ஹிசார்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் உளவாளி கும்பலின் தலைவராக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் கூறியதாவது: ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச் சிறிய வீட்டில் ஏழ்மையான சூழலில் வளர்ந்த ஜோதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். ஹிசாரில் பிஏ பட்டம் பெற்ற அவர் வேலை தேடி டெல்லி சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் கிடைத்தது. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் வேலையிழந்தார். இதன்காரணமாக அவர் மீண்டும் ஹரியானாவின் ஹிசாருக்கு திரும்பினார். அப்போதுதான் அவர் சமூக வலைதள பக்கங்கள் மீது கவனம்…
Author: admin
திருப்பூர்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த இந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள். பணி நேரத்தில் சீருடையுடன் சென்று தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதால், இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர்: திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், முகமது ரியாஸ் மற்றும் தொழிலாளர்களான சுந்தரராஜன்(60) உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை வழக்கம்போல நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களில் இருவர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுவிட்டனர். சிவசாமி என்பவர் வெளியே நின்று வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, பட்டாசு ஆலைக்குள் இருந்த வெடிகள் திடீரென வெடித்துச் சிதறின. இதைக்கண்ட சிவசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், கட்டிடத்துக்குள் இருந்த முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோருக்கு பலத்த காயம்…
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீன குருமூர்த்தங்களில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இன்று (மே 19) சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழா மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 15-ம் தேதியும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றன. இந்நிலையில், ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, தருமபுரம் ஆதீன திருமடத்தின் மேல வீதியில் உள்ள, மடத்தின் முந்தைய ஆதீனகர்த்தர்களின் குருமூர்த்தங்களில்…
சென்னை: மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி விவாகரத்து கூட்டணி போல போய் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி நல்ல குடும்பம் போல மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜக பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது என்றும், இண்டியா கூட்டணி பலம் இழந்த கூட்டணியாக இருக்கிறது என ப.சிதம்பரம் கூறுகிறார். ப.சிதம்பரம், சசி தரூர் என எதிர்கட்சிகளும் பாஜகவை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்ற குழுவை உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அனுப்புகிறார். அதில் ஒரு…
சென்னை: விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகளும் வந்துவிட்டன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றனர். காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற, கல்வி அனைவருக்கும் தரமானதாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். தமிழக அரசு மாநிலங்கள் முழுவதும் பள்ளி விடுமுறையின்போது கல்வி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மூலம் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, உரிய சான்று அளிக்க வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை இடித்து, புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பறையில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பாராமரிக்க வேண்டும்.…
சென்னை: அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து…
உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசு தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அரசின் ஆலோசனையின்படி, கடந்த 13-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று. இந்த குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாக குறிப்பிடவில்லை என்றாலும், தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம்.…
தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2022-ல் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மேலும், 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024-ம் ஆண்டு 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, 3.16 சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படும்…
நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்கள் தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் மே 18-ம் தேதி (நேற்று) விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 17-ம் தேதி காலை 7.59 மணிக்கு கவுன்ட்-டவுன் தொடங்கியது. திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் நேற்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.…
