Author: admin

பிரபல இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர், தமிழில் சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம் 2’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ‘ஹவுஸ் அரஸ்ட்’ என்ற நிகழ்ச்சியை ஆப் ஒன்றுக்காக நடத்தி வருகிறார். இதில் ஆபாசமான காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்பைச் சேர்ந்த கவுதம் ரவ்ரியா என்பவர் அளித்த புகாரையடுத்து அஜாஸ் கான் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜாஸ் கான் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும் ‘ஹவுஸ் அரஸ்ட்’ நிகழ்ச்சியில் வாய்ப்பு தருவதாகவும் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பை சார்கோப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

சென்னை: இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள்: சமீப காலமாக இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 நாட்டுப் படகுகள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனர். அவர்களின் ஜிபிஎஸ் கருவிகள், கைப்பேசிகள், வி.எச்.எப் உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், இயந்திர பாகங்கள், இன்வெர்ட்டர் பேட்டரிகள், அடுப்பு, சுமார் 470 கிலோ மீன்பிடி வலைகள், தங்கம் மற்றும்…

Read More

சென்னை: தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள், 2020-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020-ம் ஆண்டுக்கு பின்னும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.”…

Read More

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்து வந்தவர் கீதாலட்சுமி. கடந்த 2022-ல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து, பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக பதிவாளர் தமிழ்வேந்தன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேர்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.மோகன்ராம் ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்விக்கவுன்சில் சார்பாக புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி பி.ராமசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேலாண்மை குழு சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி முன்னாள் இயக்குநர் எஸ்.ராமநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்குழு தமிழ்நாடு வேளாண்மைப்…

Read More

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் பாதுகாவலர் துப்பாக்கியை வைத்தது குறித்த வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை திரும்புவதற்கு இன்று (மே 5) மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். பாதுகாப்பு கருதி போலீஸார் குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில், கருப்பு காரில் வந்து விமான நிலையத்தில் இறங்கிய விஜய் விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது காருக்கு அருகே நின்றிருந்த ஒருவர் கையில் சால்வையுடன் திடீரென ஓடி வந்தார். அவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, அந்த நபரை விஜய்யை நெருங்கவிடாமல் பாதுகாவலர்கள், பவுன்சர்கள் பாய்ந்து சென்று தடுத்தனர். பாதுகாவலர்களில் ஒருவர் அந்த நபரின் தலையில் கைத்துப்பாக்கியை எடுத்து வைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி…

Read More

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் தனது ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளது. எனினும், அதன் பொருளாதாரம் மிகவும் வலுவிழந்து உள்ளது. இந்தியா உடனான பதற்றம் காரணமாக பாகிஸ்தானின் ராணுவச் செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால், அதை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் அந்நாடு சிக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுடன் பதற்றம் அதிகரிப்பது பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், பாகிஸ்தானுடனான அதன் பொருளாதார உறவுகள் சிறிய அளவிலானவை என்பதாலும் இந்தியா…

Read More

அப்ஸ்டேட் நியூயார்க் சிறைக் காவலர் ஒரு கைதியின் 2024 ஐ அடிக்கும் மரணத்தில் படுகொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் (புகைப்படம்: ஆபி) ஒரு திருத்தம் செய்யும் அதிகாரி திங்கள்கிழமை மன் ஸ்லாட்டருக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார். கிறிஸ்டோபர் வால்ரத், 36, ஆறு காவலர்களில் ஒருவராக இருந்தார். உடிக்காவில் உள்ள மாநில நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது அவர் முதல் தர மனிதக் கொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மனு ஒப்பந்தம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனையைப் பெற வேண்டும் என்று கோருகிறது. நீதிபதி ராபர்ட் பாயரின் கேள்வியின் கீழ், வால்ரத் தான் ப்ரூக்ஸை அடித்து, அவரை ஒரு சோக்ஹோல்டில் வைத்து, அவரது உடலையும் இடுப்பையும் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். என்ன நடந்தது என்பது குறித்து புலனாய்வாளர்களிடம் பொய் சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது வால்ராத்தும் அவரது வழக்கறிஞரும் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு மனு ஒப்பந்தம் எடுக்க கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட…

Read More

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (மே 6) பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர்,…

Read More

பட வரவு: கெட்டி படங்கள் Iபல தேசிய உணவு வகைகள் மற்றும் காபி கலாச்சாரங்களைப் பற்றிக் கொள்வது போக்குகளுக்கு இணையாக இருப்பதற்கான ஒரு சகாப்தம், மக்கள் தங்கள் உடலுக்குள் எதை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அக்கறை கொள்வதை நிறுத்திவிட்டனர்.சந்தையில் எந்தவொரு புதிய சிற்றுண்டியும் முயற்சி அல்லது ஒரு டஜன் மதிப்புக்குரியது, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதில் என்ன பொருட்கள் உள்ளன.பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட 36 நாடுகளின் ஆய்வின்படி, அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது குப்பை உணவு ஆல்கஹால், புகையிலை அல்லது சூதாட்டத்தைப் போலவே போதைப்பொருளாக இருக்கலாம். “அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு அடிமையாதல்” 14% பெரியவர்களுக்கும் 12% குழந்தைகளிலும் நிகழும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான், “உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான” போதை பொருட்களின் பண்புகள் இருப்பதாக பெயரிடப்பட வேண்டும் என்று இப்போது அவர்கள் கோருகின்றனர்.இந்த உணவுகளுக்கு அடிமையாதல் மிகவும் மோசமான பசி, திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் மற்றும் தொடர்ச்சியான நுகர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.…

Read More

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கு வருகை தரும் முன்பாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தர் உடன் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நடத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரு தலைவர்களும் வலுவான பாகிஸ்தான் – ஈரான் உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். தெற்காசியாவின் தற்போதைய நிலைமை குறித்தும், அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, சிக்கலான பிரச்சினைகளை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவர்களின் இணைந்த உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஆக்கபூர்வமான ராஜதந்திர…

Read More