தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், வடக்கு கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (மே 19), நாளையும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சேலம், திருப்பத்தூர்,…
Author: admin
புதுடெல்லி: துருக்கி, அஜர்பைஜான் வரிசையில் அமெரிக்க சுற்றுலாவுக்கான முன்பதிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரபல முதலீட்டாளர் பயண நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல முதலீட்டாளரும் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஜிகுவான்ட் இன்வெஸ்டெக் நிறுவனருமான ஷங்கர் ஷர்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேக் மை ட்ரிப், ஈஸ் மை ட்ரிப் உள்ளிட்ட அனைத்து பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் அமெரிக்க சுற்றுலாவுக்கான முன்பதிவை உடனடியாக நிறுத்த வேண்டும். நம்முடைய எதிரி நாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் ஒரு நாட்டுக்கு நாம் சுற்றுலா செல்லக் கூடாது” கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு துருக்கியும் அஜர்பைஜானும் ஆதரவு அளித்தன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வணிக ரீதியிலான தொடர்பையும் துண்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். இதனால், துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்வதற்காக மேக்மை ட்ரிப், கிளியர்…
அகமதாபாத்: முதல்முறையாக பாகிஸ்தானுக்குள் புகுந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானை அச்சமடையச் செய்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். குஜராத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்திநகர் மாவட்டம் கோலாவாடா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசியதாவது: மோடி பிரதமராவதற்கு முன்பு, நாட்டில் தீவிரவாத தாக்குதல் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடந்து வந்தது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நமது வீரர்களை தொடர்ந்து கொன்றனர். நமது நகரங்களில் குண்டு வைத்தனர். சதி செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். அப்போது வலுவான பதிலடி கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் உரி, புல்வாமா மற்றும் பஹல்காமில் 3 தீவிரவாத தாக்குதல் நடைபெற்றன. உரி தாக்குதலுக்குப்பின் நாம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தினோம். புல்வாமா தாக்குதலுக்குப்பின் விமான தாக்குதல் நடத்தி…
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் 23-ம்தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறியதாவது: நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி, எனக்காகச் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருவர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. இதில் நாயகியாக நடித்துள்ள ருக்மணி திறமையான நடிகை. பப்லு இதில் நல்ல ரோல் செய்துள்ளார். யோகிபாபு இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில்…
சென்னை: பாசன பரப்பு, பால், முட்டை உற்பத்தி அதிகரிப்பு என வேளாண் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5 வேளாண் பட்ஜெட்கள் அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் சராசரியாக 1.36% ஆக இருந்த வேளாண் வளர்ச்சி, தற்போது 5.66% ஆக உயர்ந்துள்ளது. திமுக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்களால், கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தை எட்டியது. பாசனம் பெற்ற நில பரப்பு 36.07 லட்சம் ஹெக்டரில் இருந்து 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உணவு பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன. 5,427 கி.மீ. நீளத்துக்கு சி, டி பிரிவு…
ஏராளமான பெண்கள் தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளில் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை கடந்து செல்கிறார்கள், தீங்கற்றதாக இருந்தாலும், வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஒழுங்கற்ற காலங்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், வைட்டமின் டி குறைபாட்டிற்கும் இந்த ஃபைப்ராய்டுகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க முடியும் என்று புதிய ஆராய்ச்சி இப்போது கூறுகிறது? இந்த நிலையைப் புரிந்துகொள்வதில் ஆழமாக தோண்டி எடுப்போம் …கருப்பை ஃபைப்ராய்டுகள் என்றால் என்ன?கருப்பை நார்த்திசுக்கட்டிகள், மருத்துவ ரீதியாக லியோமியோமாக்கள் அல்லது மயோமாஸ் என அழைக்கப்படுகின்றன, அவை புற்றுநோய் அல்லாத (தீங்கற்ற) வளர்ச்சியாகும், அவை கருப்பையின் மென்மையான தசை செல்களிலிருந்து உருவாகத் தொடங்குகின்றன. அவை திடீரென அல்லது காலப்போக்கில் பரவக்கூடும், மேலும் அவை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம், எண்ணிக்கையில் மாறுபடும், மேலும் பல மாதவிடாய் இரத்தப்போக்கு, இடுப்பு வலி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல நாடுகளில் கருப்பை நீக்கம் (கருப்பையை அறுவை சிகிச்சை அகற்றுதல்),…
பூஞ்ச்: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மீட்கப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று செயலிழக்கம் செய்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் பலர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர், 42 பேர் காயம் அடைந்தனர். வீடுகளும் சேதமடைந்தன. இந்நிலையில் இங்கு வெடிக்காத குண்டுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அவற்றை சேகரித்து செயலிழக்கும் செய்யும் பணி பூஞ்ச் மாவட்டத்தின் ஜுல்லாஸ், சலோட்ரி, தராத்தி மற்றும் சலானி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 42 குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்கம் செய்தனர்.
லக்னோ: ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. லக்னோவிலுள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. லக்னோ அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே, இன்றைய ஆட்டம் லக்னோ அணிக்கு மிவும் முக்கியமான ஆட்டமாகும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு மோசமான நிலையில் உள்ளது. எனவே, அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை எய்டன் மார்கிரம், நிக்கோலஸ் பூரன்,…
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது: நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.8,560 கோடி நிதியுதவி அளிக்க ஐஎம்எப் ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், அடுத்த கட்ட நிதி தொகுப்பை விடுவிப்பதற்கு பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகளை ஐஎம்எப் விதித்துள்ளது. 1. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். 2. 17.6 டிரில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும். 3. ஆண்டுக்கு 2 முறை…
எம்.ஜி.ஆர் நடித்த மன்னர் கதையை கொண்ட படங்களில் ஒன்று, ‘அரச கட்டளை’. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் கதை இலாகா உருவாக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, கவுரவ வேடத்தில் நடித்தார். சத்யராஜா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி,ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், சி.டி.ராஜகாந்தம், ஃபிரண்ட் ராமசாமி, அசோகன், மாதவி, சந்திரகாந்தா, சகுந்தலா, குண்டுமணி என பலர் நடித்தனர். பி.எஸ்.வீரப்பாவுக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும் கவுரவ வேடம் என்றாலும் முக்கியமான கதாபாத்திரங்கள். டைட்டில் கார்டில் ‘அபிநய சரஸ்வதி’ என்று சரோஜாதேவிக்கும் ‘கவர்ச்சிக் கன்னி’ என்று ஜெயலலிதாவுக்கும் கேப்ஷன் வைத்திருந்தார்கள். குமரி நாட்டின் மன்னனான பி.எஸ்.வீரப்பாவுக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை. அமைச்சர் ஆர்.எஸ்.மனோகர் மக்களுக்கு அதிக வரி விதித்து வாட்டி வதைக்கிறார். மக்கள் கொந்தளிக்கின்றனர். புரட்சி குழு உருவாகிறது. அந்தக் குழுவின் இளைஞரான எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் நாட்டின் நிலைமையை மன்னனுக்கு எடுத்துக்கூற, மன்னன் அதிர்ச்சி அடைகிறார்.…
