசித்தேன். 2006-ல் ‘ திமிரு’ திரைப்பட படப்பிடிப்புக்கு பிறகு 19 ஆண்டுக்கு கழித்து தற்போது வந்துள்ளேன். மதுரை மக்கள் என்னை கைவிட்டுவிட மாட்டார்கள். நானும் மதுரைக்காரன் தான். நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. 6 மாதத்தில்…

Read More

கோவை: மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவது வார்ப்பட தொழில்துறை சிறப்பான வளர்ச்சியை பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் டிராக்டர், கார் துறைகளில் இருந்து பணி ஆணைகள் அதிகளவு பெறப்படுவதாக கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய உற்பத்தித் துறையில் வார்ப்படம் (casting) தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. உலக அளவில் மிக அதிகளவு வார்ப்படம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா கொண்டுள்ளது. நாடு முழுவதும் 5,000 வார்ப்படம் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் 9 மில்லியன் மெட்ரிக் டன் எடையிலான வார்ப்படம் உற்பத்தி செய்யப்படுகிறது. போதிய அளவு மூலப்பொருட்கள் இருப்பு, திறன்வாய்ந்த தொழிலாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேல் உள்நாட்டு சந்தையில் வார்ப்படம் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொழில் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுகுறித்து ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன்…

Read More

அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தி கோட்’. இதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவருடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அஜித், அக்‌ஷய் குமார், சிவகார்த்திகேயன் படங்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது மலேசியாவில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் வெங்கட் பிரபு. அதில் ‘தி கோட்’ படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படம் குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. முன்னதாக, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி இணைவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபு கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிடவே, ‘தி கோட்’ படத்தை ஏஜிஎஸ் தயாரித்தது. தற்போது சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி…

Read More

சென்னை: உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சர் ஹவுஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். விபத்து நடந்த இடம் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினார் அருகே இருக்கிறது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து குறித்து தெலங்கானா பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் இயக்குநர் ஜெனரல் நாகி ரெட்டி கூறுகையில், “குல்சார் ஹவுஸ் அருகில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் கடை மற்றும் வீடுகள் இருந்த கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மக்களை மீட்க தீயணைப்புத் துறை சுவாசக் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தின. இந்த கட்டிடத்தில் வெளியேறுவதற்கு 2 மீட்டர் அகலத்தில்…

Read More