பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.…
Author: admin
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சக நீதிபதிகள் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அவர்களுக்கு நி்ரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீதிபதிகள் ஆர்.ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் பணிஓய்வு பெற்ற நிலையில், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி.பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி.சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணிஓய்வு பெறவுள்ளனர். இதன்காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக குறையும் நிலை உள்ளது. இந்நிலையில் கர்நாடக…
கோடை மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வெப்பம் தணிந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று வழக்கமான அளவில் இருக்கும். 7, 8, 9-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும்…
புதுடெல்லி/நியூயார்க்: நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும். போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள்…
‘ஸ்வயம் பிளஸ்’ கல்வி திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான 5 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் கல்வி திட்டத்தின்கீழ் இயற்பியலில் ஏஐ, வேதியிலில் ஏஐ, கணக்குப்பதிவில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் வித் ஏஐ, ஏஐ மற்றும் எம்எல் யூசிங் பைத்தான் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக 5 ஆன்லைன் படிப்புகளை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சேரலாம். ஏஐ தொடர்பான அடிப்படை விவரங்கள் தெரிந்திருக்க அவசியம் இல்லை. புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் இருந்தால் போதும். ஏஐ அறிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த கல்வி திட்டத்தின்…
சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில் (16865- 16866) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலிலும் (16101- 16102) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி ஜூலை 1-ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது. மேலும் நாகர்கோவில் – தெலங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில் (16353- 16354) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 5-ம் தேதி முதலும் சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் (20635- 20636) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 2-ம் தேதி முதல் இணைத்து இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே…
நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கருண் நாயர், டுப்ளெஸிஸ் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் கருண் நாயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். டுப்ளெஸிஸ் 3 ரன்களுடன் நடையை கட்டினார். அபிஷேக் பொரெல் 8, கே.எல்.ராகுல் 10, அக்சர் படேல் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, விப்ராஜ் நிகாம் 18, அஷுடோஷ் சர்மா 41, மிட்சல் ஸ்டார்க் 1 என 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி அணி. ஆனால் அதன் பிறகு மழை…
சென்னை: “தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக – பாஜக கூட்டணியால்தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் எல்லாமே விளம்பரமாக இருந்து கொண்டிருக்கிறது. அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பாராட்டு விழா நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனில் பல்கலைக்கழகங்கள் தலைமை கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்காக நடத்தப்படும் சோதனைகள், தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோரால் நன்றாக படிக்கும் மாணவர்களின் வாய்ப்பு பறிபோய்விடக்…
ஒரு எளிய 30 நிமிட தோட்டக்கலை அமர்வு-நடவு, தோண்டுதல், களையெடுத்தல் அல்லது நீர்ப்பாசனம்-150 முதல் 200 கலோரிகளுக்கு இடையில் எங்கும் எரிக்கலாம். ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் கலோரி விளக்கப்படத்தின் கூற்றுப்படி, ஒளி தோட்டக்கலை ஒரு மிதமான நடைப்பயணத்தின் கலோரி எரிப்புடன் பொருந்தக்கூடும், குறிப்பாக இது வளைத்தல், பானைகளை தூக்குதல் அல்லது இலைகளை அசைப்பது போன்ற இயக்கத்தை உள்ளடக்கியது.ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஜிம் உடற்பயிற்சிகளைப் போலன்றி, தோட்டக்கலை கை வலிமையை மேம்படுத்துகிறது, நீட்டிப்பதை ஊக்குவிக்கிறது, கார்டிசோல் (அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைக்கிறது. இது ஒரு வகையான இயக்கம், சிகிச்சையைப் போல உணர்கிறது, பயிற்சி அல்ல.
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே 04) நடைபெற்றது. இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு முன்பாக, மருத்துவ மாணவர்களுக்கு போலி கேள்வித் தாளை வழங்கியதாக பிஹாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சிலர் கேள்வித் தாள் வழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து எஸ்கே ஃபயாஸ் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவலின்படி இதில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றொரை செல்போனில் அழைத்து போலீசார் எச்சரித்துள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக சஞ்சீவ் குமார் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதே நபர் கடந்த ஆண்டு பிஹார் அரசு…
