Author: admin

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதாக சோனிபட் துணை காவல் ஆணையர் நரேந்தர் கடியன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜாதேதி சர்பஞ்ச் மற்றும் பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனித்தனியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ்…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின் மாற்றியை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களை மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மின் வாரியம் சார்பில் ஏராளமான மின் மாற்றிகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு கட்டுமானக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலும், வீட்டை விட்டு வெளியில் செல்வோரில் பலர் மின் மாற்றி அருகிலேயே சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மின் மாற்றிகள் அமைக்கப்பட்ட பகுதிகள் குப்பைக் கழிவுகளுடன், துர்நாற்றம் வீசி, மாநகரின் அழகுக்கும், பொது சுகாதாரத்துக்கும் சவாலாக இருந்து வருகின்றன. அங்கு குப்பை கொட்டும்போதும், இயற்கை உபாதை கழிக்கும்போது, அவர்களுக்கு மின்சாரம் தாக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் வடசென்னை…

Read More

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்படும் இந்த புத்தக பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிக மக்கள் வந்துசெல்லும் இடங்களில் முக்கியமானது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம். தவிர, இங்கு போதிய இடவசதியும் உள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில்…

Read More

புயலின் பல காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன அமெரிக்க மாநிலமான மிச ou ரியில் உள்ள ஒரு நகரமான கன்சாஸின் சில பகுதிகளையும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மாநிலமான கொலராடோவும் வலுவான சூறாவளிகளை அடித்து நொறுக்கியது, டஜன் கணக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியது மற்றும் குடியிருப்பாளர்களை மின்சாரம் இல்லாமல் விட்டுவிட்டது.கன்சாஸில், ஒரு சூறாவளி கிரின்னெல் என்ற சிறிய நகரம் வழியாக கிழிந்தது, 300 க்கும் குறைவான குடியிருப்பாளர்கள். NWKS வானொலியின் கூற்றுப்படி, சூறாவளி ஒரு தேவாலயத்திலிருந்து கூரையை கிழித்து, பல கட்டிடங்களை அழித்தது.மின்சாரம் செயலிழந்ததால் இன்டர்ஸ்டேட் 70 இன் ஒரு பகுதி மூடப்பட்டது, கன்சாஸ் போக்குவரத்துத் துறையின் லிசா மஸ்மேன் நியூயார்க் டைம்ஸ் கூறியது.கொலராடோவில், டென்வர் அருகிலுள்ள பகுதிகளில் பல சூறாவளிகள் பதிவாகியுள்ளன. ஒரு சூறாவளி பென்னட் நகருக்கு அருகில் குறைந்தது மூன்று முறையாவது தொட்டது, 17 கட்டிடங்களை சேதப்படுத்தியது – ஆறு வீடுகள் உட்பட – அரபாஹோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின்படி.டென்வரின்…

Read More

செப்டம்பரில் ‘எஸ்.டி.ஆர் 51’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். ராம்குமார் இயக்கத்தில் சிம்பு, சந்தானம், கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய நடிப்பில் 50 மற்றும் 51-வது படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. தற்போது தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கலந்து கொண்டார். அவரிடம் ‘எஸ்டிஆர் 51’ குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அர்ச்சனா “முதலில் அஸ்வத் மாரிமுத்து சிம்பு படத்தை இயக்குவதற்குதான் ஒப்பந்தமானார். ஆனால், சிம்பு தேதிகள் இல்லாத காரணத்தினால் அப்படம் தாமதமானது. இந்தக் கதையை ஏஜிஎஸ் தான் பண்ண வேண்டும் என்று அஸ்வத்திடம் கூறிவிட்டேன். சிம்பு ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். இதன் நாயகி முடிவாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்புகள் வெளியாகி, செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. இதன்மூலம் முதலில்…

Read More

சென்னை: தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை காலத்தில் பேரிடர் முகாம்கள்…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் செய்தியை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில், பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், யூசுப் பதானோ அல்லது திரிணமூல் காங்கிரஸின் வேறு எம்பிக்கள் யாருமோ அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற மாட்டார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பாஜக அல்லாத கட்சிகள் என்று வரும்போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக…

Read More

இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று மாட்லி நகரில் உள்ள தனது வீட்டை விட்டு சைஃபுல்லா வெளியே வந்தபோது, ​​சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐஎஸ்சி) தாக்குதல், 2006ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீதான தாக்குதல் மற்றும் 2008ஆம் ஆண்டு ராம்பூரில் நடந்த சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல் ஆகிய மூன்று மிகப்பெரிய தாக்குதல்களில் சைஃபுல்லா ஒரு முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மூன்று வருட இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இவை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நேபாளத்தில் வினோத் குமார் என்ற புனைப்பெயரில்…

Read More

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று (மே/19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது. கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,000 கன அடிக்கு மேல் இருந்தது. இது நேற்று 4,764 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. மேட்டூரில் மட்டும் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் ஒரே நாளில் நேற்று 100.6 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர்…

Read More

புதுடெல்லி: சமீபத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களின்போது பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில் பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படை எப்படி காப்பாற்றியது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலின் போது, ​​இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்களை ஆயுதப் படைகள் துணிச்சலுடன் பாதுகாத்தன. இந்த மோதலின்போது இந்தியாவின் முக்கிய கட்டிடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வகையான வான் தாக்குதல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும், பஞ்சாப் நகரங்களையும் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு காப்பாற்றின என்பதற்கான ஒரு செயல் விளக்கத்தை ராணுவம் காட்சிப்படுத்தியது. இதுகுறித்து 15-ம் காலாட்படை பிரிவின் கட்டளை பொது அதிகாரி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், “உளவுத்துறையிலிருந்து பெறப்பட்ட…

Read More