கோத்தகிரி: கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கோட நாடு எஸ்டேட் பங்கு தாரருமான சசிகலா வந்தார். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் எஸ்டேட் நுழைவு வாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நின்று அவரை வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது: “மக்களுக்கான ஆட்சியை வழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கோட நாட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதன் காரணமாகவே கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பூமி பூஜை செய்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரினோம். ஆனால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் மணி மண்டபம் கட்டுவதற்கு திமுக அரசு தடை…
Author: admin
புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு எல்லாம் இடம் கொடுப்பதற்கு இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது. புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது. புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்று அவர் கூறினார். உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? – இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ…
இந்த வாரம் மூன்று மரண தண்டனை கைதிகளை நிறைவேற்ற எங்களுக்கு (புகைப்படம்: ஆபி) ஒரு வசதியான கடை தொழிலாளியை தீ வைத்துக் கொள்வதன் மூலம் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவர் செவ்வாயன்று டெக்சாஸில் கொல்லப்பட வேண்டும், இந்த வாரம் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று மரணதண்டனைகளில் ஒன்றாகும்.49 வயதான மத்தேயு ஜான்சன், 76 வயதான பாட்டியான நான்சி ஹாரிஸின் 2012 கொலைக்கு டெக்சாஸ் மாநில சிறைச்சாலையில் ஆபத்தான ஊசி மூலம் இறப்பார்.ஹாரிஸில் இலகுவான திரவத்தை ஊற்றுவதாகவும், டெக்சாஸின் கார்லண்டில் உள்ள ஒரு கடையின் அதிகாலை கொள்ளையின்போது அவரை அமைத்ததாகவும் ஜான்சன் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.ஹாரிஸ் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார் மற்றும் ஐந்து நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை ஆதரவைக் கழற்றினார்.ஜான்சனின் மரணதண்டனை செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட இரண்டில் ஒன்றாகும்.2009 ஆம் ஆண்டு முதல் மத்திய மேற்கு மாநிலத்தில் நடந்த இரண்டாவது மரணதண்டனையில் 2000 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி பில் டோனி கொலை செய்யப்பட்டதற்காக 45…
பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு பின்பற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் பராமரிப்புப் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, வல்லக்கடவு வனச் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் கேரள அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று கேரள அரசு உரிய ஒப்புதலை அளிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மனோகரன் கூறும்போது, “உச்ச…
சென்னை: மின்கம்பம் மேல் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனே மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது. சென்னையில் வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும், மற்ற இடங்களில் மின்கம்பங்கள் மேலம் செல்லும் மின்கம்பிகள் மூலமாகவும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. மழை, பலத்தக் காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. அப்போது, மின்விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததும் அதற்கு மின்சாரம் வரும் மின்மாற்றிகளில் (டிரான்ஸ்ஃபார்மர்) இருந்து தானாகவே மின்விநியோகம் துண்டிக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு மின்வாரியம் முடிவு செய்தது. இதுதொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், யானை வழித் தடங்களில் மின்கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் மின்விபத்தைத் தடுக்க அங்குள்ள மின்மாற்றிகளில், மின்சாரம் செல்வதை உடனடியாக தானியங்கி…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம் மிஸ்ரி இன்று விளக்கம் அளித்தார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜகவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் எப்போதும்போல வழக்கமான களத்தில்தான் நடந்தது. அண்டை நாட்டிலிருந்து அணு ஆயுதப் பயன்பாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு என்பது இரு தரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த மோதலில் சீன தளங்களை பாகிஸ்தான்…
புதுச்சேரி: துணைநிலை ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது எனக்காக கேட்பதில்லை. வரும் கால தேவை என்பதால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் திட்டங்களை கேட்டு பெறுகிறோம். அமைச்சர்கள் இதற்காக டெல்லி சென்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகிறார்களே என கேட்டபோது, “கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி…
புதுடெல்லி: ‘140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கெனவே போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் ‘தர்மசாலை’ (இலவச தங்குமிடம்) அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக, இலங்கைத் தமிழரான மனுதாரர் 2015-இல் கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுததும் ‘யுஏபிஏ’ (UAPA) சட்டத்தின் கீழ் 2018-இல் விசாரணை நீதிமன்றத்தால் அந்த நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அவரது சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாகக் குறைத்தது. மேலும், அவரது சிறைத் தண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மூன்று வருடங்களாக அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர், இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் உச்ச…
சென்னை: ஜூலை மாதம் நடைபெறவுள்ள 10, 11ம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மார்ச் – ஏப்ரலில் நடந்த 10, 11ம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள தனி தேர்வர்களிடம் இருந்து துணை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. துணை தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள் அரசு தேர்வு துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள…
பழநியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி அடுத்த நெய்க்காரபட்டி அருகேயுள்ள க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தோம். அப்போது, கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என்பதும், ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரிய வந்தது. ஓலைச் சுவடியின் மேல் ‘ராமக் குடும்பன்’ என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இவர் உலக நீதியை பிரதி எடுத்து எழுதியவராகவோ அல்லது ஓலைச்சுவடியின் அந்தக்கால உடமையாளராகவோ இருந்திருக்க வேண்டும். உலகநீதி எனும் நீதி நூலை இயற்றிய உலகநாதர் என்பவர் முருக வழிபாடுடைய சைவப் புலவர். திருவாரூரைச் சேர்ந்தவராக அறியப்படும் இவர் இயற்றிய நீதிபோதனைப் பாடல்கள் ‘உலகநீதி’ எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. 13 விருத்தப் பாடல்களில் இவை…
