Author: admin

மதுரை: மாநகராட்சி கடைகளுடைய வாடகையை அதன் உரிமையாளர்கள் நிலுவையில்லாமல் உடனுக்குடன் எளிமையாக செலுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் முன் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 100 வார்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 3,378 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகளை கால நீட்டிப்பு செய்வதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, கடை உரிமையாளர்கள், புதுப்பித்தல் படிவத்தை நிரப்பி, உண்மையான கடை உரிமையாளர்தானா என்பதற்கான ஆதார் கார்டு போன்ற உரிய ஆதாரங்களை சமர்பித்து கடைகளுடைய சதுர அடி அடிப்படையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில், இந்த கடைகளை முறையாக புதுப்பித்துக் கொள்ள கடை உரிமையாளர்களும் ஆர்வம் காட்டாததோடு, மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கடைகளை உள் வாடகைக்குவிடுவது, கடை உரிமையாளர்கள் மரணமடைந்த பிறகு அந்த கடைகளை கைப்பற்றுவதில்…

Read More

வேறுபாடு புதிர்களைக் கண்டுபிடி உங்கள் இலவச நேரத்தை ஒரு மனப் பணியாளர்களை வழங்கும் மற்றும் உங்கள் கவனிக்கக்கூடிய திறனை சோதிக்க ஒரு சுவாரஸ்யமான மற்றும் எளிய வழியாகும். இந்த புதிர்களில் உள்ள இரண்டு படங்களும் முதல் பார்வையில் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, ஆனால் நெருக்கமான பரிசோதனையின் போது, ​​பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட சில சிறிய மாறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள்.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் இந்த புதிர்களைத் தீர்ப்பதை அனுபவிக்க முடியும், மேலும் அவை எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும்.அடுத்த சவாலுக்கு நீங்கள் தயாரா? குறிப்புகளைத் தேடும் துப்பறியும் இந்த இரண்டு படங்களையும் உற்று நோக்கவும். அவற்றின் ஆரம்ப ஒத்த தோற்றம் இருந்தபோதிலும், அவர்களுக்கு மூன்று நுட்பமான மாறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நாற்பத்தொன்று வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இதை முயற்சி செய்து, உங்கள் கண்கள் எவ்வளவு கூர்மையானவை என்பதைப் பாருங்கள்!நீங்கள் மிகச்சிறிய விவரங்களைக் காண்கிறீர்களா மற்றும் அறையில்…

Read More

புதுடெல்லி: ரூ.6,200 கோடிக்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி வழக்கின் பணமோசடி குற்றச்சாட்டில் யூகோ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) திங்கள்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது. கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (CSPL) நிறுவனத்துக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கில், சுபோத் குமார் கோயல் கடந்த 16-ம் தேதி புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மே 17-ல் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மே 21-ல் அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் கோயல் மற்றும் சிலரின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சிஎஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.6,210.72 கோடி வட்டி இல்லாமல் கடன்களை ‘ஒப்புதல்’ செய்ததில் பணமோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…

Read More

‘தனி ஒருவன் 2’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா மேடையேறினார்கள். அவர்களிடம் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன் ராஜா “‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா, “மோகன் ராஜா சாரிடம் பேசினால் 4 கதைகள் சொல்வார். ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ‘தனி ஒருவன் 2’ பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட…

Read More

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக…

Read More

புகைப்படம்: மெரினா வின்பெர்க்/ இன்ஸ்டாகிராம் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் கோபமாக உள்ளன. இந்த எளிய, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவை ஒரு நபரின் உண்மையான தன்மையை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.எப்படி? சரி, இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட விசித்திரமான படங்கள், அவை வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக தோன்றும். அவர்களில் ஒருவர் முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கிறார் என்பதன் அடிப்படையில், படங்கள் ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மெரினா வின்பெர்க் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் பகிரினார். முதலில், ஒரு நபர் இந்த படத்தில் உள்ள மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும்- ரீட்ஸ், ஒரு ஸ்வான் அல்லது ஒரு பெண். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, நீங்கள்…

Read More

புதுடெல்லி: மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மாநில டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மத்தியப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச கேடரில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு உறுப்பினர்களில் யாரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு விசாரணைக் குழு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின்…

Read More

‘பகவந் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் கைப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இதனை படக்குழு மறுக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்குமோ என கருதப்பட்டது. தற்போது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழு கைப்பற்றியதன் காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. ‘பகவந்த் கேசரி’ படத்தில் பள்ளி குழந்தைகள் மத்தியில் பாலகிருஷ்ணா பேசுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அதில் ‘குட் டச், பேட் டச்’ குறித்து நீண்ட வசனம் ஒன்றை பேசியிருப்பார் பாலகிருஷ்ணா. அந்த ஒரு காட்சிக்காகவே ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘ஜனநாயகன்’ படக்குழு. இப்படத்திலும் இதே போன்று ஒரு காட்சி இருப்பதால், பட வெளியீட்டு சமயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதே இதற்கு காரணம். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில்…

Read More

சேலம்: கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் – சேலம்- அரக்கோணம் ரயில் சேவை, 12 நாட்களுக்குப் பின்னர் நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது. சேலம்- அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலின் சேவை, கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 12 நாட்களாக இயக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம்- அரக்கோணம் இடையிலான ரயில் சேவை நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணம்- சேலம் (எண். 16087) பயணிகள் ரயிலானது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் நாளை அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை காலை 10.50 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில், சேலம்- அரக்கோணம் (எண்.16088 ) பயணிகள் ரயிலானது, நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு,…

Read More

புதுடெல்லி: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெங்காயத் தாமரை எனப்படும் ஆகாயத் தாமரையை (Water hyacinth) அகற்றுவதை 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நடவடிக்கையாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நீர்நிலைகளை பாதிக்கும் நீர்வாழ் களையான ஆகாயத் தாமரையை அகற்றுவதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் அனுமதிக்கப்படும் பணிகளின் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த…

Read More